Posts

Showing posts from August, 2020

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

சி.ஐ.எஸ்ஸின் மூலோபாய ஆய்வாளர் டாக்டர் அதர் ஜாஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன் இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் இந்த வாரம் நடந்தேறியது.  பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு கட்டமாக, இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதே இந்தக் குழுக்களின் நோக்கம். இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மற்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். சர்வதேச அளவில் தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் பயண கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் வழியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருதரப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், வர்த்தக முன்னுரிமை ஒப்பந்தம், விவசாய விளைபொருட்களுக்கான பரஸ்பர சந்தை ...

சூடு பிடிக்க துவங்கியிருக்கும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தல்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் ரெக்டர் பேராசிரியர் சிந்தாமணி மகாபாத்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் கொரொனா பெருந்தொற்றானது உலகெங்கிலும் ஏறத்தாழ 200 நாடுகளுக்கும் மேலாக அங்கு வசிக்கும் பல கோடி மக்களின் வாழ்க்கை, சமூக உறவுகள் மிக முக்கியமாக அவர்களின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், அவ்வப்போது தேர்தல்கள் என்பதை ஆட்சிமுறையின் முக்கிய பகுதியாக கொண்ட ஜன நாயக நாடுகளின் அரசியலையும், அரசியல் செயல்பாடுகளையும் இந்த பெருந்தொற்றானது பாதித்திருப்பது குறிப்பிடதக்கது. உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும், நெகிழ் திறன் உடையதும், பெரும் பணக்கார ஜன நாயக நாடாக அமெரிக்கா திகழ்கிறது என்பது இங்கு அடிக்கோடிட்டு காட்டவேண்டிய ஒன்றாகும். இத்தகைய சக்திவாய்ந்த ஜனனாயகமாக திகழும் அமெரிக்காவும் இந்த பெருந்தொற்றால் அரசியல் செயல்முறைகளில் இடையூறு உட்பட பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் அமெரிக்கர்கள் புதிய அதிபர் ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர். சில சமயங்களில், அதிபராக இருப்பவரையே மற்றுமொரு நான்காண்டு காலத்திற்கு மீண்டும் அதி...

பஜ்வாவின் சவுதி பயணம் - பிளவுகளை இணைக்க, வேறுபாடுகளை களைய முயற்சி

பாகிஸ்தான் பகுப்பாய்வாளர் முனைவர் ஸைனப் அக்தர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்  கடந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் காரண்மாக பாகிஸ்தானின் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு கொள்கைகள் பெரும் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. காஷ்மீரை தனது வெளி நாட்டு கொள்கையின் மைய பொருண்மையாக பாகிஸ்தான் கொண்டுள்ளதால், அங்கிருக்கும் தெஹ்ரீக்-இன்சாஃப் அரசானது கஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பெரும் ப்ரச்னையாக உருமாற்றி காட்டுவதற்காக பகீரத ப்ரயத்தனம் அனைத்தையும் செய்து பார்த்தது. முக்கியமாக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பான ஓஐசி கஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க உயர்மட்ட கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யும் என்று பாகிஸ்தான் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தது. இஸ்லாமிய நாடுகளில் மிக முக்கியமான நாடாகவும், அவற்றின் மையமாக சவுதி அரேபியா விளங்கிவருவதோடு, ஓஐசி அமைப்பில் மிக அதிக செல்வாக்குடைய நாடாகவும் இருந்து வருகிறது. சவுதி அரேபியாவை தனது பக்கமாகவும், தனக்கு பட்சமாகவும் வைத்திருக்க பாகிஸ்தான் எப்போதுமே முயன்று வந்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் வெளி...

ஏறுமுகத்தில் இந்தியா பங்களாதேஷ் உறவுகள்

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, பிரதமர் மோடியின் செய்தியை எடுத்துச் சென்றார் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா. பிரதமர் ஷேக் ஹசீனா அவரை தனிப்பட்ட முறையில் வரவேற்றார். COVID19 தொற்றுநோய் பரவிய பல மாதங்களுக்குப் பிறகு அவரை சந்திக்க வந்த முதல் வெளிநாட்டு பிரமுகர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஆவார். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பரிமாற்றங்கள் அனைத்தும் மெய்நிகர் கூட்டங்கள் மூலமே நடத்தப்பட்டன. கொரொனா பெருந்தொற்றால் தெற்காசிய பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாஹ்ரியர் ஆலம் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் மசூத் பின் மோமன் ஆகியோரையும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சந்தித்தார். இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளருக்கும் வங்கதேசப் பிரதமருக்கும் இடையிலான ஒரு மணி நேர சந்திப்பின் போது, ​​இரு நாடுகளும் தற்போ...

வலுவாகும் இந்திய – ஐக்கிய அரபு அமீரக செயலுத்தி உறவுகள்

மேற்காசிய விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மொஹம்மத் முத்தாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அமைதி மற்றும் வளமையை நோக்கிய பாதையில் பயணிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இளவரசர் மொஹமத் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் தலைமையில், இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கணிசமாக முதலீடு செய்துள்ளன. கூட்டு ஆணையக் கூட்டங்கள் போன்ற இருதரப்பு வழிமுறைகள் மூலம் விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்துக்கான உறவுகளை உயர்த்த இரு நாடுகளும் உழைத்து வந்துள்ளன.  வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா-ஐக்கிய அரபு அமீரக கூட்டுக் கூட்டத்தின் 13 வது அமர்வு மெய் நிகர்க் கூட்டமாகக் கூடியது. இதற்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தலைமை...

சிசிபி தலைமைகளின் செல்வத்தை மறைப்பதற்காகக் குழப்பத்தை ஏற்படுத்தும் ஹாங் காங்கின் புதிய பாதுகாப்புச் சட்டம்

(பிரசார் பாரதியின் ஆலோசனை ஆசிரியர்(டிஜிட்டல்) சித்தார்த்த ராய் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்) சீன உயரடுக்கு, குறிப்பாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி(சிசிபி) தலைமையின் உயர்மட்டத்தினர், நீண்ட காலமாக தங்கள் பணத்தையும் சொத்துக்களையும் ஹாங்காங்கில் வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது அவர்களின் நிதி ஆதாயங்களை பிரதான நிலப்பரப்பிலிருந்து பாதுகாக்கிறது. நியுயார்க் டைம்ஸ் புலானாய்வு சீன மக்களின் பார்வையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 'ஹாங்காங்கின் தலைவிதியைக் கட்டுப்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் உயரடுக்கினரின் சொகுசு வீடுகள்' என்ற தலைப்பில் நியுயார்க் டைம்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஹாங்காங்கின் சர்வதேச வணிகத்தின் நிதி நிலப்பரப்பைப் பயன்படுத்தி சிசிபி தலைமைகளின் உறவினர்கள் தங்கள் சொந்த இலாபத்திற்காகப் பெரும்செல்வத்தை குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிசிபியின் முதன்மையான நான்கு பேரில் மூவரின் நெருங்கிய உறவினர்கள் ஹாங்காங்கில் சொகுசு ரியல் எஸ்டேட்டில் 51 மில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளைக் கொண்டுள்ளனர். ஹாங்காங்கில் பெரும் சொத்துக்கள் மற்றும் முதலீடுகள...

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

(மனோகர் பாரிக்கர்-ஐ.டி.எஸ்.ஏ தெற்காசிய மையத்தின் முதுநிலை புலமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆஷோக் பெஹூரியா எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்) இந்தியா 370ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்த முதலாமாண்டு நினைவு நாளில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், 2020 பிப்ரவரி தொடக்கத்தில் காஷ்மீர் குறித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) வெளியுறவு அமைச்சர் (சி.எஃப்.எம்) மன்றத்தின் கூட்டத்தை ‘ஏற்பாடு’ செய்வதில் பாகிஸ்தானுக்கு உதவாததற்கு சவுதி அரேபியாவைப் பொறுப்பேற்க அழைத்துள்ளார். காஷ்மீர் குறித்த சி.எஃப்.எம் கூட்டத்தை ஓ.ஐ.சி கூட்டாவிடில், “காஷ்மீர் பிரச்சினையில் அதனோடு நின்று, ஒடுக்கப்பட்ட காஷ்மீர் இஸ்லாமியர்களை ஆதரிக்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் கட்டாயப்படுத்தப்படும்” என்று குரேஷி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். "காஷ்மீர் பிரச்சினையில் முக்கியப் பங்கை வகிக்க இன்று மக்கா மற்றும் மதீனாவுக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருக்கும் பாகிஸ்தான...

வளர்ச்சியை நிலைநிறுத்தும் இந்தியா-பெலாரஸ் உறவுகள்

(சிஐஎஸ் மூலோபாய ஆய்வாளர் முனைவர் இந்திராணி தாலுக்தார் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்) பெலாரஸின் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 2020 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 26 ஆண்டுகளுக்கும் மேலாக பெலாரஸின் அதிபராக இருந்து வருகிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, தலைநகர் மின்ஸ்க் மற்றும் பிற இடங்களில் குடிமக்கள் தங்கள் அதிருப்தியைக் காட்ட வீதிக்கு வந்தனர். இருப்பினும், தேர்தல் முடிவுகள் இந்தியாவிற்கும் பெலாரஸுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பெலாரஸுடனான இந்தியாவின் உறவுகள் மரபுரீதியாக சுமூகமாக இருந்துள்ளன. சோவியத் யூனியன் பிரிந்த பின்னர் 1991இல் பெலாரஸை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த முதன்மையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் பல்வேறு விசயங்களில் நல்ல புரிதலையும் பொதுவான கருத்துக்களையும் வளர்த்துக் கொள்ள உதவியது. ஐ.நா.பாதுகாப்புக் குழு (யு.என்.எஸ்.சி) மற்றும் அணுசக்தி வழங்குநர் குழு (என்.எஸ்.ஜி) போன்ற பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ...

ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சு வார்த்தை நடவடிக்கை பிராந்திய அதிகாரமயமாக்களாக ஆகி விடக்கூடாது

ஆப்கானிஸ்தான், தாலிபான் மற்றும் அமெரிக்காவிடையிலான அமைதி பேச்சு ஆரம்பமாகும் என்ற நம்பிக்கை தற்போது பிரகாசமாகியுள்ளது. இந்த மாதம் 7 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரை காபூலில் நடைபெற்ற மூன்று நாள் பிரமாண்ட பேரவை (LOYA JIRGA) கூட்டத்தின் மூலம் இது தெளிவாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மீதமுள்ள 400 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. தாலிபான்களுக்கு வழங்கப்பட்ட இந்த சலுகை மூலம் அமைதிக்கான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று நம்பப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தோஹாவில் தாலிபான் மற்றும் அமெரிக்காவிடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின் பின்னணியில் இந்த நடவடிக்கையை பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த உடன்படிக்கையின் படி அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் சிறையிலுள்ள தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்து ஆறு மாதங்களில் ஐயாயிரம் தாலிபான் கைதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்தது. மீதம் 400 கைதிகள் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் கொடுங்குற்றங்கள் செய்தவர்கள் என்று கூறி அதிபர் அஷ்ரப் காணி (ASHRAF GHANI) மறுத்து வந்தார். இறுதியில் தாலிப...

இந்தியா - ஜப்பான் பொருளாதார கூட்டாளி த்துவம் அதிகரிக்கின்றது.

இந்தியாவின் பிரத்தியேக முதலீட்டு மன்றத்தின் மூன்றாவது பதிப்பு -- அதாவது ஜப்பான் பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டிற்க்கு இடையே உள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும், COVID 19 தாக்கத்தால் பொருளாதாரம் தற்பொழுது போராட்டத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார நவீனமயமாக்கல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின், சுயசார்பு இந்தியா ( ஆத்ம நிர்பர்) என்ற தொலை நோக்கிர்க்கும் , ஜப்பான் ஒரு முக்கிய கூட்டாளி நாடாக உள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஆதாரமாகக் கொள்வது, மற்றும் ஜப்பானியர்களின் பொது மற்றும் தனியார் துறை முதலீடுகளை திரட்டுவது போன்றவை இந்தியாவிற்கு இன்றியமையாததாக உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய சந்தையைக் கருத்தில்கொண்டு ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு விருப்பமான இடமாக திகழ்கிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (JBIC), சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு அறிக்கையின்படி, ஜப்பானின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் தொழில் புரிவதற்கு ஏற்ற இடங்களில் , சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில...

"விவசாயம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா சுய - சார்பை நோக்கி செல்கிறது"

பத்திரிக்கையாளர் சங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். விவசாயம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியாவின் வலிமையானது அதன் சுய சார்பில் உள்ளது. உலகளாவிய அளவில் தன்னை முன்னெடுத்துச் செல்வதே தனது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாய உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வசதியை துவக்கி வைத்தது இதற்கு மறைமுகமாகும். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 101 பாதுகாப்பு பொருட்களை பட்டியலிட்டுள்ளார், இந்த பொருட்களின் இறக்குமதியானது குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு தடை விதிக்கப்படும். இந்த இரண்டு முன்னேற்றங்களும் இந்தியா தன்னை சுயசார்பு நாடாக மாற்றிக் கொள்ளும் இலக்கிற்கு புதிய வழி வகுக்கும். இதனால், உலகிலேயே வேகமாக முன்னேறும் பொருளாதார நாடு இந்தியா என்ற குறி ச்சொல்லும் தொடரும். விவசாய உட்கட்டமைப்பு நிதியை பொருத்தவரை , அதன் முக்கிய நோக்கம் ஆனது, நாட்டின் விவசாய சமுதாயம், அவர்களது உற்பத்திக்கு சிறந்த மதிப்பு மற்றும் விவசாய தயாரிப்பு பொருட்களை சிறந்த விலையில் விற்பது போன்றவற்றுக்கு வழிவகுப்பது ஆக...

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்கள் 2020 : ராஜபக்ஷேக்களுக்கு பெரும்பான்மை

புதனன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. பிரதமர் மகிந்தா ராஜபக் ஷே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியானது 59.09 சதவிகித வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த கட்சியானது 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் இருக்கைகள் உட்பட 145 இருக்கைகளை இந்த தேர்தலில் பெற்றிருக்கிறது. புதிதாக உருவான சமாகி ஜன பாலவேகயா கூட்டணி மொத்தம் 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முக்கியமான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியானது 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையின் மிக பழைய கட்சியும், 2015-19 ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த தேசிய ஒற்றுமை அரசை வழி நடத்திய ஐக்கிய தேசிய கட்சியானது ஒரே ஒரு இடத்தை அதுவும் தேசிய பட்டியலின் ஊடாக பெற்றுள்ளது. விகிதாச்சார பிரதினிதித்துவ தேர்தல் முறையை இலங்கை பின்பற்றி வருகிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது - நாடாளுமன்றத்தின் 225 இருக்கைகளில், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர், 198 உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இம்முறை தேர்தலானது கொரொனா வைரஸ் பெருந்தொற்று காரண...

தடம் புரண்டிருந்த இந்திய வங்க தேச ரயில் வழி இணைப்பு மீண்டும் பாதையில்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மேற்கு வங்கத்தையும் கிழக்கு வங்கத்தையும் இணைக்கும் உயிர்பாதையாக திகழ்ந்த, உயிர்ப்பான துடிப்பான ரயில் இணைப்புகளை, போக்குவரத்தை, ஒரே மொழி மற்றும் கலாச்சாரத்தால் இணைக்கப்பட்டிருந்த மக்களுக்கிடையே இருந்த உணர்வு பூர்வமான நெருக்கத்தை துண்டிக்கும் எண்ணத்துடன்,1965 ஆம் ஆண்டு பாகிஸ்தான் துண்டித்தது. ரயில் இணைப்புகளை அதிகப்படுத்துவது என்று பிரதமர் திரு நரேந்த்ர மோதி அவர்களுக்கும் வங்க தேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. 1965 ஆம் ஆண்டிற்கு முன் இருந்த இணைப்புகளை மீட்டெடுப்பது, அவற்றை மேலும் முன்னெடுத்து செல்வது என்பதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. தான் ஒரு இணைப்பு மையமாக விளங்கவேண்டும் என்பதில் வங்கதேசம் காட்டும் ஆர்வமும், வடகிழக்கு ப்ரதேசத்தை அருகிலிருக்கும் துறைமுகங்களோடு பாதைகள் மூலம் இணைத்து, அந்த ப்ரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகளை பெரிதாக முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதற்காக இந்தியா அளிக்கும் முன்னுரிமையும் இந்த இணைப்பு திட்டங்களை பெருமளவில் முன்னெடுத்து செல்லும் கிரியா ஊக்கியாக திகழ்கிறது. 1965 ஆம் ...

பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியை வேகப்படுத்தும் – ரிசர்வ் வங்கி கருத்து

மூத்த பொருளாதாரப் பத்திரிக்கையாளர் ஆதித்ய ராஜ் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தில் COVID-19 இன் பாதகமான தாக்கத்தை எதிர்கொள்ள இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள ஒரு நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கடன் விகிதத்தை மாற்றாமல் விட்ட, பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாடு உண்மையில் நடைமுறை சாத்தியமானது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு ஏற்கனவே குறைந்த அளவான 4 சதவீதமாக இருக்கும் நிலையில், பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களைக் குறைப்பதைத் தவிர்த்து, புத்துயிர் பெறுவதற்கான தேவைக்கு ஏற்ப, கடன்களை மறுசீரமைத்தல் போன்ற மிகவும் தேவையான நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியது போல், "வட்டி விகிதத்தை மாறாமல் வைத்திருக்கவும் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான தாராளமயப் போக்கை தொடரவும் எம் பி சி முடிவு செய்தது. “ ரிசர்வ் வங்கி கடைசியாக தனது கொள்கை விகிதத்தை மே 22 அன்று திருத்தியது. இது வட்டி விகிதத்தை குறைந்த அளவிற்கு குறைப்பதன் மூலம் தேவையை அதிகரிக்கும...

உள் நாட்டு மோதலில் பாகிஸ்தான்

ஆகாஷ்வாணியில் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் உள் நாட்டில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு வீணான, விஷமத்தனமான, வேடிக்கையான ஒரு முயற்சியை பாகிஸ்தான் அரசு மீண்டும் எடுத்துள்ளது. குஜராத், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இந்திய நிலப்பரப்பின் சில பகுதிகளைத் தன் நாட்டு வரைபடத்துடன் இணைத்து ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. பிறகு ஊடகங்களின் முன்னிலையில் அது வெளியிடப்பட்டது. பாகிஸ்தான் குடிமக்களின் கண்டனத்தையே இதுபெற்றுள்ளது. முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி தனது அலுவலகத்தில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து விளக்கமளித்துள்ளார். பாகிஸ்தானின் இந்தச் செயலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அந்த வரைபடத்தைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். இது மிக மோசமான அரசியல் தவறு என்று அவர் கூறியுள்ளார். சட்டப்பூர்வமான ஆதாரமோ சர்வதேச அங்கீகாரமோ இல்லாத, கேலிக்குரிய செயல் இது என்று அவர் கூறியுள்ளார். எல்லை தாண்டிய பயங்க...

பாதுகாப்புத் துறை உற்பத்தி வளர்ச்சியில் பாய்ச்சலுக்குத் திட்டமிடும் இந்தியா

வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கொள்கை (டிபிஇபி) மூலம், உலக பாதுகாப்புத் தளவாடச் சங்கிலியின் ஒரு பெரிய பகுதியை இந்தியா குறி வைத்துள்ளது. 2025 வாக்கில், வரைவு உள்நாட்டு உற்பத்தியின் அளவை 25 பில்லியன் டாலராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்தில் ஒரு பங்கு ஏற்றுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தளவாடங்களின் மூன்றாவது பெரிய இறக்குமதியாளராக இருந்து, இப்போது, தற்சார்புள்ள பாரதம் கொள்கையின் அடிப்படையில், முன்னேற இந்தியா நோக்கம் கொண்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கருத்துகளுக்காக பாதுகாப்பு அமைச்சகம் வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை 2020 ஐ பொதுக் களத்தில் வைத்துள்ளது. அடுத்த மூன்று வாரங்களில், வரைவுக் கொள்கை குறித்த கலந்துரையாடல்களில் அமைச்சகம் சம்பந்தப்பட்டவர்களை ஈடுபடுத்தும். கொள்கை ஆவணம் பாதுகாப்பு மற்றும் விண்வெளியில் உலகின் தலைசிறந்த நாடாக வெளிவர நாட்டை வழிநடத்தும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாப்புத் துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் பின்னணியில் இந்த வரைவுக் கொள்கை வந்துள்ளது. 49 சதவீதத்திலிருந்து ...

வலுவடைந்து வரும் இந்திய-மொரிஷியஸ் உறவுகள்

ஆகாஷ்வாணியின் செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான நட்பு, இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய-மொரிஷிய ஒத்துழைப்பு மற்றும் பொது விழுமியங்களின் அடையாளமாக, இந்தியாவின் உதவியுடன் போர்ட் லூயிஸில் கட்டப்பட்ட புதிய உச்ச நீதிமன்ற கட்டடம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷிய பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் ஆகியோரால் திறக்கப்பட்டது. இந்தியா மற்றும் மொரீஷியஸ் இரு நாடுகளும் தங்கள் சுயாதீன நீதித்துறைகளை தங்கள் ஜனநாயக அமைப்புகளின் முக்கியமான தூண்களாக மதிக்கின்றன. ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட செலவுக்குள் திட்டத்தை சரியான நேரத்தில் முடித்ததில் பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார். திரு. மோடி, அவரும் பிரதம மந்திரி ஜுக்நாத்தும் சில மாதங்களுக்கு முன்புதான், மற்றொரு மைல்கல், தீவு-நாட்டின் மெட்ரோ திட்டம் மற்றும் ஒரு புதிய அதிநவீன மருத்துவமனை ஆகியவற்றை கூட்டாகத் திறந்து வைத்தனர். இந்த இரண்டு திட்டங்களும் மொரீஷியஸ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாகர் (Security and Growth for All in the Region) (பிராந்தியத்தில் அனை...

தேசியக் கல்விக் கொள்கை 2020

கல்வியாளர் பாயல் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் கடந்த வாரம், மத்திய அமைச்சரவை, புதிய தேசியக் கல்விக் கொள்கை (என்இபி) 2020 க்கு ஒப்புதல் அளித்தது. இது பள்ளி மற்றும் உயர் கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது. அமைச்சரவை 34 ஆண்டுகால தேசியக் கல்வி தொடர்பான கொள்கையை மாற்றியதுடன், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைக் கல்வி அமைச்சாக மாற்றியது. தேசியக் கல்விக் கொள்கை 2020 இந்தியாவை ‘அறிவு மையமாக’ மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார். கல்வி முறைமையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் வரைவு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் டாக்டர் கே கஸ்துரிரங்கன் அவர்களால் டிசம்பர் 2018 இல் வெளியிடப்பட்டது. புதிய NEP, 6 முதல் 14 வயது வரையிலான கட்டாயப் பள்ளிப்படிப்பை 3 முதல் 18 வயது வரை விரிவுபடுத்துகிறது. . குழந்தைகளுக்குச் சிறந்த கற்றல் விளைவுகளை அடைய உதவுவதற்காக, ஆற்றல் நிறைந்த காலை உணவைச் சத்தான மதிய உணவுடன் வழங்குவது ப்ரீ ஸ்கூல் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. குறிப்பிடத்தக்க மாற்றமாக, பள்ளிக் கல்வியின் ...

திக்கு திசை தெரியாமல் நடுக்கடலில் சிக்கி திணறும் பாகிஸ்தான்

ஐந்து ரஃபேல் போர் விமானங்களடங்கிய முதல் தொகுதி இந்தியாவில் வந்திறங்கிய உடனே பாகிஸ்தானின் அரசு இயந்திரங்கள் அலறலை அதிகமாக்கியிருக்கின்றன. இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை சமமற்ற வகையில் அதிகரித்து வருவதாகவும், தெற்காசியாவில் இது ஆயுதபோட்டிக்கு வழிவகுக்ககூடும் என்பதாகவும் அதனால் உலக சமூகமானது இந்தியாவை அறிவுறுத்தி இதனை தடுக்கவேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலகம் உலக சமூகத்தை வலியுறுத்தி கேட்டுகொண்டிருக்கிறது. இந்த அனுமானம் உண்மைதன்மை சிறிதுமற்றது மட்டுமல்லாமல் பெரும் நகைப்புக்கிடமானதும் ஆகும். இந்திய விமானப்படையில் இணைப்பதற்காக இந்தியா 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவது கண்டு பாகிஸ்தான் ஆடிப்போயிருக்கிறது. 4++ தலைமுறையை சேர்ந்ததும், அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை உடையதுமான ரஃபேல் ஜெட் விமானங்களை இந்தியா வாங்குவது, நம் நாட்டின் அண்டையிலுள்ள பல நாடுகளை பெரிதும் கலங்க அடித்திருக்கிறது. இந்தியா ஆயுதங்களை அதிக அளவில் சேகரித்து வருவதாக கூறும் பாகிஸ்தானின் குற்றசாட்டுகளில் உண்மையில்லை என்பதுடன் பாகிஸ்தானின் முதிர்ச்சியின்மையையே இது காட்டுகிறது. இந்தியா தனது பட...