இந்தியா - ஜப்பான் பொருளாதார கூட்டாளி த்துவம் அதிகரிக்கின்றது.
இந்தியாவின் பிரத்தியேக முதலீட்டு மன்றத்தின் மூன்றாவது பதிப்பு -- அதாவது ஜப்பான் பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டிற்க்கு இடையே உள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும், COVID 19 தாக்கத்தால் பொருளாதாரம் தற்பொழுது போராட்டத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார நவீனமயமாக்கல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின், சுயசார்பு இந்தியா ( ஆத்ம நிர்பர்) என்ற தொலை நோக்கிர்க்கும் , ஜப்பான் ஒரு முக்கிய கூட்டாளி நாடாக உள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஆதாரமாகக் கொள்வது, மற்றும் ஜப்பானியர்களின் பொது மற்றும் தனியார் துறை முதலீடுகளை திரட்டுவது போன்றவை இந்தியாவிற்கு இன்றியமையாததாக உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய சந்தையைக் கருத்தில்கொண்டு ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு விருப்பமான இடமாக திகழ்கிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (JBIC), சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு அறிக்கையின்படி, ஜப்பானின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் தொழில் புரிவதற்கு ஏற்ற இடங்களில் , சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யும் நான்காவது மிகப்பெரிய நாடாக ஜப்பான் உள்ளது, 2000 மற்றும் 2020 வருட காலகட்டத்தில் , ஜப்பான் நாட்டிலிருந்து ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு வரத்து 3350 கோடி டாலராக உள்ளது, இந்த காலகட்டத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் இது 7% ஆகும். 1441 ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் தயாரிப்பு என்ற திட்டத்தில் ஜப்பான் நாட்டுடனான திட்டங்கள் வெற்றி அடைந்துள்ளன, இந்தியாவில் தயாரிப்பு திட்டத்தில் , சுசுகி நிறுவனத்தின் பெலினோ கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஜப்பான் நாட்டின் வணிகத்தை மேம்படுத்த, சிறப்பு கவனம் செலுத்தும் அமைச்சர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது, சுங்கம், தரம், ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து போன்றவற்றில் ஏற்படும் சவால்களுக்கு இந்த குழு தீர்வு வழங்குகிறது. இந்த குழுவில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நிதி துறை, ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து துறைகளிலிருந்து பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் 50, ஜப்பான் நாட்டு நிறுவனங்களுடன், நான்கு அமர்வுகளில், சந்திப்பு நடத்த உள்ளனர். இந்த குழுவில் உள்ள சில நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய, ஜப்பான் தரப்பிலிருந்து 200 க்கும் மேற்பட்ட முதலீட்டு திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் வணிகம் புரிவதற்கு ஏதுவாக , இந்தியா முழுவதிலும் முதலீட்டு அனுமதி மையம் 2021 வருடம் துவங்க உள்ளது.
முதலீடுகளை எளிதாக்க, 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம், இந்தியாவின்வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், மற்றும் ஜப்பான் நாட்டின் பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் , இரண்டுக்கும் இடையே,
இந்தியா ஜப்பான் தொழில்துறை போட்டி திறன் கூட்டாளி துவம் ( IJICP) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் தொழில்துறை போட்டித் திறனை விரிவுபடுத்துவது, அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது, தளவாடங்களின் செலவுகளை குறைப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கமாகும்.
ஜப்பான் தொழில்துறை நகரங்கள் ( JIT) உருவாக்கியதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அது முதலீட்டு சலுகைகளை வழங்குகிறது. ஜப்பான் நாடு மட்டும்தான் இந்தியாவில் தற்பொழுது 12 அர்ப்பணிப்பு மிக்க தொழில்துறை நகரங்களை கொண்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த அசாம் மாநிலத்தில் பதிமூன்றாவது JIT யை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
அதே சமயம் 2019 ஆம் வருடம், பாதகமான வர்த்தக இருப்பு நிலைக்கு இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியது , விரிவான பொருளாதார கூட்டாளி துவ ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்யவும் கோரி உள்ளது. வர்த்தக சமநிலை என்பது இந்தியாவின் முதன்மையான கொள்கையாக உள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு இடையே இருதரப்பு வர்த்தகமானது 2018 - 19 ஆம் வருடத்தில், 1763 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. அதே காலகட்டத்தில் ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் வர்த்தகம் 1277 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி 486 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஜப்பான் நாட்டின் பிரதமர் Shinzo Abe அவர்களும், அதிக சக்திவாய்ந்த இராஜதந்திர அணுகு முறைகளை கையாண்டு வருகின்றனர். "வலுவான , இந்தியா மற்றும் ஜப்பான், இரு நாடுகளையும் வளமாக்குவது மட்டுமல்லாமல், ஆசியா மற்றும் உலக அளவில், உறுதிப்படுத்தும் காரணியாகவும் விளங்குகிறது." என்று இந்திய பிரதமர் வெளிப்படுத்தினார். இந்தியா - ஜப்பான் இருநாடுகளின் சமூக செயலுத்தி மற்றும் உலகளாவிய கூட்டாளி துவத்திர்க்கு , வலுவான பொருளாதார ஈடுபாடு ஒரு முக்கிய தூணாக விளங்குகிறது. இந்தியாவின் மென்பொருள் மற்றும் ஜப்பான் நாட்டின் வன்பொருள் இரண்டும், ஒன்றுக்கொன்று நிரப்பும் வகையில் உள்ளது, வரும் காலத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு மகத்தான வாய்ப்பு உள்ளது.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் டிட்லி பாஸு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.
Comments
Post a Comment