Posts

Showing posts from October, 2019

தெற்கு சீனக் கடல் - புதிய சர்ச்சை.

(கிழக்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் பேராசிரியர் பாலாதாஸ் கோஷல் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) சர்வதேச சட்டவிதிகளை மீறி, வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை சீனா ஊடுருவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியட்நாம் கடற்கரையிலிருந்து வெறும் 60 நாட்டிகல் மைல் என்ற மிக அருகிய தூரத்தில் சீன ரோந்துக் கப்பல் நுழைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடன் சுமுக உறவு இல்லாத வியட்நாமின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் ஏற்பட்ட இந்நிகழ்வால், அந்நாட்டிற்கு சீனாவுடன் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தைக் கண்காணிக்க ஏதுவாக, இந்த ரோந்துக் கப்பல், குறைந்தபட்சம் நான்கு பாதுகாப்புக் கப்பல்களுடன் நிலை கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இக்கப்பல், வியட்நாமின் ஃபூ கை தீவின் தென்கிழக்கே சுமார் 120 கி.மீ. தொலைவிலும், தெற்கு வியட்நாமின் நகரமான ஃபன் தியட்டின் கடற்கரையிலிருந்து 185 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் சிறப...

பதினெட்டாவது அணிசேரா நாடுகள் கூட்டம்.

(அரசியல் விமரிசகர் எம். கே. டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) அணிசேரா நாடுகள் இயக்கம் இன்றும் உயிர்ப்புடன் விளங்குகிறது என்பதை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக, அஸர்பெய்ஜானில் உள்ள அழகிய கடற்கரைத் தலைநகரான பாகுவில், அணிசேரா நாடுகளின் பதினெட்டாவது இருநாள் கூட்டம் நடந்து முடிந்தது. அணிசேரா இயக்கம் 60 ஆண்டுகளுக்கு முன்னதாக துவக்கப்பட்ட நாள் முதற்கொண்டே, மேற்கத்தியா நாடுகள் இந்த இயக்கம் அதிக காலம் தாங்காது என்று கூறி வந்தன. ஆனால், மேற்கத்திய நாடுகளின் இந்தக் கணிப்பு தவறானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிவேக மாற்றங்களைச் சந்தித்து வரும் இன்றைய உலகில், அணிசேரா நாடுகள் இயக்கம் இன்றும் உயிர்ப்புடன் விளங்குகிறது என்பதை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக, 2011 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தில் உறுப்புநாடாகச் சேர்ந்த அஸர்பெய்ஜானில், இவ்வியக்கத்தின் இருநாள் கூட்டம் நடந்து முடிந்ததுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் ஒருமித்த குரலை ஒலிக்கச் செய்ய, சிறந்த மேடையாக அணிசேரா நாடுகள் இயக்கம் திகழ்கிறது. அணிசேரா நாடுகள் இயக்கத்தை நிறுவிய நாடுகளுள் ஒன்றான இந்தியா, ...

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை.

(அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் திரு கெளஷிக் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் - சத்யா அசோகன்.) பாகிஸ்தானினுள்ள சிறுபான்மை மதத்தினர், அங்கிருக்கும் பெரும்பான்மையினரின் எதேச்சாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டிய துயர நிலையில் உள்ளனர். நாட்டில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. பாகிஸ்தான் உருவானபோது, இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சிறுபான்மையினர் எண்ணிக்கை, நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 28 சதவிகிதம் இருந்தது. அப்போதிருந்த கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்களின் ஜனத்தொகை 22 சதவிகிதமாக இருந்தது. இன்றோ, பாகிஸ்தானில் மொத்த சிறுபான்மையினர் 4 சதவிகிதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.. பாகிஸ்தானை ஸ்தாபித்த முகமது அலி ஜின்னா, மதச்சார்பற்ற நாடாக பாகிஸ்தான் இருக்க வேண்டும் என நினத்தார். ஆனால் அவர் இருந்த காலத்திலேயே அடிப்படைவாதிகள், நாடு மத அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். இறுதியாக, ஸியா உல் ஹக் அதிபராக இருந்த போது, 1980 களில் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது. பாகிஸ்தானில...

பொருளாதாரத்  தொலை நோக்கை உறுதிப்படுத்தும் இந்திய - அமெரிக்க செயலுத்தி மன்றம்.

(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்புப் பத்திரிக்கையாளர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - லட்சுமண குமார்) இந்திய-அமெரிக்க செயலுத்தி மன்றத்தின் இரண்டாவது கூட்டம் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. தமது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார நாடாக உருவாக்க உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்திய - அமெரிக்க செயலுத்தி மன்றத்தின் பிரதிநிதிகளும், தனது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள் மற்றும் தூதர்களைக் கொண்ட இந்த மன்றம், இந்தியாவின் அடுத்த ஐந்தாண்டுகால சாதனைகள், உலகின் அடுத்த 25 ஆண்டுகளின் நிலையை நிர்ணயிக்கும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். பிரதமர் திரு நரேந்திர மோதியைச் சந்தித்த பிரதிநிதிகள், அவரது தொலைநோக்கினை ஆமோதித்தனர். ஜான் சேம்பெர்ஸ் அவர்கள் இந்த மன்றத்துக்குத் தலைமை வகித்தார். இந்தக் குழுவில், அமெரிக்காவின் தரப்பில், பனிப்போர் காலத்தைச் சே...

ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகளில் உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும் இந்தியா.

(கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் -ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) கிழக்காசிய உச்சிமாநாடு, ஆசியான் உச்சிமாநாடு மற்றும் அவற்றுடன் இணைந்த மற்ற சந்திப்புகள், நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன. இதற்கு முன்பாக, ஆர்.சி.இ.பி எனப்படும் விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டாளித்துவத்தின் செயலாக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. தெளிவான செயல்முறைகளுடன், 2020 ஜுன் மாதம், இந்த ஒப்பந்தத்தில் நாடுகள் கையெழுத்திட இது வழிவகுக்கும். அடுத்த மாத துவக்கத்தில், பாங்காக்கில் நடக்கவிருக்கும் கிழக்காசிய உச்சிமாநாடு மற்றும் பிற சந்திப்புகளில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கலந்து கொள்வார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆர்.சி.இ.பி க்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆசியானின் பத்து உறுப்பினர் நாடுகளும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய ஆறு பேச்சுவார்த்தைக் கூட்டாளி நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகள், 201...

கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் இந்தியா.

(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் முக்கியத்துவம் பெற்ற நாடுகளான ஃபிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பயணம் மேற்கொண்டார். முதலில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர், அந்நாட்டுடனான இந்தியாவின் தூதரக உறவுகள் துவங்கி, 70 ஆண்டுகள் நிறைவுற்றதற்கான கொண்ட்டாட்டங்களில் பங்கேற்றார். பின்னர் ஜப்பான் சென்ற குடியரசுத் தலைவர், அந்நாட்டு மன்னர் நாருஹிடோ அவர்கள், கிரைசேந்திமம் அரியணையேறிய வைபவத்தில் கலந்து கொண்டார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஃபிலிப்பைன்ஸ், செயலுத்தி ரீதியிலான மதிப்பீடுகளை இந்தியாவுடன் பகிர்கிறது. இறையாண்மையில் நாடுகளின் சமநிலை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்ட உலக நியதிகள் ஆகியவற்றையும், சர்வதேச சட்டங்களையும் இருநாடுகளும் மதிக்கின்றன. ஜனநாயக மாண்புகள் மற்றும் தெற்கு-தெற்கு கூட்டுறவு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான இந்தியா-ஃ...

ஐ.நா.வுக்கு வயது 74.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) 1948 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று, ஐ நா தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் 50 நிறுவன உறுப்பினர் நாடுகளில் ஒன்றாக, இந்தியாவும் 1945 ஆம் ஆண்டு, சான் ஃப்ரான்சிஸ்கோவில், ஐ நா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் அவ்வாண்டு 24 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட, கையெழுத்திட்ட பெரும்பான்மை நாடுகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தன. 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நடைபெற்ற ஐ நா-வின் பொதுச்சபைக் கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அக்டோபர் 24 ஆம் தேதி ஐ நா தினமாக அறிவிக்கப்பட்டது. அரசுகளுக்கிடையிலான சர்வதேச நிறுவனமான ஐ.நா.வுக்கு, உலக நாடுகளின் தொடர் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன், ஐ.நா.வின் குறிக்கோள்கள் மற்றும் சாதனைகளைப் பரப்புவது, ஐ.நா. தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கமாகும். ஆங்கிலேய ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி...

எஃப்ஏடிஎஃப்ஃபின் பழுப்பு நிறப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்.

(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டூ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – தமிழ் பாரதன்.) பாகிஸ்தானில், இந்திய எல்லைக்கு அருகிலுள்ள ராணுவத் தளங்கள் சிலவற்றையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்களையும் குறிவைத்து, இந்தியா தாக்குதல் நடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறிய செயலில் ஈடுபட்டதால், இந்தியா இந்த எதிர் நடவடிக்கைக்குத் தூண்டப்பட்டது. இதில், பல பாகிஸ்தான் ராணுவத் துருப்புக்களும், பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக, இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது அரசியல் சட்டப் பிரிவு விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. உலக அரங்கில் காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவைப் பெறுவதில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல் மற்றும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளது. எனினும், பாகிஸ்தானின் முயற்சிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன...

கர்தார்பூர் வழித்தடம் திறப்பு.

(தெற்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - சத்யா அசோகன்.) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றம் நிறைந்த சூழலுக்கு இடையே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நரோவால் மாவட்டத்திலிருக்கும் குருத்வாரா தர்பார் சாஹிப் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் சீக்கியர்களுக்காக, கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தைத் திறப்பது என்று இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவெடுத்துள்ளன. கர்தார்பூர் சாஹிப், சீக்கிய மதத்தை ஸ்தாபித்த புனிதர் குரு நானக் தேவ் அவர்களின் கோவிலாகும். இங்கு அவர் 18 ஆண்டுகள் தங்கியிருந்து போதித்தார். இதுவே சீக்கிய மதகுரு இறுதி மூச்சு வரை வாழ்ந்த புனிதத் தலமாகும். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குருநானக் தேவின் 550 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது, இந்த வழித்தடத்தைத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், இந்தியாவின் குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள தேரா பாபா நானக்கிலிருந்து சர்வதேச எல்லை வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. பாகிஸ்தானில் ஏறத்தாழ 173 சீக்கிய மத வழிபாட்டுத் தலங்...

அணி சேரா இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்

தில்லி சமுக அறிவியல் ஆய்வு நிறுவன இயக்குனர் டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்கள் ஆங்கிலத்தின் எழுதியதன் தமிழாக்கம் தமிழில் ஆர் ராஜ்குமார் பாலா ஒருகாலத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த அணிசேரா இயக்கம் தற்போது அதன் ஈர்ப்பை இழந்துவிட்ட நிலையில் அடுத்தவாரம் அணிசேரா நாடுகளின் 18 ஆவது உச்சி மாநாட்டை அஸெர்பைஜான் நடத்த உள்ளது. அணிசேராமை என்பது முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. உலக அளவில் அதிகாரப்பரவல் வேறிடத்துக்கு மாறியதால் அலட்சியம் செய்யப்பட்ட இந்தக் கொள்கை சர்வதேச உறவுகளில் புதிய குழுவை ஏற்படுத்தியுள்ளது. அட்லாண்டிக் சகாப்தத்தின் முடிவையும் ஆசிய நூற்றாண்டின் துவக்கத்தையும் குறிக்கும் வகையில் புவி அரசியலில் புதிய மாற்றத்தை உலகம் கண்டுவருகிறது. உண்மையில் ‘ஜி சீரோ’ எனப்படும் சர்வதேச உறவுகளில் யாருக்குமே அதிகாரம் இல்லாத வெற்றிட நிலைக்கு 21 ஆம் நூற்றாண்டின் உலகம் மாறியிருப்பதாகவும் மண்டல மற்றும் உலக அமைப்புகள் அதிக அளவில் உருவாகியிருப்பதாகவும் ஒரு நிபுணர் கூறுகிறார். ஒரு சர்வதேச விஷயத்தை எடுத்துரைக்க எந்தவொரு தனி நாடோ அல்லது நாடுகள் குழுவோ அரசியல் பொருளாதார மற்றும் செயல் உத்தி சார்ந்த ஆற்றலை பெறவி...

புதிய உச்சத்தை தொட்டுள்ள இந்திய-நெதர்லாந்த் உறவுகள்.

ஜவாஹர்லால் நேரு பல்கலை கழக பேராசிரியர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமணகுமார் 17ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுக்கும் - நெதர்லாந்துக்கும் இடையே வரலாற்றுபூர்வ உறவுகள் இருந்து வருகிறது. 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்கு பிறகு இருநாடுகளுக்கிடையேயும் அதிகாரபூர்வ உறவுகள் தோற்றுவிக்கப்பட்டன. 1970 களிலும், 80 களிலும் சீராக வளர்ந்த பொருளாதார உறவுகள், 1990 களில் தாராளமயமாக்களுக்கு பிறகு ஏற்றம் கண்டது. அரசியல், பொருளாதார, சமூக-கலாச்சார நிலையில் இருதரப்பு உறவுகள் அதிகரித்து வருகிறது. உயர் நிலை அளவில் இருநாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணங்களே இதற்க்கு சான்று. 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்து பிரதமர் JAN PETER BALKENEDE இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். கடந்த நான்கு வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரதம மந்திரி நிலையில் மூன்று சுற்றுப்பயணகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் MARK RUTTE மிகப்பெரிய வியாபார பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை ஏற்று இந்தியா வந்தது இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பொருளாதார உறவுகளுக்கு ஒரு சான்றாகும். டச்சு நாட்டு அரசர்...

சிரியா மீதான துருக்கிப் படையெடுப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு

ஜவலர்லால் நேரு பல்கலைக்கழக மேற்காசியப் படிப்புகள் மையத்தின் பேராசிரியர் P R குமாரசாமி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் தமிழில் மாலதி தமிழ்ச்செல்வன் துருக்கி மீது தடைகள் விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள முடிவு எப்போதும் போர்மேகம் சூழ்ந்திருக்கும் மேற்காசியாவை அதிரடித்தது. குர்த் இன மக்களுக்கு ஆதரவாக சிரியாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகளை அங்கிருந்து விலக்கிக்கொள்ள அவர் முடிவு எடுத்த சில நாட்களுக்கு பிறகு குர்த் இனத்தினர் அதிகம் உள்ள சிரியாவின் ஜனநாயகப் படைகளைச் சேர்க்காமல் வடசிரியா மீது படையெடுத்து buffer zone எனப்படும் ஒரு இடைப்பகுதியை உருவாக்க முனைத்த துருக்கியின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துருக்கியில் உள்ள குர்த் இன தொழிலாளர்கள் கட்சி PKK உடன் உறவுகளை வைத்திருப்பதற்காக சிரியாவின் ஜனநாயகப் படைகளை ஒரு தீவிரவாதக் குழுவாக துருக்கி அதிபர் எர்டோகன் கருதுகிறார். சிரியா வாழ் குர்த் இன மக்களுக்கு எதிரான நடவடிக்கை மூலமாக துருக்கி நாட்டுக்குள் வாழும் குர்த் தேசியவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அவர் முயற்சி ...

கொமோரோஸ் மற்றும் சியாரோ லியோன் உடன் உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா

ஆல் இண்டியா ரேடியோவின் செய்தி ஆலோசகர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமணகுமார் ஆப்பிரிக்கா கண்டத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொமோரோஸ் மற்றும் சியாரோ லியோன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். கடல் சார் அண்டை நாடாக உள்ள இந்தியா தனது வளர்ச்சி அனுபவங்களை கொமோரோஸ் மக்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. கொமோரோஸின் முக்கிய கூட்டாளியாகவும் இருக்க இந்தியா விரும்புகிறது. கொமோரோஸ் அதிபர் AZALI ASSOUMANI உடன் வெங்கையா நாயுடு அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். பல ஆச்சரியப்படத்தக்க சந்தர்ப்பங்கள் குறித்து இரு நாட்டுத்தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுகாதாரம், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சுகாதாரம் மற்றும் கலாச்சரம் குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. குறுகிய காலத்திற்கு இரு...

இந்தியா-சீனா இடையில் உயர்மட்ட பொருளாதார மற்றும் வணிக பேச்சுவார்த்தைக்கான செயல்முறையின் உருவாக்கம்

டாக்டர். ராஜ்தீப் பகனதி, சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் தமிழில், ஸ்ரீப்ரியா சம்பத்குமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், மாமல்லபுரத்தில் நடந்த முறைசாரா உச்சிமாநாட்டில், உயர் அளவிலான பொருளாதார மற்றும் வர்த்தக் பேச்சுவார்த்தைக்கான செயல்முறையை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முடிவு எடுக்கப்பட்டது. எல்லைப் பிரச்சனைகளை சரி செய்ய, சிறப்புப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான இந்தியா மற்றும் சீனாவின் முடிவை, தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவும் ஒத்து இருக்கிறது. இந்த செயல்முறைக்கு இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனும் சீன துணை பிரிமியர் ஹு சுன் ஹுவா-வும் இணைந்து தலைமை வகிப்பார்கள். உயர் தலைமை மட்டத்தில் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது, சமீபத்தில் நடந்த முறைசாரா உச்சிமாநாட்டின் குறிக்கோளாகும். அதிக முனைப்பையும் அவசர நிலையையும் அடைந்திருக்கும் வணிக மற்றும் பொருளாதார விவகாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இரு தரப்பும் முடிவெடுத்துள்ளதை, இந்த செயல்முறையின் உருவாக்கம் விளக்குகிறது. வணிக பற்றாக்குறையின் அளவு, 5000 கோடி ...

 “ அதிகரிக்கும் இம்ரான்கானின் இன்னல்கள்”

டாக்டர் அசோக் பேகூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் சீனாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் குவாமர் பாஜ்வா அவர்கள், சீனாவின் ராணுவ தலைவர் ஜெனரல் ஷாங்க் யூஷியா அவர்களையும், மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) வின் மூத்த ராணுவ தலைவர்களை சந்திப்பதற்கும் இம்ரான் கான் அவர்களின் பயணத்திற்கு ஒரு நாள் முன்பாக சீனாவிற்கு சென்றடைந்தார். சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கே கியாங் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பில் இம்ரான் கான் அவர்களுடன் ஜெனரல் பாஜ்வா அவர்களும் இணைந்து கொண்டார். கடந்த ஒரு வருட காலத்தில் இம்ரான் கான் அவர்கள் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. “பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே நிலவி வரும் அனைத்து பருவகால செயல் உத்தி ஒத்துழைப்பு கூட்டாளித் துவத்தை மேலும் வலுப்படுத்துவது “ என்பது கூட்டு அறிக்கையின் மூலம் மறுபடியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்த்தது போல், அந்த அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் பற்றிய...

இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள்

பேராசிரியர் ஸ்ரீ காந்த் கொண்டபள்ளி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராமமூர்த்தி. இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி சின்பிங் அவர்களை முறை சாரா மாநாட்டில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதித்தார். உலக நாடுகளின் பிரச்சனைகள் குறித்தும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று ஆசிய கண்டத்தின் இரு பெரும் நாடுகளின் தலைவர்கள் முறைசாரா மாநாட்டில் கூட்டாக சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சி ஆகியவை குறித்து முதல் நாளன்று விரிவாக விவாதித்தனர். இரண்டாம் நாளன்று எல்லைப் பாதுகாப்பு முதலீடு, இரு நாட்டு மக்களுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் குறித்தும் விவாதங்கள் நீடித்தன. பல்லவர் காலத்திலிருந்தே மாமல்லபுரத்திற்க்கும் சீனாவிற்கும் தொடர்பு இரு பெரும் உலக நாகரிகங்கள் மத்தியில் நிலவி வந்தது குறித்து பிரதமர் மோதி விரிவாக எடுத்துரைத்தார். ஆசிய நகரிகங்களின் மகாநாடு சீனாவில் கூட்டப்பட்டபோது இந்திய அரசு பங்கேற்கவில்லை. இரு நாடு...

துருக்கியின் அமைதிப் புரட்சி போலியானது.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) கடந்த புதனன்று, துருக்கியின் பாதுகாப்புப் படை, மூன்று நோக்கங்களுடன் அமைதிப் புரட்சியைத் துவக்கியது. சிரியாவுடனான துருக்கியின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு, அப்பகுதியில் இயங்கும் பயங்கரவாதிகளை ஒழிப்பது, அப்பகுதியில் வசிக்கும் சிரிய மக்களை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்வதே அதன் மூன்று நோக்கங்களாகும். சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் தன்னிச்சையாக துருக்கி ராணுவம் தாக்குதலை நடத்துவதற்கு ஆழ்ந்த கவலை தெரிவித்து, அதிகாரபூர்வ அறிக்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. துருக்கியின் இந்த நடவடிக்கையால், அப்பகுதியின் ஸ்திரத்தன்மையும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என்று இந்தியா கருதுகிறது. இதனால், மனிதநேய அத்துமீறல்களும், பொதுமக்களின் துன்பங்களும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இவ்விஷயத்தில் கட்டுப்பாடுடன் செயல்படுமாறு துருக்கியைக் கேட்டுக் கொண்ட இந்தியா, சிரியாவின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் துருக்கி மதிப்பளித்தல் அவ...

புதிய உச்சத்தைத் தொடும் இந்தியாவின் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு கூட்டாளித்துவம்.

(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – த.க.தமிழ்பாரதன்.) இந்தியாவின் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பில் பங்கு கொண்டுள்ள கூட்டாளி நாடுகளுடன், சமத்துவம் மற்றும் இறையாண்மையில் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், மேம்பாட்டு ஒத்துழைப்புக்குத் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அண்மையில், இ-வித்யாபாரதி மற்றும் இ-ஆரோக்யபாரதி ஆகிய திட்டங்களையும், தொலைக்காட்சி வாயிலாகக் கல்வி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக மருத்துவம் ஆகிய மாபெரும் திட்டங்களையும் ஆப்ரிக்காவிற்காக இந்தியா தொடங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு கூட்டாளித்துவம்(ஐடீஈசி) துவங்கி, 55 ஆண்டுகள் பூர்த்தியானதைக் கொண்டாடும் விதமாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நிறைவேற்றப்பட்ட மிகப்பெரிய திட்டங்களுள் ஒன்றாக இந்த ஆப்பிரிக்காவுக்கான திட்டங்கள் விளங்குகின்றன. இத்திட்டங்களின் வாயிலாக, ஆப்பிரிக்க மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே, முதன்மையான இந்தியக் கல்வியைப் பெறமுடியும். அதேபோல், இந்திய மருத்துவ நிபுணத்துவத்தை ஆப்பிரிக்க மருத்து...

முன்னேற்றப் பாதைக்கு வழிகோலும் இந்தியப் பொருளாதார உச்சி மாநாடு.

(மூத்த பத்திரிக்கையாளர் ஜி ஸ்ரீநிவாசன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் - ஆர் ராஜ்குமார் பாலா.) புதுப்பிக்கவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்து நிலைத்த பொருளாதாரத்தை உருவாக்கும் கண்ணோட்டத்தால் ஊக்கம் பெற்ற இந்தியாவின் கொள்கைகள், பத்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற பெரும் இலக்கை உலக அளவில் வலுவுடன் எட்டுவதை உறுதி செய்யும். புதுதில்லியில், இந்திய தொழில் குழுமத்துடன் (சி ஐ ஐ) கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் பரந்துபட்ட முடிவு இதுதான் என்று உலகப் பொருளாதார மன்றத் தலைவர் பெர்ஜ் பிரெண்டே அவர்கள் கூறினார். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் தலைவர்களும், வர்த்தகப் பிரதிநிதிகளும் இந்த நம்பக்கூடிய கருத்தை ஆமோதித்தது தான் இன்னும் முக்கிய அம்சமாகும். மற்ற உலக நாடுகளுக்கு இந்தியா தன்னை ஒரு முன்மாதிரியாக வழிகாட்டும் காரணியாக நிலைநிறுத்தும் என்பதும், உலகளாவிய முக்கிய சவால்களுக்குத் தீர்வாக, அளவிடத்தக்க, பின்பற்றக்கூடிய மாதிரித் திட்டங்களை உலகத்துக்கு வழங்கும் தலைமைப் பண்பைப் பெற்ற நாடாக இந்தியா உருவெடுக்கும் ...