நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்
வி. மோஹன் ராவ், பத்திரிக்கையாளர் தமிழில், ஸ்ரீப்ரியா சம்பத்குமார் இந்த வாரம், கொரோனா தொற்றின் அச்சம் உட்பட பல விவகாரங்கள், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பரபரப்பில் வைத்திருந்தது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், ஐக்கிய அரப் அமீரகத்தில் உள்ள எட்டு இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவித்தார். குவைத்தில் அவ்வாறு யாரும் இல்லை. ஈரானில், சுமார் 6000 இந்திய குடிமக்கள் உள்ளனர். இதில், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மற்றும் மகாராஷ்டிராவைச் சார்ந்த சுமார் 1100 யாத்ரிகர்கள், சுமார் 300 மாணவர்கள், குறிப்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள், கேரளா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மீனவர்கள் மற்றும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் ஆன்மீக படிப்புகளுக்காக ஈரானில் தங்கியுள்ளவர்கள் ஆகியோர் அடங்குவர். ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு மீட்டு வர, புது தில்லி பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் கூறினார். பரிசோதனை மற்றும் மாதிரி ஆய்வு வசதிகளைச் செய்ய, 6 இந்திய சுகாதார அதிகாரிகளின் குழு ஈரானு...