மொசாம்பிக் நாட்டுடனான உறவை வலுவாக்கும் இந்தியா.
(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், சமீபத்தில் மொசாம்பிக் நாட்டிற்கு மேற்கொண்ட மூன்று நாட்கள் பயணத்தின் போது, அந்நாட்டுடன் இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவை வெள்ளை கப்பல் போக்குவரத்து குறித்த தகவல் பரிமாற்றம் மற்றும் ஹைட்ரோ கிராஃபி துறையில் ஒத்துழைப்பு ஆகியவையாகும். மொசாம்பிக் நாட்டில் இந்தியா கணிசமான அளவில் பொருளாதார முதலீடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு செயலுத்தி ரீதியிலான உறவையும், இருதரப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும். மொசாம்பிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அடனாசியோ டுமுகே அவர்களுடன் நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின் போது, ஆப்பிரிக்க நாடுகளுள் மொசாம்பிக் நாட்டை, இந்தியா தனது மிக முக்கியமான நட்பு மட்டும் கூட்டாளி நாடாகக் கருதுகின்றது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கூறினார். இந்தியா, மொசாம்பிக்கில் 700 கோடி டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக, எரிய...