நாடாளுமன்ற நடவடிக்கைகள்

சர்வதேச நீதி மன்றத்தின் ஆணைப்படி, பாகிஸ்தான் அரசு உடனடியாக இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் யாதவ் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டு கொண்டார்.

சர்வதேச உடன்படிக்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களும், சட்டத்தின் ஆட்சி மீது உறுதி உள்ளவர்களும் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணை வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள்.

தனது வாதங்களை கேட்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் ஒருதரப்பு வாதங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு துன்புறுத்தி குல்பூஷன் யாதவ் மீது பொய்யான வழக்குகள் புனையப்பட்டது என்பது தற்போது தெளிவாகி உள்ளது என்று கூறினார் வெளியுறவுத்துறை அமைச்சர்.

வியன்னா ஒப்பந்தத்தை மீறும் வகையில், பாகிஸ்தான் அரசு செயல்பட்டுள்ளது என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக குல்பூஷன் யாதவ் தொடர்பு கொண்டு ஆவண செய்வார்கள் என்றார் வெளியுறவுத் துறை அமைச்சர்.

மாநிலங்களவையில் தேசிய புலனாய்வு அமைப்பு மசோதா 2019 ல் நிறைவேற்றப்பட்டது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கான அதிகாரத்தை இந்த மசோதா புலனாய்வு அமைப்பிற்கு அளிக்கும். ஆள்கடத்தல், போலியான பணப் புழக்கம், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கும் கணிணி வழி குற்றங்கள், ஆகிய குற்றங்களை விசாரிக்க புலனாய்வு அமைப்பிற்கு இந்த மசோதாவின் மூலம் அதிகாரம் கிடைக்கும். இந்திய குடிமக்களுக்கு எதிரான தீவிரவாத செயல்களை விசாரிக்கவும் இந்திய நாட்டிற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் அறிவித்தார்.

புதுதில்லி சர்வதேச இசைவு தீர்ப்பு மையம் மசோதா 2019 ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. நிறுவனங்களுக்கு இடையிலான வழக்குகளை தீர்ப்பதில் புதுதில்லியில் அமையவுள்ள சர்வதேச இசைவு தீர்ப்பு மையம் உதவி புரியும் என்று கூறலாம். 2019-20 ஆண்டிற்கான நிதி அறிக்கை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை உறுதுணை ஆக அமையும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் உறுதி அளித்தார். இந்தியாவும் சீன அரசும் எல்லை பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மதிப்பதிலும் உறுதியாக உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார். ஜூலை 6-ம் தேதியன்று எல்லைப் பகுதிகளில் சீன தரப்பிலிருந்து ஊடுருவல்கள் நடைபெற்றதாக அரங்கில் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். டோக்லாம் விவகாரத்தில் இருநாட்டு இராணுவமும் புரிந்துணர்வுடன் செயல்படுகின்றனர் என்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர்.

நாட்டில் எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்களை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் மாநிலங்களவையில் தெரிவித்தார். சர்வதேச எல்லைகளில் பாதுகாப்பு வேலி அமைப்பது, எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படைகள் விழிப்புணர்வுடன் செயல்படுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நித்தியானந்த ராய் அறிவித்தார்.

வெளியுறவு துறையின் சீரிய முயற்சியால் பாகிஸ்தான் சிறையிலிருந்து 2010 இந்திய மீனவர்கள் 2014-ம் ஆண்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் மக்களவையில் தெரிவித்தார்.

2021-22 ஆண்டிற்கான நிரந்தரமில்லாத உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுவில் இந்திய அரசு போட்டியில் இருக்கிறது என்றும் ஆசிய பசிபிக் பகுதியிலுள்ள 55 நாடுகளின் ஆதரவு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது என்றும் இதற்கான தேர்தல் 2020 ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் முரளிதரன் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.