Posts

Showing posts from November, 2019

சர்ச்சைக்குள்ளாகும் ஜெனரல் பாஜ்வாவின் பணிக்கால நீட்டிப்பு.

(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டூவின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்.) 59 வயதான பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வா அவர்கள், நவம்பர் 28 அன்று நள்ளிரவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க, ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டிருந்த அறிக்கை செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதே நேரத்தில், நிபந்தனைகளுடனான 6 மாத பணி நீட்டிப்பையும் அனுமதித்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்ட மசோதா நிறைவேற்றப்படவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்த விவகாரம் நாடு முழுவதும் அனல் பறக்கும் விவாதங்களையும் உச்ச நீதி மன்றத்தில் ஒரு சட்டப் போராட்டத்தையும் துவக்கி வைத்தது. தலைமை நீதிபதி ஆசிஃப் சயீத் கோஸா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு, சட்ட மற்றும் நிர்வாக அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மொத்த செயல்முறையும் தலைகீழாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததால், பிரதமர் இம்ரான் கான் மற்றும் அதிபர் ஆரிஃப் அல்வி ஆகிய இருவருக்குமே பெரும் தர்மசங்கடம் ஏற...

விண்வெளியில் இந்தியாவின் மிகவும் கூர்மையான கண்.

(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தாவன் விண்வெளி மையத்திலிருந்து, ”விண்வெளியில் இந்தியாவின் மிகவும் கூர்மையான கண்” என்று அழைக்கத்தக்க மூன்றாம் தலைமுறை, நவீன புவி புகைப்பட, வரைபட செயற்கைக் கோளான கார்ட்டோசால் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் துருவ செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டான பிஎஸ்எல்வி –சி 47 இந்த செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்ணில் ஏவப்பட்ட 17 ஆவது நிமிடத்தில், கார்ட்டோசால் 3 செயற்கைக் கோள், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. ஆறு பூஸ்டர்களை சுமந்து கொண்டு, விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி –சி 47 ராக்கெட், பிஎஸ்எல்வி தொகுதியில் இதுவரை இஸ்ரோ வின்ணில் செலுத்திய ராக்கெட்டுகளிலேயெ மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்த ராக்கெட், அமெரிக்காவின் 13 நேனோ செயற்கைக் கோள்களையும் சுமந்து சென்றது. கார்ட்டோசால் 3 செயற்கைக் கோளை விண்ணில் ஏவியபின், ஒன்றன் பின் ஒன்றாக, இந்த 13 நேனோ செயற்கைக் கோள்களும் ...

பிரிட்டனில் திடீர் தேர்தல் – ஒரு கண்ணோட்டம்.

(ஐரோப்பிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் எனப்படும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் எட்டும் முயற்சியாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், டிசம்பர் 12 ஆம் தேதி, முன் கூட்டியே, தேர்தல்களை அறிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் நான்காவது முறையாகத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ல் நடந்த பிரெக்ஸிட் குறித்த பொது வாக்கெடுப்புக்குப் பிறகு, அந்நாடு சந்தித்து வரும் அரசியல் தேக்க நிலையிலிருந்து வெளிவர மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 2017-ல் அப்போதைய பிரதமர் தெரசா மே அவர்களால் அறிவிக்கப்பட்ட திடீர் தேர்தலில், அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவை அவர் ஜனநாயக ஒருங்கிணைப்புக் கட்சியிடமிருந்து பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். மூன்றாவது வாரத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்...

சிபிஇசி திட்டத்தில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

(சீன விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் சானா ஹஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) சீனாவின் பிஆர்ஐ எனப்படும் வளையம் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டமும், அதன்கீழ், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் , சிபிஇசி (CPEC) திட்டமும், 2013 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட நாள் முதலே, இந்தியா இத்திட்டத்தின் மீது கவலை கொண்டுள்ளது. இத் திட்டம், இந்தியாவின் இறையாண்மையை பாதிப்பதோடு, விதிகளுக்குட்பட்ட ஒழுங்கு அமைப்பிற்கும் அது சவாலாக விளங்குவதால், கொள்கை ரீதியான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, சிபிஇசி திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, பிஆர்ஐ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் நாடாகும். சீனாவில் இதற்கு முன்பு நடைபெற்ற பிஆர்ஐ மன்றத்தின் இரண்டு கூட்டங்களுக்கு, தனது பிரதிநிதிகளை அனுப்பாத ஒரே நாடாகவும் இந்தியா விளங்குகிறது. 2013 ஆம் வருடம் முதல் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் சிபிஇசி வழித்தடத்திற்கு எதிராக, இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது. சிபிஇசி திட்டம், இந்தியாவின் இ...

ஜப்பானில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு.

(நவோதயா பத்திரிக்கையின் ஆசிரியர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) உலகின் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் 20 நாடுகளின் பொருளாதார மேடையே ஜி-20 எனப்படும். இதில், 19 உறுப்புநாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கும். நடப்பாண்டு ஜூன் மாதம் ஒசாகாவில் நடந்த 14 ஆவது உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ஜப்பானின் நகோயா நகரில், வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் பிரதிநிதியாக, வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், தற்போதைய சர்வதேசப் பொருளாதார தேக்கநிலை குறித்து வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்தனர். மாநாட்டிற்குப் பின்னர் பேசிய ஜப்பான் வெளியுறவு அமைச்சரும், இந்த ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான டோஷிமிட்சு மோடேகி அவர்கள், உலக வர்த்தக அமைப்பு விரைவில் சீர்திருத்தப்பட வேண்டியதின் அவசியத்தை ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இதனால் அவ்வமைப்பு, தற்காலப் பிரச்சனைகளை சரிவரக் கையாள இயலுமென்று அமைச்சர்கள் நம்புவாத...

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்.

(பத்திரிக்கையாளர் வி.மோகன் ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி.) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், மாநிலங்களவையின் 250 ஆவது அமர்வுக்கான கொண்டாட்டங்களுடன், கடந்த திங்களன்று துவங்கியது. இந்த மூன்றுவார குளிர்கால கூட்டத் தொடரின் முக்கிய அம்சமாக, மாநிலங்களவை, 250 ஆவது அமர்வில் அடியெடுத்து வைத்தது விளங்குகிறது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மாநிலங்களவையில் பேசுகையில், உறுப்பினர்கள், தேசிய கண்ணோட்டத்தையும், பிராந்திய நலன்களையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மக்கள் சார்ந்த விஷயங்கள் குறித்து, இடைஞ்சல்களைத் தவிர்த்து, பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார். ஜனநாயகத்தில், கட்டுப்பாடுகளைக் கைக்கொள்வதற்கு, மேலவை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். அதுவே இறுக்குப்பிடியாக மாறாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை விளக்கும் சிறந்த மேடையாக மேலவை விளங்குகிறது என்று அவர் நினைவுபடுத்தினார். அரசியலமைப்பை உருவாக்கிய நம் முன்னோர்கள், நாடாளுமன்றத்திற்கு இரு அவைகளை தொலைநோக்குடன் அமைத்துள...

தேவையற்ற  விஷயங்களில் மூழ்கியுள்ள பாகிஸ்தான்.

(ஐடிஎஸ்ஏ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹுரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. குருமூர்த்தி.) கடந்த ஒரு மாத காலமாக, ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் வினோதமான அரசியல் நிகழ்வுகள் காணக் கிடைத்தன. பாகிஸ்தான் மக்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து, கடந்த மாதம் முழுவதும், மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மானின் ஆஸாதி பேரணி மீதும், நோய்வாய்ப்பட்ட முன்னாள் பிரதமர், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படலாமா என்பது குறித்த விவாதங்களிலும் தனது பொன்னான நேரத்தை பாகிஸ்தான் விரயம் செய்துள்ளது. தொலைக்காட்சி சேனல்களின் முக்கிய நேரமும், அச்சு ஊடகங்களின் முன்பக்கங்களில் அதிக இடமும் இத்தகைய விஷயங்களுக்காக ஒதுக்கப்பட்டன. மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மானின் ஆஸாதி பேரணி மீது, ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தின. கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி, சுக்கூரிலிருந்து துவங்கிய இப்பேரணி, சிலநாட்கள் கழித்து இஸ்லாமாபாத் வந்தடைந்தது. பேரணியின் முக்கிய நோக்கம், இம்ரான்கான் அவர்களின் அரசை வீழ்த்துவது தான் என்றும், அதனை நிறைவேற்றாமல், தன் ஆட்கள் இஸ்லாமாபாத்தை விட்டுச் செல்ல மாட்டார்கள் என்றும் மௌல...

காலாபானி விவகாரம். 

(அரசியல் ஆய்வாளர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்.) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோர்கர் மாவட்டத்தின் இமயமலைப் பகுதியில் இந்தியா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதிகள் சந்திக்கும் முச்சந்தியில் அமைந்துள்ள காலபானி பகுதியின் உரிமை தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களை உருவாக்கிய பிறகு திருத்தப்பட்ட வரைபடத்தை இந்தியா வெளியிட்டதை அடுத்து, இந்தப் பிரச்சனை மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது. புதிய வரைபடத்தில் இந்திய எல்லைக்குள் காட்டப்பட்டுள்ள காலாபனியின் ஒரு பகுதியையும் அதன் அருகிலுள்ள பகுதிகளையும் தனக்குச் சொந்தமானவை என்று நேபாளம் உரிமை கோருகிறது. காலபானி சர்ச்சையானது, நேபாள மன்னருக்கும் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் இடையே, 1816 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சாகுலி உடன்படிக்கையை நோக்கிப் பின் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம், மஹாகாளி நதியை இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக வரையறுக்கிறது, அதில், மஹாகாளி நதி எ...

இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கைப் பயணம்.

(இலங்கை விவகார செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம், சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்திக்க, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவுக்கு வருமாறு, அதிபருக்கு இந்தியப் பிரதமர் விடுத்துள்ள அழைப்பை அவருக்கு அளித்தார். இம்மாதம் 29 ஆம் தேதி இந்தியா வருமாறு விடுத்த அழைப்பை அதிபர் ஏற்றுக் கொண்டார். பதவியேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாகும் இது. இந்திய வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதன் மூலம், இந்திய அரசு, இலங்கையுடன் இணைந்து பணியாற்றி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை விரைந்து வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா தவிர, அமெரிக்கா, பாகிஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகளும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. அவரது வெற்றியை எச்சரிக்கையுடன் அணுகும் ஐரோப்பிய யூனியன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கை அதிபர், நாட்டின் மனித உரிமையையைப் பாதுகாக்க எடுத்துள்ள ...

250 ஆவது அமர்வை எட்டும் இந்திய நாடாளுமன்ற மேலவை.

(மூத்த பத்திரிகையாளர் சங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) ராஜ்யசபை என்று அழைக்கப்படும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை, 250 ஆவது அமர்வை எட்டியுள்ளது. இத் தருணத்தில், இந்திய அரசியல் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும்பங்காற்றியுள்ள மேலவையின் மகத்துவத்தைப் பெருமையுடன் நினைவுகூர வேண்டும். 1952 ஆம் வருடம் துவங்கப்பட்ட நாள் முதல், தேசநலனைக் காப்பதில் இது முன்னின்று செயல்பட்டு வந்துள்ளது. 1952 ஆம் வருடத்தில் நிறைவேற்றிய இந்து திருமண மற்றும் விவாகரத்து மசோதா முதல், 2019 ஆம் வருடத்தில், முஸ்லிம் பெண்களுக்கான திருமண உரிமை பாதுகாப்பு மசோதா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மறுசீரமைப்பு மசோதா ஆகியவற்றை நிறைவேற்றியது வரை, இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத சுவடை மாநிலங்களவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவ்வப்போது மிகுந்த சவால்களை எதிர்கொண்டு, அதை முழுமையாக செயல்படுத்துவதில் நாடாளுமன்ற மேலவை நீண்ட தூரம் பயணித்துள்ளது என்று, இந்திய குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான எம் வெங்கையா நாயுடு அவர்கள் மிகச்...

மேம்பட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்தியா-பூட்டான் உறவுகள்.

(ஐடிஎஸ்ஏ ஆய்வாளர் டாக்டர் நிஹார் நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) பூட்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் லியோன்போ தண்டி டோர்ஜி அவர்கள், ஒரு வார அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது. இப்பயணத்தில், டாக்டர் டோர்ஜி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்ஷங்கர் அவர்களைச் சந்தித்து, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இந்திய-பூட்டான் உறவுகளின் அனைத்து அம்சங்கள் பற்றியும் மறு ஆய்வு செய்யப்பட்டது. பொருளாதாரக் கூட்டுறவு, வளர்ச்சிக் கூட்டாளித்துவம், நீர்மின் துறையில் கூட்டுறவு உட்பட இரு தரப்பு உறவுகளின் பல அம்சங்கள் பற்றி இரு தரப்பினரும் கலந்துரையாடினர். டாக்டர். ஜெய்ஷங்கரை சந்திப்பதற்கு முன்னர், பூட்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். டோர்ஜி, இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோக்லே அவர்களைச் சந்தித்தார். தில்லிப் பயணத்திற்குப் பிறகு, அவர், பீஹாரில் உள்ள புத்தகயா மற்றும் ராஜ்கிருக்குச் செல்வார். அங்கிருந்து, கொல்கத்தாவிற்குச் செல்லும் அவர், மேற்குவங்க முதலமைச்...

இலங்கையில் கோத்தபய ராஜபக்ச ஏழாவது அதிபராகத் தேர்வு.

(ஐடிஎஸ்ஏ ஆய்வாளர் டாக்டர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) கடந்த சனியன்று, இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியைச் சார்ந்த கோத்தபய ராஜபக்ச அவர்கள், ஏழாவது அதிபராக, 52.25 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இலங்கையின் அனுராதாபுரா நகரில், அதிபர் பதவி ஏற்கப் போவதாக, கோத்தபய ராஜபக்ச அவர்கள் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோதி உள்பட, உலகத் தலைவர்கள் கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். கோத்தபய ராஜபக்ச அவர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபருடன் நெருக்கமாகப் பணிபுரிந்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தத் தாம் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தெரிவித்துள்ளார். ராஜபக்ச அவர்களின் திறமைமிக்க தலைமையின் கீழ், இலங்கை மக்கள், அமைதி மற்றும் செழிப்பான பாதையில் மேலும் முன்னேறுவர் எனத் தாம் நம்புவதாக, தமது நாட்டு மக்களின் தரப்பிலும், தமது தரப்பிலும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கையில், பிரதமர் மோதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ம...

நாடாளுமன்றம் குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்கொள்ளவிருக்கும் விவகாரங்கள்.

(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. ராமமூர்த்தி) இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர், வரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதியிலிருந்து, டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் பல்வேறு சட்ட முன்வரைவுகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. தவிர, இரண்டு முக்கிய அவசர சட்டங்கள் சட்டங்களாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தேசிய நலன் குறித்த கொள்கை ஊக்குவிப்பு, செயல்திறன், மற்றும் அரசியல் ஒத்திசைவு ஆகிய மூன்று முக்கிய காரணங்களால் இக்கூட்டத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. காரசாரமான விவாதங்கள் எதிர்பார்க்க்கப்படுகின்றன. பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியைக் கேள்வி கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 21 ஆம் தேதி துவங்கி, ஜனவரி முதல் வாரத்தில் முடிவுற்றது. இவ்வாண்டில் நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில், மைல் கல்லாக விளங்கிய மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை முத்தலாக் சட்டம், மோட்டார் வாகனங்கள் சட...

பிரிக்ஸ் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா.

(செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாரயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) நான்கு நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாள் முதற்கொண்டே, செயலுத்தி ரீதியாக, இந்தியாவின் பல்நிலை சார்ந்த வெளியுறவுக் கொள்கைகளில் முக்கிய இடத்தை இவ்வமைப்பு பெற்று வந்துள்ளது. உலக அரங்கில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக, பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன் பின்னணியில், பிரேஸில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்ற 11 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோதி அவர்கள் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பாக, பிரிக்ஸ் கட்டமைப்புக்குள், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு வழிமுறைகளை உருவாக்க, பிரிக்ஸ் நாடுகள் ஆர்வமாக உள்ளதாக, பிரதமர் மோதி அவர்கள் தெரிவித்திருந்தார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், உலகப் பொருளாதார வளர்ச்சியில், பிரிக்ஸ் நாடுகள், 50 சதசிகிதம் பங்கு கொண்டுள்ளதாக, பிரதமர் மோதி அவர்கள் கூறினார். உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உழன்று வரும் வேளையில், பி...

பிரேசிலியாவில் பதினொன்றாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு.

(சமூக அறிவியல் நிறுவன இயக்குநர், டாக்டர் ஆஷ் நாராயன் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) பிரேசிலியாவில் 11 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது, இக்குழுவின் துடிப்புமிக்க செயல்பாட்டிற்கும், வளர்ந்து வரும் அதன் முக்கியத்துவத்துக்கும் அடையாளமாக விளங்குகிறது. பிரிக்ஸ் நாடுகள் கடந்த தசாப்தத்தில், உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக விளங்கின என்று, இந்த உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் உருவாக்கம், வளர்ந்து வரும் புதிய உலகளாவிய பொருளாதார ஒழுங்கு முறையின் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. மேற்கத்திய நாடுகளின் உலகளாவிய ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்பதோடு மட்டுமல்லாமல், பிரிக்ஸ் அமைப்பு, ஒரு புதிய சிந்தனையையும், புதிய உலகப் பார்வையையும் வடிவமைக்க முயற்சித்து வருகிறது. "ஒரு புதுமைப் படைப்பான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி" என்பது, 11 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் கருப்பொருளாக விளங்கியது. புதுமை என்பது, எதிர்காலத்தின் உரைகல். புதுமைப் படைப்புக்கள...

இந்திய, அமெரிக்க முப்படை கூட்டுப் பயிற்சி ஒத்திகை – 2019

(அமெரிக்க விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பொருளாதார வளர்ச்சி பெற்று, உலக அளவில் அதிக பங்களிப்பினை அளிப்பதற்கான இந்தியாவின் நோக்கத்துக்கு, அண்மைக்காலமாக அமெரிக்கா உறுதுணையாக விளங்கி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவுடனான கூட்டாளித்துவத்துக்கு அதிக வலுசேர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ராணுவ ஒத்துழைப்பு முக்கியத் தூணாக விளங்குகிறது. இம்மாதம் 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரத்தில், ’டைகர் ட்ரையம்ஃப்’ எனப்படும் மனிதாபிமான, பேரிடர் நிவாரணம் குறித்த, இருநாட்டு முப்படைகளின் முதல் கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், அமெரிக்கத் தரப்பில் யூ. எஸ். மரைன் கோர் மற்றும் சிறப்பு உளவுப் படையும், இந்தியத் தரப்பில், கடற்படையின் பி.8 ஐ(P8i) எனப்படும் தொலைதூர கடல்சார் உளவுப் படையும் பங்கேற்கின்றன. இப்பயிற்சியின் முதாலாவது கட்டம், நவம்பர் 13 முதல் 16 ...

கர்தார்பூர் வழித்தடத்தின் முக்கியத்துவம்.

(அமெரிக்காவிற்கான முன்னாள் தூதரும், “த புக் ஆப் நானக்” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) இந்தியாவில் பிரிவினை நிகழ்ந்த பிறகு, சீக்கிய யாத்திரீகர்கள் செல்ல முடியாமல் இருக்கும் பல புனிதத் தலங்களுக்கு, தங்கு தடையில்லாமல் சென்றுவர, சீக்கியர்கள் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அது போன்ற புனிதத் தலங்களலேயே, கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா மிகவும் புனிதமான ஒன்றாக விளங்குகிறது. குருநானக் அவர்கள் தனது கடைசி 18 வருட காலத்தைக் கழித்து, உயிர் நீத்த இடமான ராவி நதிக்கரையில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது. சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ள இந்த குருத்வாரா, இந்தியாவின் எல்லையிலிருந்து காணக்கூடிய தூரத்தில் உள்ளது. இந்த வழித்தடம் திறக்கப்பட்டதன் மூலம், இந்தியாவிலிருந்து தினந்தோறும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவிற்கு ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் சென்று வர முடியும். இது லட்சக்கணக்கான மக்களுக்கு உணர்ச்சிபூர்வமாகவும், ஆன்மீக ரீதியாகவும் மிகுந்த மனத்திருப்தியை அளிக்கும். இந்தியத் தரப்பில், கு...

பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்.

(மூத்த பத்திரிக்கையாளர் கே.வி. வெங்கடசுப்ரமனியன்,ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் - சத்யா அசோகன்.) முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் 2015-லிருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவானது, உலகிற்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குமே மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும். கடந்த திங்கட்கிழமையன்று ஐ.நா சபைக்கு டிரம்ப் நிர்வாகம் முறையாக அறிவிப்பு அனுப்பியுள்ளதன் மூலம், அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான செயல்முறை துவங்கியுள்ளது. முறையான அறிவிப்பு அனுப்பி, ஒரு வருடம் முடிந்த பின் விலகலானது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும். டிசம்பர் மாதம் 2 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரை, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், ஐ.நா பருவ நிலை சி.ஓ.பி 25 பேச்சுவார்த்தைகள் நிகழ உள்ளன. இப்பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது, சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நிலவி வரும் உள் நாட்டு அமைதியின்மை பிரச்னையால், அங்கு பேச்சு வார்த்தைகளை நடத்த முடியாது என, சில...

தென் கிழக்காசியாவுடன் நீடித்த கூட்டாளித்துவத்தைக் கட்டமைக்கும் இந்தியா.

(கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கிலேய உரையின் தமிழாக்கம் லட்சுமண குமார்) இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய கொள்கை' மற்றும் 'இந்திய-பசிபிக் பார்வை' ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஆசியான் தொடர்பான உச்சி மாநாடுகளில் கலந்து கொள்ள தாய்லாந்து சென்றார். 16 ஆவது இந்திய - ஆசியான் உச்சிமாநாடு, 14 ஆவது கிழக்காசிய மாநாடு மற்றும் 3 ஆவது ஆர்சிஈபி (RCEP) எனப்படும் பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார கூட்டாளித்துவ மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோதி அவர்கள் கலந்து கொண்டார். இவை தவிர, செயலுத்திக் கூட்டாளிகளுடனான தொடர் இருதரப்புக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார். முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள், பாங்காக்கில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசியான் தொடர்பான அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்றார். 6 ஆவது இந்திய, ஆசியான் உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோதி அவர்கள், பரஸ்பர நலன்களின் அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான இந்திய-பசிஃபிக...