பிரேசில் அதிபரின் இந்திய வருகையால் வலுவாகும் உறவு
தில்லி சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஆஷ் நாராயன் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் உலகமெனும் சமுத்திரத்தில் உலவும் இரண்டு திமிங்கிலங்கள் என இந்தியாவையும், பிரேசிலையும் கூறலாம். சீனாவை தவிர, உலகில் வல்லரசுகளாக உயரக்கூடிய திறம் படைத்த நாடுகள் என இந்தியாவையும் பிரேசிலையும் கூற முடியும். ஆனால் சிறிது காலத்திற்கு முன் வரை இந்தியா, குறைவான வளர்ச்சி விகிதம் மற்றும் வறுமைக்கு எப்படி பெயர் போனதாக இருந்ததோ அது போல பிரேசிலானது உயர் பண வீக்கம் மற்றும் கடனுக்கு பெயர் பெற்றிருந்தது. உலகின் பெரும் ஜன நாயக நாடாக இந்தியா திகழ்ந்தாலும் கூட மேற்கானது நமது நாட்டை பாம்பு பிடாரர்கள் மற்றும் விசித்திரமான சாமியார்கள் வசிக்கும் நிலமாகத்தான் நினைத்தனர். பிரேசில் ஒன்றும் பெரிதாக மதிக்கபடவேண்டிய நாடல்ல, அது நாளைய நாடாகும். எப்போதுமே அவ்வாறுதான் இருக்கும் என ஃபிரான்சின் சார்ல்ஸ் டி கௌவுல் பிரேசிலைப் பற்றி அலட்சியமாக கூறியிருக்கிறார். இன்றோ, இந்தியாவும், பிரேசிலும் சாதாரண நிலையில் இருந்து உலகின் முண்ணனி நாடுகளாக மாறியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இன்னாடுகளின் வெளியுறவு கொள்கை நிலைப்ப...