அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க இந்தியா அழைப்பு.
(அமெரிக்க விஷயங்கள் பற்றிய செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா.)
பாக்தாத் விமானநிலையத்தில், ஈரானின் ராணுவ உயர் அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்ந்த காசிம் சுலைமானியைக் கொல்ல அமெரிக்க எடுத்த ஒருதரப்பான முடிவு, அந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மைக்கு வித்திட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரான் மக்களிடையே அமெரிக்காவுக்கு எதிரான பொதுக்கருத்தை ஏற்படுத்தியதோடு, ஈரான் -அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புக்கள் குறையவும் வழியமைத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை திரும்பப் பெறுவது மற்றும் அணுஆயுத நாடாக ஈரான் மாறுவதைத் தடுப்பது ஆகிய அமெரிக்காவின் இரண்டு குறிக்கோள்களுக்கும் இது பாதகமாக அமைந்துள்ளது. எந்தவித முன்னறிவுப்பும் இன்றி மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஒருதரப்பான நடவடிக்கை, வளைகுடாப் பகுதியில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கு கவலையைத் தந்துள்ளது. இந்த வளைகுடா நாடுகளின் கப்பல் வழித்தடங்கள், எண்ணெய்க் கட்டமைப்புகள் ஆகியன அண்மை மாதங்களில் தாக்கப்பட்டதால், ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்க அந்நாடுகள் முயன்று வருகின்றன.
ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க வான்படைத்த ளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதன் மூலம், ஈரான் பதிலடி கொடுத்தது. ராணுவ அதிகாரியாக இருந்த தளபதி சுலைமான் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது. அல் அசாத், எர்பில் ஆகிய வான்படைத் தளங்களின் மீதான தாக்குதல்களில் எந்த அமெரிக்க அல்லது ஈராக்கித் துருப்புக்களோ காயம் அடையவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை நடத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சியாகத் தெரிகிறது. தற்போதைக்கு மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று இரானும் பூடகமாகத் தெரிவித்துள்ளது.
இந்த உறுதிப்பாடுகள் வெளியிடப்பட்டாலும், இந்த வட்டாரத்தில் அதிக அளவில் பதற்றம் தொடர்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே விரோதப்போக்கு தொடர்வதன் காரணமாக, எரியாற்றல் கப்பல் போக்குவரத்து விலை, கப்பல்களுக்குக் காப்பீட்டுக் கட்டணங்கள் ஆகியவை உயரும். இதனால்எரியாற்றல் விநியோகம் பாதிக்கப்படும். இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயைத் தற்சமயம் இறக்குமதி செய்யவில்லை. ஆனால் வளைகுடா நாடுகளிடம் இருந்து தனது எரியாற்றல் தேவையில் சுமார் 80 சதவிகிதம் வரை இந்தியா பூர்த்தி செய்து கொள்கிறது. இடையூறுகள் காரணமாக, எரியாற்றல் விலை அதிகரிக்கக் கூடும். கச்சா எண்ணெயை எடுத்துச் செல்வதற்கான செலவு, கப்பல்களுக்கான காப்பீடு ஆகிய செலவுகளும் அதிகரிக்கக் கூடும். வளைகுடாப் பகுதியில் கண்டெய்னர் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், இந்தியா, தனது கச்சா எண்ணெய் போக்குவரத்தைப் பாதுகாக்க கடற்படைத் துருப்புகளைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த கண்காணிப்பின் விளைவாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான அதிகரிக்கும் செலவுகளால் ஒட்டுமொத்த விலை அதிகரிக்கக் கூடும். இந்தக் காலகட்டத்தில் அதிகரிக்கப்படும் விலை, இந்தியப் பொருளாதாரத்துக்கு சிரமத்தைக் கொடுக்கும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு தவிர, ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் இதரத் தாக்குதல்களால், அரபுநாடுகளில் வாழும் இந்திய வர்த்தகர்கள் மற்றும் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகப்புக்கு அச்சுறுத்தல் விளையும். சில மதிப்பீடுகளின்படி, தோராயமாக, 80 லட்சம் இந்தியர்கள் இந்த வட்டாரத்தில் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு அனுப்புவதன் மூலம், இந்தியாவுக்கு 4000 கோடி டாலர் வரவு ஏற்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு இந்திய அரசின் முக்கியக் கவலைகளின் ஒன்றாகும். கடந்த காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் சண்டை நடந்த இடங்களில் இருந்து, தனது குடிமக்களை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளது.
மூன்றாவதாக, இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் அதிகரித்து வரும் வர்த்தகமும் பாதிப்படையக் கூடும். அரபுநாடுகளைத் தனது விரிவடைந்த அண்டைநாட்டுப் பகுதியாகப் பார்க்கும் இந்தியா, அப்பகுதியிலுள்ள ஓமன், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளுடன் தனது பொருளாதார தொடர்புகளை அதிகரித்து வருகிறது. அதிகரித்துவரும் பதற்றங்களால் இந்த நாடுகளுடனான உறவுகளின் வளர்ச்சி பாதிப்படையக் கூடும்.
இந்தப் பின்னணியில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பருடன் தொடர்பு கொண்டு பேசினார். வளைகுடாப் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினார்கள். வளைகுடாப் பகுதியில் இந்தியாவுக்கு உள்ள பங்கு மற்றும் ஆர்வங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரிடம் விவரித்த திரு ராஜ்நாத் சிங், அந்த வட்டாரத்தில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்த இந்தியாவின் கவலைகளையும் தெரிவித்தார். இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் இருவரும் வெளிப்படுத்தினார்கள். வளைகுடாப்பகுதியில் ஏற்பட்டுள்ள அண்மை நிகழ்வுகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் எஸ்பர் எடுத்துரைத்தார். இந்த வட்டாரத்தின் மீதான தனது கவலைகளையும் ஆர்வங்களையும் இந்தியா பகிர்ந்து கொண்டது.
பாகிஸ்தான் வழியான பாதையை விடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன், இந்தியா தனது வர்த்தகத்தை மேற்கொள்ள முக்கிய இணைப்பாகத் திகழும் சபாஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதில் இரானுக்கு இந்தியா கூட்டாளியாக உள்ளது. இரான் மீதான தடைகள் காரணமாக இந்திய நிறுவனங்கள் இந்தத் துறைமுகத்தில் மேலும் முதலீடுகளை செய்வதற்கு தயங்கும் நிலையில், இந்தத் துறைமுகத்துக்கான முதலீடுகள் மேலும் குறைந்துவிடும். இந்தியா இந்த வட்டாரத்தில் அதிக தொடர்புகளுடன் திட்டங்களைச் செயல்படுத்த இது பாதகமாக அமைந்துவிடும் வளைகுடாப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக ஆராய வேண்டிய நிலையில் உள்ள இந்தியா, அங்கு பதற்றத்தைத் தணிக்க பலதரப்பு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

Comments
Post a Comment