Posts

Showing posts from February, 2020

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சங்கமிக்கும் இந்திய, நியூஸிலாந்து உறவுகள்.

(ஜேஎன்யூ பேராசிரியர் ஷங்கரி சுந்தரராமன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி. குருமூர்த்தி.) இந்திய, நியூஸிலாந்து உறவுகளைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு நல்ல துவக்கத்துடன் ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் மும்பைக்கு நியூஸிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் இயன் லீஸ் கேல்லோவே அவர்கள் வந்திருந்தார். தொடர்ந்து, இம்மாதம், நியூஸிலாந்தின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் அவர்களும், வர்த்தக அமைச்சர் டேவிட் பார்க்கர் அவர்களும் இந்தியாவுக்குப் பயணம் மேர்கொண்டனர். வர்த்தக அமைச்சருடன் வர்த்தகக் குழு ஒன்றும் பயணித்தது. ஆங்கிலேயரின் ஆதிக்கம், நாடாளுமன்ற முறையிலான நிர்வாகம், காமன்வெல்த் அமைப்புடனான இணைப்பு என, பல அம்சங்களில் இந்தியாவும், நியூசிலாந்தும் பொதுவான வரலாற்றைப் பகிர்கின்றன. இருதரப்பு மற்றும் இந்தோ பசிபிக் பிராந்திய அளவில், பரஸ்பரம் நலனளிக்கும் விஷயங்களில் ஆழ்ந்த புரிதல்களுடனும், நுணுக்கத்துடனும் ஒருமித்த அணுகுமுறையை முன்னெடுத்துச் செல்ல இருநாடுகளும் விழைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தான், நியூஸிலாந்து துணைப் பிரதமர், “இந்தியா 2025 – உறவுகளில் முதலீடு” என்ற ...

நான்காவது மேற்காசிய மாநாடு.

(மேற்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் முகமது முடாசிர் க்வாமர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் - சத்யா அசோகன்) இந்தியாவின் முக்கிய சிந்தனையாக்க அமைப்பாக விளங்கும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனமானது “ மேற்காசியாவில் பத்தாண்டு கால அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் - சவால்கள், பாடங்கள் மற்றும் எதிர்காலப் போக்குகள்” எனும் கருவை மையமாகக் கொண்டு புது தில்லியில் நான்காவது மேற்காசிய மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் எகிப்தின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு நபில் ஃபாமி, லெபனான் நாட்டின் முன்னாள் பிரதமர் திரு ஃபாட் சினியோரா உட்பட பல சர்வதேச மற்றும் இந்திய வல்லுனர்கள் பங்கேற்று அந்தப் பிராந்தியத் தொடர்புடைய பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இரு நாள் விவாதங்கள், பிராந்தியப் பாதுகாப்பு சூழ்நிலை, வெளி சக்திகளின் பங்கு, பொருளாதாரம்,, மாறிவரும் பிரச்னைகள், மோதல்களின் தன்மைகள் மற்றும் மேற்காசியாவுடன் வளர்ந்து வரும் இந்தியாவின் உறவுகள், ஈடுபாடுகள் போன்ற கருப்பொருள்களில் ஆறு அமர்வுகளாக நிகழ்ந்தன. சாலை, போக்குவரத்து மற்றும் நெ...

விரிவான, உலகளாவிய செயலுத்திக் கூட்டாளித்துவத்தை நோக்கி நகரும் இந்திய, அமெரிக்க உறவுகள்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) விரிவான, உலகளாவிய செயலுத்திக் கூட்டாளித்துவத்தை நோக்கி இந்திய, அமெரிக்க உறவுகளை இட்டுச் செல்ல, பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும் உறுதி பூண்டுள்ளனர். இருதலைவர்களும் சிறப்புமிக்க இறையாண்மையையும், துடிப்பான ஜனநாயகக் கோட்பாடுகளையும் அனுசரிக்கும் நாடுகளின் பிரிதிநிதிகளாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளும் மக்களின் சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் விதிகளுக்குட்பட்ட ஒழுங்குமுறை ஆகிய விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் நாடுகள் என்பது சிறப்புமிக்க அம்சமாகும். இருநாட்டு செயலுத்தி உறவுகளை பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட ஆர்வங்கள், நல்லெண்ணம், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான, துடிப்பு மிக்க பரிவர்த்தனைகள் ஆகியவற்றை அச்சாரமாகக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல இருநாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர். இருநாட்டுத் தலைவர்களும் பாதுகாப்புக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளனர். கடல்சார், விண்வெளிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வ...

அமெரிக்க அதிபரின் வருகையால் அதிகரித்திருக்கும் இரு தரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவம்.  

(அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - கே. லட்சுமண குமார்) அமெரிக்க அதிபரின் 36 மணி நேர இந்தியப் பயணம் கோலாகலம் நிறைந்ததாகவும், அர்த்தம் கொண்டதாகவும் இருந்தது. இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஏழாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார். கடந்த இருபது ஆண்டுகளில் நான்கு அமெரிக்க அதிபர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்திருப்பது, அமெரிக்க - இந்திய உறவுகள் ஏறுமுகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க அதிபருடன் அவரது மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலானியா டிரம்ப், அவரது மகள் இவான்கா மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னேர் ஆகியோரும் வந்தனர். இவர்களுடன் உயர் பிரதிநிதிக் குழு ஒன்றும் வந்தது. அதிபர் டிரம்பின் வருகையை ஒட்டி, அவருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சிறப்பான வரவேற்பை அஹமதாபாத் மக்கள் வழங்கினார்கள். சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று வந்த பிறகு, அமெரிக்க அதிபரும் பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் மோடேரா (MOTERA) விளையாட்டரங்கில் 'நமஸ்தே டிரம்ப்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கூடியிருந்த 1.25 லட்ச...

அதிபர் டிரம்ப் அவர்களின் முதல் இந்தியப் பயணம்.

(ஜேஎன்யூ பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) .தனது முதல் இந்தியப் பயணத்திற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் இந்திய மண்ணில் காலடி வைத்தபோது, பிரதமர் திரு நரேந்திர மோதி அகமதாபாத் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பு அனைவரும் அறிந்ததே. ஆங்கில அரசின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதில் அண்ணல் காந்தியடிகளின் பங்கைக் கருத்தில் கொண்டு, அவரது சொந்த நிலமான குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் அவர்கள் சென்று தேசத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தியா முழுவதிலும் இருந்து வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களை அஹமதாபாத்தில் மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கத்தைத் திறந்து வைக்கக் கோரியதன் மூலம், சிறப்பான, பொருத்தமான வரவேற்பை இந்தியா அவருக்குக் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு, சில மணிநேரங்களில், பல்வேறு இந்திய மாநிலங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் வாயிலாக, இந்தியாவின் பலதரப்பட்ட சீரிய கலாச்சார பொ...

எஃப்ஏடிஎஃப் – கறுப்புப் பட்டியலில் ஈரான், பழுப்புப் பட்டியலில் தொடர்ந்து பாகிஸ்தான்.

(சிங்கப்பூர் கிழக்காசிய நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் அசிஃப் ஷூஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுப்பதன் மூலம், உலக சமுதாயத்தை சர்வதேச பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுவே, பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைக் குழுவாகும். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில், ஈரான் நாட்டைக் கறுப்புப் பட்டியலிலும், பாகிஸ்தானைப் பழுப்புப் பட்டியலிலும் தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. பாரீஸைத் தலைநகராகக் கொண்டு, 40 உறுப்பு நாடுகளுடன் செயல்படும் இக்குழு, உலக அளவில் நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து, பணமோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நாடுகளைப் பட்டியலிட்டு, அந்நாடுகளுடனான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த எச்சரிக்கையை உலக நாடுகளுக்கு அறிவிக்கிறது. அதன்படி, கறுப்புப் பட்டியலில் இடப்பட்ட நாடுகளுடன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது ஆபத்தானது என்றும், பழுப்புப் பட்டியலில் இடப்பட்ட நாடுகள், சற்று தீவிரம் குறைந்து, பண மோசடி மற்றும...

 கறுப்பல்ல – பழுப்பு :  பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் மற்றுமொரு வாய்ப்பு

பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனத்தின் தெற்காசிய மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் அசோக் பெஹுரியா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாநகரில் உலகெங்கிலிமிருந்து 205 நாடுகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட தீவிரவாத நிதி கட்டுப்பாட்டு நடவடிக்கை பணிக்குழுவின் கூட்டத்தில், பாகிஸ்தான பழுப்பு பட்டியலிலிருந்து வெளி வருவதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா என்பது குறித்து யூகங்கள் நிலவிக்கொண்டிருந்தன. ஏனைய பிரச்னைகள் குறித்த விவாதங்களுக்கிடையே, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவிக்கு எதிராக செயல்படுவது குறித்த தங்களது நிலைப்பாடுகளை பாகிஸ்தானும், வேறு சில நாடுகளும் சரியான முறையில் செயல்படுத்துகின்றனவா, அந்நிலைப்பாட்டில் எட்டப்பட்டிருக்கும் முன்னேற்றம் போன்றவை குறித்தும் எஃப் ஏ டி எஃப் விவாதிக்க முயன்றது. பழுப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் நாடுகள் உலக நிதி அமைப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக கருதப்படுகின்றன. ஜூன் 2018 முதல் பாகிஸ்தானும் பழுப்பு பட்டியலில்தான் இருந்து வருகிறது. 2020 பிப்ரவரி 19 ஆ...

ஆஃப்கன் அதிபர் தேர்தலில் அஷ்ரஃப் கானி வெற்றி.

(தெற்காசியா குறித்த செயலுத்தி நிபுணர் டாக்டர் ஸ்ம்ருதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா.) ஆஃப்கானிஸ்தானில், கடந்த 2019 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் தேதியன்று, கடுமையான போட்டியுடன் நடைபெற்ற அதிபருக்கான தேர்தலின் முடிவுகள், பிப்ரவரி 18 ஆம் தேதி, கிட்டத்தட்ட ஐந்துமாத காலதாமதத்துக்குப் பிறகு வெளியானது. தற்போதைய அதிபர் அஷ்ரஃப் கானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது முக்கியப் போட்டியாளரான டாக்டர் அப்துல்லா அப்துல்லா இந்தத் தேர்தலின் முடிவுகளை ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், ஆஃப்கானிஸ்தானில் அடுத்த அரசாங்கத்தைத் தாம் அமைக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு மிகக் குறைவாக இருந்தது. பூர்வாங்க வாக்குகள் எண்ணிக்கையில் திரு கானி முன்னணியில் இருந்தார். வாக்குப்பதிவு விகிதம் சர்ச்சைக்குரியதாக உள்ளதாக போட்டி வேட்பாளர்கள் கூறியதையடுத்து, 15 சதவிகித வாக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், 50.64 சதவிகித வாக்குகள் பெற்ற அதிபர் கானி, தேர்தலில் வெற்றி...

பன்முகத்தில் பரிமளிக்கும் இந்திய, ஜெர்மானிய உறவுகள்.

(மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி.) மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் ஜெர்மனி சென்றிருந்தார். அப்போது அவர், ஓமன், ஸ்பெயின், குவைத், ஆர்மீனியா, சவூதி அரேபியா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து அளவளாவினார். சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களையும் அவர் சந்தித்துப் பேசினார். ஐரோப்பிய மன்றத்தின் தலைவரையும் அவர் சந்தித்தார். பின்னர் பெர்லின் சென்றடைந்த இந்திய வெளியுறவு அமைச்சர், ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், பாதுகாப்பு அமைச்சர் அன்னெக்ரெட் கிராம்ப் கேர்ரன்பார் ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவு குறித்த பல்வேறு விஷயங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இருதரப்புக்கும் பரஸ்பரம் நலனளிக்கும் விஷயங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதித்தார். சர்வதேச மேடையில் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே, வலுவான, ஒத்துழைப்புமிக்க கூட்டாளித்துவம் சிறப்புற விளங்குகிறது. இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, ஃபிரான்சுடன் இண...

காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் தலையீட்டிற்கு இந்தியா கண்டனம்.

(துருக்கி மற்றும் சிஐஎஸ் நாட்டு விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) துருக்கி அதிபர் ரிசெப் டய்யிப் எர்டோகன் அவர்கள், அண்மையில் மேற்கொண்ட பாகிஸ்தான் பயணத்தின்போது, காஷ்மீர் நிலை குறித்த தனது கவலைகளை வெளியிட்டார். அண்மையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரும் காஷ்மீரில் இக்கட்டான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.தீர்மானங்களின் அடிப்படையில், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப, தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். காஷ்மீர் மக்களுக்குத் தாம் ஆதரவாக இருப்பதாகவும், துருக்கியில் முதலாம் உலகப் போரின்போது, அயல்நாட்டு ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியைப் போல காஷ்மீர் போராட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டது, அபத்தமானது. துருக்கி நாட்டுத் தூதரை அழைத்து, அந்நாட்டு அதிபரின் விமரிசனத்துக்குத் தனது தீவிர கண்டனத்தை இந்தியா தெரிவித்துள்ளது. துருக்கி அதிபரின் விமரிசனம், வரலாறு மற்றும் ராஜீய விவகாரங்கள் குறித்த சரியான புரிதல் இன்மையைப...

நாளேடுகள் நவில்வன.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர பணிக்கால சேவை வழங்க உச்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து, தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ”இந்திய ராணுவத்தில் பணியாற்றும் குறுகிய பணிக்கால சேவையில் (ஷார்ட் சர்வீஸ் கமிஷன்) இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர பணிக்கால சேவை (பர்மனென்ட் சர்வீஸ் கமிஷன்) வழங்கப்படுவதுடன் படைகளுக்குத் தலைமை தாங்கும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ராணுவத்தில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முயற்சியின் மிகப் பெரிய வெற்றி என்று இதைக் கருதலாம். இந்திய ராணுவத்தில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவது புதிதொன்றுமல்ல. ராணுவத்தின் 10 படைப் பிரிவுகளில் படை வீரர்களுக்குத் தலைமை தாங்கி பெண்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ராணுவத்தில் பெண்கள் பொறுப்பான பதவிகளை வகிப்பது புதிதொன்றுமல்ல. 1995 முதல் இஸ்ரேலிலும், 2001 முதல் ஜெர்மனியிலும் நேரடி போர்ப் பிரிவில் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். ராணுவத்தின் ...

பாதுகாப்பு தொடர்பான 2020 ஆம் ஆண்டின் மியூனிக் மாநாடு - முக்கிய அம்சங்கள்.

(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி நிபுணர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா) 2020 ஆம் ஆண்டின் மியூனிக் பாதுகாப்பு மாநாடு, ஜெர்மனியின் மியூனிக் ந்கரில் கடந்த வாரம் நடைபெற்றது. ’மேற்கத்தியம் இல்லாத நிலை’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது. மேற்கத்திய நாடுகளின் மதிப்புகள் மற்றும் செயலுத்தி முறைகளுடன் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் அசாதாரன நிலைமை காரணமாக இந்த கருப்பொருள் ஏற்பட்டது. இந்த மாநாட்டில் பேசிய வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவின் தலைமைச் செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பெர்க், அமெரிக்கா தனது கூட்டாளிகள் மற்றும் உலக நாடுகளின் கவலைகளில் இருந்து விலகி இருப்பதாகச் சொன்னார். ஐரோப்பிய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அவர்கள், அட்லாண்டிக் கடலை ஒட்டிய நாடுகள் கூட்டணி இல்லாமல் போனது என்று அளவுமீறி வலியுறுத்தப்பட்டதாகச் சொன்னார். மேற்கத்திய நாடுகள் வெற்றிபெற்று வருவதாகவும், அதுவும் கூட்டாக வெற்றி பெறுவதாகவும் அவர் சொன்னார். நேட்டோ மூலமாக ஐரோப்பிய எல்லைகளைப் பாதுகாப...

இந்திய போர்ச்சுகல் உறவுகளில் புதிய அத்தியாயம் துவக்கம் .

(இட்சா செய்தி ஆய்வாளர் ராஜரிஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) போர்ச்சுக்கீசிய அதிபர் மார்சிலோ ரிபெலோ டிசௌஸா அவர்கள், இந்தியாவுக்கு வெற்றிகரமான பயணம் மேற்கொண்டார். பலதரப்பட்ட விஷயங்களில் இருதரப்புக்கும் பரஸ்பரம் நலனளிக்கும் 14 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது அவரது பயணத்தின் சிறப்பம்சமாக விளங்கியது. இந்த ஒப்பந்தங்கள், கடல்சார் போக்குவரத்து, துறைமுக மேம்பாடு, புதிய தொழில் துவக்கம், விண்வெளி, ராஜீய விவகாரங்களில் பயிற்சி, அறிவியல் ஆராய்ச்சி, பொதுத்துறைக் கொள்கை ஆகியவை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக, மறு ஆய்வுக்கும், மாறுதல்களுக்கும் உட்பட்டு வந்த துடிப்பு மிக்க இந்திய, போர்ச்சுக்கல் உறவுகளைப் பிரதிபலிக்கும் விதமாக, போர்ச்சுக்கல் அதிபரின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது. இருநாடுகளிலும் ஏற்பட்டு வரும் முக்கிய மாறுதல்களின் உந்துதல் மூலம், இருதரப்பு உறவுகளின் முழு சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ள இருநாடுகளும் முற்பட்டுள்ளன. இன்றைய எதிர்பார்க்க முடியாத, நிலையற்ற சூழலில், பலதரப்பட்ட உலகளாவிய மற்றும் இருதரப்பு விஷயங்களில்...

நாடாளுமன்ற நடவடிக்கைகள்

மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி நாடாளுமன்ற முதலீட்டாளர்கள் இந்திய அரசின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நிதிநிலை அறிக்கை 2020-21 விவாதத்திற்கு பதிலளிக்கும் போது தற்போது வங்கிகள் முதலீட்டை வரவேற்கத் தயாராக உள்ளது என்று கூறினார். வருகின்ற 2024-25 ஆண்டிற்குள்ளாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கட்டமைப்பு துறைகளுக்காக அரசு செலவிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரிகள் வசூலிப்பதில் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதாகவும் 2014-15 ஆண்டில் 2 லட்சம் கோடி டாலர்களாக இருந்த இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 2.9 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு 2019-20 ஆண்டில் உயர்ந்துள்ளது என உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க நல்லெண்ண நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாகவும், அரசு அதனை பலப்படுத்த தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் நிதியமைச்சர் கூறினார். கொரானா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய அரசு தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்...

மீண்டும் கண்துடைப்பில் இறங்கும் பாகிஸ்தான்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி.குருமூர்த்தி.) பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், ஹஃபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளித்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் அவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவரும், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களான ஜமாத் உத் தாவா மற்றும் லஷ்கர் ஏ தொய்பா ஆகியவற்றின் தலைவருமான ஹஃபீஸ் சயீத் மீது, பஞ்சாப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்த குற்றச்சாட்டின் பேரில் 23 குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஹஃபீஸ் சயீத் மற்றும் உதவியாளர் ஸஃபர் இக்பால் ஆகியோர் மீது, பயங்கரவாதத்துக்கு நிதியளித்த இரண்டு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று, பாகிஸ்தானின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அப்துல் ரௌஃப் வாட்டோ கூறியுள்ளார். இரண்டு வழக்குகளிலும் மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள ஹஃபீஸ் சயீத், இருதண்டனைகளும் ஒன்றாக நிறைவேற்றப்படுவதால், ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே சிறையிடப்படுவார் எ...

இந்திய - ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டம்.

(பாதுகாப்பு ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ.வெங்கடேசன்.) லக்னோவில் நடைபெற்ற இந்திய பாதுகாப்புக் கண்காட்சியின் போது, முதல் இந்திய - ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான, இந்தியாவின் முக்கிய முன் முயற்சியாக இது விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளுடன் 1950 ஆம் வருடம் முதல் இருந்து வரும் பாதுகாப்புக் கூட்டாளித்துவத்தின் அடிப்படையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு உபகரணங்களை ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு புதிய வாய்ப்பையும் இந்தக் கூட்டம் ஏற்படுத்தியுள்ளது. 14 ஆபிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 19 பாதுகாப்பு மற்றும் சேவைத்துறைத் தலைவர்கள் மற்றும் 8 நிரந்தர செயலாளர்கள் உள்பட, 154 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தற்போது அமைதி மற்றும் பாதுகாப்பு ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. “துப்பாக்கிகள் இல்லாத ஆப்...

இருதரப்பு உறவுகளுக்கு வலு சேர்க்கும் இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள், உயர்மட்டக் குழுவுடன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்ட இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களைச் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோதி அவர்களை சந்தித்த இலங்கைப் பிரதமர், அவருடன் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்களும் இலங்கைப் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். நினைவுக்கெட்டாத பழங்காலந்தொட்டே, அண்டைநாடாகவுள்ள இலங்கையுடன், இந்தியா நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கூறினார். கலாச்சாரம், மதம், ஆன்மீகம், கலை மற்றும் மொழி ரீதியாக, இருதரப்பு உறவுகள் பிணைக்கப்பட்ட வரலாற்றை இருநாடுகளும் பெற்றுள்ளன என்று அவர் மேலும் கூறினார். பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும், கடந்த கால மற்றும் எதிர்காலப் பிணைப்புக்களை அனைத்துப் பகுதிகளிலும் இருநாடுகளும் பெற்றுள்ளன என்று பிரதமர் ந...

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்

யோகேஷ் சூத், பத்திரிக்கையாளர் தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமர் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து முடிக்கப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மற்ற முக்கியப் பணிகளின் பக்கம் கவனம் செலுத்தின. எதிர்பார்த்ததைப் போலவே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டால், இந்த பட்ஜெட் அமர்வு, சில நேரங்களில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டது. அமர்வால் அனுமதிக்கப்படும் அனைத்து விஷயங்களைப் பற்றி பேசவும் தயாராக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த அமர்விற்கான அரசாங்க சட்டப்பூர்வ நடவடிக்கை நிரலில், 45 மசோதாக்களும் ஏழு நிதி அறிக்கைகளும் அடங்கும். பல விஷயங்கள் தொடர்பாக அரசாங்ககத்தை சூழ்ந்து கொண்டு தாக்க எதிர்கட்சிகள் தயாராக உள்ளன. சிஏஏ, என்.ஆர்.சி மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் மேல் சபையான மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ், இடவிசாரி, டி.எம்.சி, தி.மு.க, எஸ்.பி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், இன்னும் சிலரும், அவைக்கு மத்தியில் வந்து கோஷங்களை எழுப்பினர். அமளிக்கு மத்தி...