எஃப்ஏடிஎஃப் – கறுப்புப் பட்டியலில் ஈரான், பழுப்புப் பட்டியலில் தொடர்ந்து பாகிஸ்தான்.
(சிங்கப்பூர் கிழக்காசிய நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் அசிஃப் ஷூஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுப்பதன் மூலம், உலக சமுதாயத்தை சர்வதேச பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுவே, பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைக் குழுவாகும். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில், ஈரான் நாட்டைக் கறுப்புப் பட்டியலிலும், பாகிஸ்தானைப் பழுப்புப் பட்டியலிலும் தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. பாரீஸைத் தலைநகராகக் கொண்டு, 40 உறுப்பு நாடுகளுடன் செயல்படும் இக்குழு, உலக அளவில் நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து, பணமோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நாடுகளைப் பட்டியலிட்டு, அந்நாடுகளுடனான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த எச்சரிக்கையை உலக நாடுகளுக்கு அறிவிக்கிறது. அதன்படி, கறுப்புப் பட்டியலில் இடப்பட்ட நாடுகளுடன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது ஆபத்தானது என்றும், பழுப்புப் பட்டியலில் இடப்பட்ட நாடுகள், சற்று தீவிரம் குறைந்து, பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நாடுகளாகவும், இருப்பினும் மேலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ள நாடுகள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஈரான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட அதே தினத்தில் அந்நாட்டிற்கு எதிராக, கறுப்புப் பட்டியலில் தொடர்ந்து இருத்தி வைக்கும் முடிவை எஃப்ஏடிஎஃப் அறிவித்துள்ளது. அந்நாட்டின் சக்தி வாய்ந்த கார்டியன்ஸ் கவுன்ஸில், பெரும்பான்மையான மறுசீரமைப்பு ஆதரவு வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தி வைத்ததன் விளைவாக, கன்சர்வேடிவ் கட்சி இத்தேர்தலில் பெரும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளிநடப்பு செய்ததோடு, தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது சுமத்தியதன் விளைவாக, கடும் பொருளாதாரப் பிரச்சனைகளை ஈரான் சந்தித்து வருகிறது. இதனை எதிர்த்து, உள்நாட்டில் பரவலாகப் போராட்டம் வெடித்ததால், இத்தேர்தலில் அக்கறையின்மை தென்பட்டது.
ஐரோப்பாவுடனான நிதி ஏற்பாட்டை மாற்றாகக் கொண்டு, அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர ஈரான் மேற்கொள்ளும் முயற்சிக்கு, எஃப்ஏடிஎஃப் இன் கறுப்புப் பட்டியல் பின்னடைவையும், சிக்கலையும் ஏற்படுத்தும். இத்துடன், கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியும் சேர்ந்தால், அது ஈரான் – அமெரிக்கா மோதலை மேலும் தீவிரமடையச் செய்யும். ஈரான் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படுவதற்கே, கன்சர்வேடிவ் கட்சிக்கும், மறுசீரமைப்பினருக்கும் இடையேயான பூசல் தான் காரணம். இதன் விளைவாக, எஃப்ஏடிஎஃப் இன் கறுப்புப் பட்டியலிலிருந்து ஈரானை விடுவிக்கத் தேவையான நாடாளுமன்றத் தீர்மானம் நிறைவேற வழியில்லாத வகையில், மறுசீரமைப்பினரின் ஆதிக்கத்திலுள்ள நாடாளுமன்றத் தீர்மானத்தை நிறைவேறவிடாமல், கன்சர்வேடிவ் கட்சியின் ஆதிக்கத்திலுள்ள கார்டியன்ஸ் கவுன்ஸில் தடுத்து விட்டது.
அமெரிக்காவின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் மன்றாடிய போதிலும், அந்நாடு பழுப்புப் பட்டியலில் தொடர்ந்து இருத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், பிறநாடுகளிலும் தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, நிதியளிக்கும் வரலாற்றைப் பாகிஸ்தான் கொண்டுள்ளதை உலகம் நன்கு அறியும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது நாட்டிலிருந்து பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதை வேரோடு அழிப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில், அந்நாட்டைக் கறுப்புப் பட்டியலில் இணைப்பதிலிருந்து, தற்போதைக்கு எஃப்ஏடிஎஃப் விலக்கு அளித்துள்ளது.
2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை, எஃப்ஏடிஎஃப் இன் பழுப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தானை, மீண்டும் 2018 ஆம் ஆண்டில், அமெரிக்கா வற்புறுத்தியதன் பேரில், பழுப்புப் பட்டியலில் இணைத்தது எஃப்ஏடிஎஃப். போதிய அளவு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அமெரிக்கா கண்டித்த நிலையில், அந்நாட்டிற்கு சீனா, மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆதரவாக இருந்ததால், பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டது. தாலிபான்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, தங்கள் துருப்புக்களை ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்பப் பெற விழைவதும், அதற்கு பாகிஸ்தானின் உதவி அமெரிக்காவுக்குத் தேவைப்படுவதும், ஈரானைத் தனிமைப்படுத்த பாகிஸ்தானின் பங்களிப்பை அமெரிக்கா எதிர்பார்ப்பதும், பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதற்குக் கூடுதல் காரணங்களாகும். ஏற்கனவே பொருளாதாரத்தில் மிகுந்த பின்னடவைக் கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு, எஃப்ஏடிஎஃப் இன் கறுப்புப் பட்டியல் இணைப்பு கடும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும்.
கறுப்புப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவதால், ஈரானுக்குப் பொருளாதார இன்னல்கள் தொடர்வது உறுதி. அமெரிக்காவுடன் ஏதாவது பேச்சுவார்த்தை மூலம், சமரசம் கிட்டினாலொழிய, ஈரான் கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது சாத்தியமில்லை.. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி, பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தி நாட்டை அமைதிப் பாதையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இட்டுச் செல்வார் என நம்புவோம்.

Comments
Post a Comment