நாடாளுமன்றத்தில் நடந்தவை சென்ற வாரம்
பத்திரிக்கையாளர் வி. மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் பிரதமர் திரு நரேந்திர மோதி, அரசானது இந்தியாவை வளர்ச்சி பாதையில் புது உயரங்களுக்கு இட்டு செல்ல உள்ளதாகவும், ஒரு நாடு- ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கூறினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததிற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற் உதவுமாறு அவர் எதிர் கட்சிகளை கேட்டுக் கொண்டார். இந்தியா தனது முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளத்திற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட்டு விடக்கூடாது என்று அவர் கூறினார். நாட்டை எதிர் கொண்டிருக்கும் சவால்களை அரசும், எதிர் கட்சிகளும் இணைந்து செயல்பட்டு சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க அவர் அழைப்பு விடுத்தார். ஊழல், விவசாயிகள் பிரச்னை, வேலை வாய்ப்பு என்று பல விஷயங்கள் குறித்து பேசிய அவர், நாட்டில் ஊழலுக்கு இடமே இருக்காது என்றும், தனது அரசானது ஊழலுக்கு ...