ஒசாகாவில் பிரிக்ஸ் தலைவர்களின் முறைசாரா சந்திப்பு.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

ஜப்பானில் ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கிடையே, பிரிக்ஸ் நாடுகளான பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் சந்தித்தனர். பிரதமர் திரு நரேந்திர மோதி, பிரேஸில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, ரஷ்ய அதிபர் திரு விளடிமிர் புடின், சீன அதிபர் திரு ஷீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமஃபோசா ஆகியோர், ஜி-20 உச்சிமாநாட்டிற்குத் தலைமை ஏற்றதற்கு ஜப்பானுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் படைப்பு, உள்கட்டமைப்பு, பருவ நிலை, அனைவருக்குமான சுகாதார வசதி, வயதானோர் மற்றும் நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு ஜி-20 உச்சிமாநாட்டில் ஜப்பான் முன்னுரிமை அளித்தமைக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

ஸ்திரமடைந்து வரும் உலகப் பொருளாதாரம், நடப்பாண்டு இறுதியிலிருந்து தொடங்கி, அடுத்த 2020 ஆம் ஆண்டிலும் மேலும் வளர்ச்சி பெறும் என்று பிரிக்ஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. வர்த்தக மற்றும் புவிசார் இறுக்கங்கள், பொருட்கள் விலையில் ஏற்ற இறக்கங்கள், சமநிலையற்ற தன்மை, போதிய அளவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின்மை, நிதி வசதியில் அதிக கட்டுப்பாடுகள் போன்ற சவால்கள் மலிந்துள்ளன. உலகப் பொருளாதாரத்தில் சாதகமான சூழல் இருந்தால்தான் சர்வதேச வர்த்தகத்தில் நீடித்த வளர்ச்சி இருக்கும் என்று பிரிக்ஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.