Posts

Showing posts from August, 2019

பாகிஸ்தானில் குழப்பம்

கெளல் ஜலாலி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி. ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்னமும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. போர் துவங்குவோம் என்று பேசிவந்த பாகிஸ்தான் அரசு மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் சரியான ஆதரவு கிடைக்காத நிலையில் தடுமாறி வருகின்றது பாகிஸ்தான் அரசு. இவ்வாறாக எந்த இஸ்லாமிய நாட்டின் ஆதரவும் கிடைக்காத நிலையில், அனைத்து நாடுகளும் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவிக்கவே பாகிஸ்தான் அரசு குழப்பத்தில் உள்ளது. துருக்கி மற்றும் மலேசியா நாடுகள் மட்டுமே பாகிஸ்தான் குரலுக்கு செவி சாய்த்த போதிலும் பாகிஸ்தான் ஆதரவு குரலான ஜாகீர் நாயக்கிற்கு எதிராக தடைகளை விதித்த மலேசிய அரசு, கூட்டு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானிற்கு ஆதரவாக குரல் கொடுக்காதது பாகிஸ்தானை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது, சீனா மற்றும் பாகிஸ்தானின் முதலை கண்ணீருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாது...

கூட்டுறவில் புதுத்தடம் பதிக்கும் இந்தியாவும் ரஷ்யாவும்.

(ரஷ்யாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மீனா சிங் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் இரண்டாவது பதவிக் காலத்தில் இந்திய, ரஷ்ய உறவுகள் புதிய உச்சத்தைத் தொடவிருக்கின்றன. ஐந்தாவது வருடாந்திர கிழக்குப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் தலைமை விருந்தாளியாக பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பங்கேற்கிறார். தவிர, செப்டம்பர் மாதம் நான்கு முதல் ஆறாம் தேதி வரை, விளாடிவாஸ்டாக்கில் நடைபெறவுள்ள 20 ஆவது வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நிலவி வரும் சிறப்புமிக்க, தனித்துவமான செயலுத்திக் கூட்டாளித்துவத்துக்கு புது மெருகேற்றி, புதிய பாதைகளிலும் உறவுகளைத் தொடர ஏதுவான வாய்ப்புக்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு ஆதரவு தெரிவித்த முன்னிலை நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அறிவித்த ரஷ்யா, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அனைத்து சர்வதேச மேடைகளிலும் ஆதரவளித்துள்ளது. முன்...

ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி – அதிபர் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி பியாரிட்ஸில் நடந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோதி அவர்களுக்கு ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்வது, பருவ நிலை மாற்றம் போன்ற பல விஷயங்களில் இரு நாடுகளுக்கும் கருத்தொற்றுமை நிலவுவது குறிப்பிடத்தக்கது. இந்த உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வாக இந்தியப் பிரதமர்- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பின் போது இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். உலக வர்த்தக நிறுவனத்தால் வளரும் நாடு என்று அடையாளப்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியா அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்தியிருப்பதாக டிரம்ப் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளதன் பின்னணியில் இந்தச் சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்காவும் இந்தியாவிலிருந்து இறக்கும...

“ ஜப்பான் தென்கொரியா வர்த்தக பதட்டம்”

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் டிட்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன். கிழக்கு ஆசியாவின் இரண்டு முக்கிய பொருளாதார நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டும் வர்த்தக பதட்டங்களில் சிக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, ஜப்பான், ஹைட்ரஜன் ஃப்ளோரைடு எரிவாயு, புளோரிட்டபாலிமைடு, மற்றும்உயர் தொழில்நுட்ப தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் புகைப்பட எதிர்ப்புத்திறன், போன்ற முக்கிய ரசாயனமூன்று ரசாயனப் பொருட்களை தென்கொரியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் வர்த்தக கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ராணுவ பயன்பாட்டிற்காகவும் உபயோகப்படுத்தப்படும் இந்த ரசாயனப் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவர ஜப்பான் கருதுகின்றது . ஜப்பானின் நண்பக மற்றும் விருப்ப வர்த்தக கூட்டாளி நாடுகள் பட்டியலில் இருந்து தென்கொரியாவை நீக்கியுள்ளது, ஏற்றுமதி செய்யப்படும் 1500 மிகமுக்கிய பொருட்கள் மீது தீவிர சோதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், இது சர்வதேச விநியோக சங்கிலி...

ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆன்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) ஜி-7 உச்சிமாநாடுகள், 1975 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸால் துகக்கப்பட்டன. தீவிரமான உலகளாவியப் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒரு எளிய தளத்தை, உலகின் மிகப் பெரிய ஏழு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கும் நோக்குடன் இது அமைக்கப்பட்டது. ஜி-7 நாடுகளைத் தவிர, இந்த பேச்சுவார்த்தைகளில், தேவையான முக்கிய இடங்களில், மற்ற முக்கிய நாடுகளையும் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஜி-7 பேச்சுவார்த்தைகளில் உலகளாவிய தாக்கம் ஏற்படும். 1989 ஆம் ஆண்டு, ஃபிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில், பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி உதவி ஆகியவற்றை எதிர்த்து நடவடிககைகள் எடுக்க, எஃப்.ஏ.டி.எஃப் என்ற நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டது. சமீப ஆண்டுகளில், எப்.ஏ.டி.எஃப்- இன் உறுப்பினர் என்ற முறையில், இந்தியா, இந்தத் தளம் மூலமாக, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்கான நிதி வழங்கலை நிறுத்த, சர்வதேச ஒத்துழைப்பை நாடியுள்ளது. ஃபிரான்ஸின் பியாரிட்ஸில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள, ...

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பிரதமரின் அமீரக, பஹ்ரைன் நாட்டுப் பயணம்.

(மேற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸ்ஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) சென்ற வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் அமீரகத்துக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாகவும், பஹ்ரைன் நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளது. வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நெருக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. அமீரகத்தில், பிரதமர் அவர்கள், அபுதாபியின் இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களைச் சந்தித்து, முக்கிய இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக விஷயங்கள் குறித்து விவாதித்தார். “ஆர்டர் ஆஃப் சயீத்” என்ற அந்நாட்டு உயரிய சிவில் விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இவ்விருது, இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் ஆற்றிய பங்களிப்பிற்கும் அவரது தலைசிறந்த தலைமைப் பண்பிற்கும் அடையாளமாக வழங்கப்படுகிறது. அமீரகத்தில் ரூபே கார்டை பிரதமர் துவக்கி வைத்தார். வளைகுடா நாடுகள...

இந்திய-ஜாம்பிய உறவுகளை வலுப்படுத்தும் ஜாம்பிய அதிபரின் வருகை

ஆப்ரிக்காவுக்கான செயலுத்தி ஆய்வாளர் முனைவர் நிவேதிதா ரே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பை ஏற்று, ஜாம்பிய அதிபர் திரு எட்கர் சாக்வா லுங்கு இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்திருந்தார். புதிய அரசு அமைந்தபிறகு சாம்பிய அரசு தலைவரின் முதல் பயணமாகவும், அதிபர் லுங்கு இந்தியாவுக்கு முதல் முதலாக வரும் அரசு முறை பயண்மாகவும் இந்த வருகை அமைந்தது. 16 ஆண்டுகளுக்கு முன்பாக ஏப்ரல் 2003ல் அதிபர் லெவிம்வானவாசா இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்ததற்கு பிறகு நிகழும் அதிபர் அளவிலான அரசு முறை வருகை இதுவேயாகும். ஆப்ரிக்கா நாடுகளுடனான உறவுகளில் இந்தியாவின் முன்முயற்சி கொள்கை அடிப்படையில் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது. மூன்றாவது இந்திய ஆப்ரிக்க மன்ற உச்சி மாநாட்டு செயல்முறைக்கு பின்னர், இந்திய அரசியல் தலைவர்கள் ஆப்ரிக்க நாடுகளுக்கு 32 அரசு முறை பயணங்களை மேற்கொண்டுள்ளனர், ஆப்ரிக்க தலைவர்கள் இந்தியாவிற்கு 35 முறைகள் வருகை தந்துள்ளனர். மேலும், குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் சாம்பியாவிற்கு அரசு முறை பயணமா...

உத்வேகம் பெறும் இந்திய- பிரான்சு உறவுகள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஐரோப்பியக் கல்வி மையத்தின் தலைவர் முனைவர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி இந்திய-ஃப்ரான்ஸ் இருதரப்பு உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையேயான 20 வருட பழமையான செயலுத்திக் கூட்டாளித்துவ ஒப்பந்தத்தையும், பிரதமரின் இவ்வார ஃப்ரான்ஸ் பயணம் வலுப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள அண்மை நிகழ்வுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டுக்குச் ஆதரவாக ஃப்ரான்ஸ் கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று கூறியதுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் வலுவான அடிப்படையிலும் பல ஆண்டுகள் வலுவான ஒத்துழைப்பின் அடிப்படையிலுமானது இரு நாட்டு உறவுகள் என்பதைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேலும் முன்னேற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒத்துழைப்பிற்கு, திறன் மேம்பாடு, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியன மு...

இந்தியா நேபாளம் இடையில் புதிய உச்சங்களைத் தொடும் இருதரப்பு உறவுகள்.

(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) இந்தியா நேபாளம் கூட்டு ஆணையத்தின் ஐந்தாவது சந்திப்பு சமீபத்தில் காட்மாண்டுவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் மூலம், இருதரப்பு உறவுகளின் வரம்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பு வசதிகள், பொருளாதாரக் கூட்டுறவு, வர்த்தகம், போக்குவரத்து, எரியாற்றல், நீர்வளம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இந்த சந்திப்பில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது. இந்த சந்திப்பிற்கு இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இணைந்து தலைமை வகித்தார்கள். முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள், வங்கதேசத்தில், அந்நாட்டுத் தலைவர்களுடன் பரஸ்பர விருப்பங்கள் மற்றும் பிராந்தியப் பிரச்சனைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். பின்னர், அவர் டாக்கவிலிருந்து காட்மாண்டுவுக்குப் புறப்பட்டுச் சென்றார். கூட்டு ஆணைய சந்திப்பிற்கு முன்னர், திரு. ஜெய்ஷங்கர், நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி அவர்களை சந்தித்தார். இவ்வாண்ட...

இந்திய வெளியுறவு அமைச்சரின் முதல் வங்கதேசப் பயணம்.

(ஸ்டேட்ஸ்மன் சிறப்புப் பிரதிநிதி, திபங்கர் சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் பங்களாதேஷ் நாட்டிற்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணமானது, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அவர்களை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள, பிரதமர் திரு நரேந்திர மோதி விடுத்துள்ள அழைப்பை வெளிப்படுத்தும் ஒரு மரியாதை நிமித்தப் பயணமாக அமைந்திருந்தது. இருநாடுகளுக்கும் இடையே, இருதரப்பு உறவுகள் தொடர்ந்து முன்னேறி வரும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. பங்களாதேஷ் பிரதமருடன் ஏற்பட்ட, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் சந்திப்பானது, ஆக்கப்பூர்வமான வகையில் அமைந்திருந்தது. இருநாட்டுப் பிரதமர்களுக்கும் இடையே அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருக்கும் சந்திப்பிற்கான முன்னேற்பாடாக இந்தப் பயணம் அமைந்தது. ’கணோபந்தன்’ என்ற பெயர் கொண்ட ஷேக் ஹசீனா அவர்களின் அரசாங்க இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, டாக்டர் ஜெய்சங்கர், பிரதமர் திரு நரேந்திர மோதியின் அழைப்புக் கடிதத்தை சமர்ப்பித்தா...

ஐ.நா பாதுகாப்புச் சபையில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்.

(மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி, ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல், மீண்டும் படுதோல்வி அடைந்துள்ளது. சீனாவின் நிரந்தர நட்பு நாடான பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில், 15 உறுப்பினர்களின் அவசர சந்திப்பு ஒன்றிற்கு சீனா அழைப்பு விடுத்தது. இந்த சந்திப்பில், சீனா மட்டும்தான், ஜம்மு - காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளைப் பற்றி கவலை தெரிவித்தது. மற்ற அனைத்து முக்கிய நாடுகளும், இந்த விஷயத்தை இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானை அறிவுறுத்தின. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப் பிரிவை இந்தியா நீக்கியபின், பாகிஸ்தான் பதற்றத்தில் காணப்படுகின்றது. ஜம்மு-காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் கனவை, இந்தியாவின் இந்த முடிவு கலைத்து விட்டது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் தனது உள்நாட்டு விவகாரம் என இந்தியா விவரித்ததுள்ளதை அமெரிக்க நிர்வாகம் க...

இருதரப்பு உறவுகளை வலுவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோதியின் பூட்டான் பயணம்.

(பூட்டான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் நிஹார் ஆர் நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பூட்டான் பிரதமர் டாக்டர் லோட்டே ஷெரிங் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், பூட்டானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன் உயர்நிலைக் குழுவும் பயணித்தது. பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்றபின் மோதி அவர்கள் பூட்டானுக்கு மேற்கொண்ட முதல் அரசுமுறைப் பயணமாகும் இது. கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மேற்கொண்ட இரண்டாவது பூட்டான் பயணமாகவும் இது அமைந்துள்ளது. இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றபின், மோதி அவர்கள் இலங்கைக்கும் மாலத்தீவுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம், அண்டைநாடுகளுக்கு முதலிடம் என்ற இந்தியாவின் கொள்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மேடைகளில் எடுத்துச் செல்ல பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க தீவிர நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியுள்ள வேளையில், பிரதமரின் பூட்டான் பயணம் அமைந்துள்ளது. முன்னதாக, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்...

அமைதி கிட்டாமல் அல்லாடும் யேமன்

முனைவர் லக்ஷ்மி பிரியா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் ஆடன் ஆட்சி கவிழ்ப்பு சம்பவத்திற்கு பிறகு, சவுதி முன்னெடுக்கும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள யேமன் தனி பிரிவினவாத இயக்க தலைவர் விருப்பம் தெரிவித்திருப்பதன் மூலம், யேமன் நாடானது இந்த வாரம் நம்பிக்கை ஒளி கீற்றொன்றை காண்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு பெற்ற யேமன் தெற்கு பிரிவினைவாத படைகள் கடும் சண்டையிட்டு அதிபர் மாளிகையை கைப்பற்றியதில், 40 பேர் கொல்லப்பட்டனர், 260க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹவுதி இயக்கத்தின் தலைவர்களை படுகொலை செய்ய அப்ட்ராபு மன்சூர் ஹாதியின் படைகள் முயற்சி செய்து அதன் மூலம் இயக்கத்தை ஒழிக்க முயன்றதனால்தான் வன்முறை தூண்டப்பட்டது என்று பிரிவினைவாத இயக்க தலைவர் ஐடாரஸ் கூறியுள்ளார். ஆடன் நகரத்தில் தெற்கு இடை நிலை மாறுதல் கவுன்சில் பகுதிகளில் சவுதி வான்வழி தாக்குதல்கள் நடத்தியதன் விளைவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுக்கு சாதகமான யேமனி கட்சிகளை அடுத்த வாரம் பேச்சு வார்த்தைகள் நடத்தி அதன் மூலமாக ஆடனில் நிலவும் பதற்றத்திற்கு தீர்வு காணுமாறு ஐக்கிய அரபு அமீரகமும், சவுதி அர...

வளைகுடா நாடுகளிடையே மூக்குடைபட்ட பாகிஸ்தான்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) வளைகுடா நாடுகளிடமிருந்து தான் எதிர்பார்த்த ஆதரவை பாகிஸ்தான் பெற இயலவில்லை. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு 370 ஆவது பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசங்களாக அறிவித்த இந்தியாவின் நடவடிக்கைக்கு, பெரும்பாலும் வளைகுடா நாடுகள் எந்த தாக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஸ்திரமான, முதிர்ச்சி பெற்ற நாடாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டதால், வளைகுடா நாடுகளிடையே இது சாத்தியமாயிற்று. தவிர, கிட்டத்தட்ட அனைத்து வளைகுடா நாடுகளுடனும் இந்தியா வலுவான செயலுத்திக் கூட்டுறவை வளர்த்துக் கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளின் முக்கியப் பொருளாதாரக் கூட்டாளி நாடாக விளங்கும் இந்தியா, அந்நாடுகளுடன் ஆண்டொன்றுக்கு 10,000 கோடி டாலர் அளவிலான வணிகம் மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே சக்தி வாய்ந்த இஸ்லாமிய நாடான சவூதி அரேபியா, இந்தியாவின் நடவடிக்கை குறித்து, கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தை மட்டுமே தெரிவித்தது. இதர முக்கிய வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ...

புதிய இந்தியாவின் தொலை நோக்கைப் பிரதிபலிக்கும் பிரதமரின் சுதந்திர தின உரை.

(மூத்த பத்திரிக்கையாளர் சங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்ற பின்பு ஆற்றிய முதல் சுதந்திர தின உரையானது, இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் மிகவும் வலுவான அரசியல் மற்றும் சமூக செய்திகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. முதல் முறையாக இந்தியாவின் அரசியல் வரலாற்றில், பிரதமர் ஒருவர் தனது சுதந்திர தின உரையில், இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதன் காரணமாக நாட்டின் முன்னேற்றங்களில் ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை பற்றி எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.. ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் படி 2027 ஆம் வருடம் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும். இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் விளங்கும். இந்த மக்கள் தொகை பெருக்கத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாட நேரிடும். ஏழை மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும். அனைத்து மக்களுக்கும் சமையல் எரிவாயு, கழிப்பிடம், மின்சாரம், வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றை ...

இந்தியக் குடியரசுத் தலைவரின் புதிய இந்தியாவிற்கான வீர முழக்கம்.

(அரசியல் விமர்சகர் பேராசிரியர். ஷிவாஜி சர்கார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) இந்தியத் திருநாட்டின் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த அவர்கள், 73-ஆவது சுதந்திர தினத்திற்கு முந்தைய இரவு, நாட்டு மக்களுக்கான தன் உரையை ஆற்றினார். “ஒரு முக்கியமான தருணத்தில், நாம், சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளின் நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில வாரங்களில், அக்டோபர் 2 ஆம் தேதி, தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளோம். நம் நாட்டை ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதில் அவர் நமது வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்தார். சமுதாயத்தில் உள்ள அனைத்து சமத்துவமின்மையையும் நீக்குவதற்காக நாம் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கும் அவரது வாழ்வும் வாக்கும் இன்னும் வழிகாட்டியாக இருந்து வருகிறது. மகாத்மா காந்தி வாழ்ந்த இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கையில், தற்கால இந்தியா மிகவும் மாறுபட்டு இருக்கின்றது. இருப்பினும், அவரது சிந்தனைகள் தற்போதைய சூழலுக்கும் ஒத்துப்போகும் வகையிலேயே இருக்கின்றன. பின்தங்கிய மக்கள் மற்றும் குடும்ப...

இந்திய வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணம்.

(சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர், டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ.வெங்கடேசன்.) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், தமது பதவியேற்புக்குப் பிறகு, முதல் பயணமாக, முக்கியத்துவம் வாய்ந்த சீனப் பயணம் மேற்கொண்டார். கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்த உயர்மட்ட பரிமாற்ற வழிமுறைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். வூஹானில் நடைபெற்ற முறைசாரா சந்திப்பைப் போன்றதொரு சந்திப்பை, இந்த வருடத்தின் பிற்பகுதியில், சீன அதிபர் ஸீ ஜின்பிங் அவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோதியுடன் இந்தியாவில் நிகழ்த்தவுள்ளார். அதற்கான முன் ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இரு நாடுகளும் தங்களது ராஜதந்திர உறவுகளின் எழுபது ஆண்டு நிறைவையும் கொண்டாட உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்தும் இரு வெளியுறவு அமைச்சர்களிடையே விவாதிக்கப்பட்டது. சீனாவின் துணை அதிபர் வாங் கிஷான் அவர்களுடனும் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்...

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியைக் கண்டுள்ளன. இந்தப் பிரச்சனைக் குறித்து, மற்ற நாடுகளின் ஆதரவை சேகரிக்க பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவிற்கு, அதன் மிக நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும் சௌதி அரேபியாவும் கூட பெரிய அளவில் உதவவில்லை. இந்த விஷயத்தில், அவ்விரு நாடுகளும் தாங்கள் செய்யக்கூடியது பெரிதாக எதுவும் இல்லை என்று கை விரித்து விட்டன. அமைதியைக் காக்குமாறு அறிவுறுத்தியதோடு, கட்டுப்பாட்டுடன் செயல்படுமாறும் பாகிஸ்தானை இவ்விரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன. இந்தியா, தனது அரசியலமைப்பின் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதாக அறிவித்தவுடனேயே, பாகிஸ்தானின் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் துரிதமாக இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கின. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை, இந்தியா தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அபரிமிதமான வாக்குகளைப் பெற்று இந்த மசோதா அமலுக்கு...

“ இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதில் உட்கட்டமைப்பின் பங்கு “

மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி. சீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். அடுத்த ஐந்து வருடங்களில் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவது மற்றும் அதைத் தொடர்ந்து அடுத்த எட்டு வருடங்களில் 10 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதற்காக இந்தியா தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டுள்ளது. இந்த இலட்சிய இலக்கை அடைவதற்கு உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் படி, உட்கட்டமைப்புக்காக இந்தியா வருடம் தோறும் ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேலாக செலவு செய்து வருகின்றது. நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அவர்கள் லோக்சபாவில் இதை தெரிவித்தார். அரசாங்கத்தின் செலவு கணக்கில் 2018 19 ஆம் வருட பட்ஜெட் மதிப்பீடு உட்கட்டமைப்புக்காக ரூபாய் 5.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2025 ம் வருடத்திற்குள் உள்நாட்டு பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயற்துவது என்பது பிரம்மாண்டமாக தோன்றினாலும் அது எட்டும் தொலைவில் தான் உள்ளது. உட்கட்டமைப்பை ஊக்குவிப்...