இந்தியக் குடியரசுத் தலைவரின் புதிய இந்தியாவிற்கான வீர முழக்கம்.
(அரசியல் விமர்சகர் பேராசிரியர். ஷிவாஜி சர்கார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)
இந்தியத் திருநாட்டின் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த அவர்கள், 73-ஆவது சுதந்திர தினத்திற்கு முந்தைய இரவு, நாட்டு மக்களுக்கான தன் உரையை ஆற்றினார். “ஒரு முக்கியமான தருணத்தில், நாம், சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளின் நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில வாரங்களில், அக்டோபர் 2 ஆம் தேதி, தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளோம். நம் நாட்டை ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதில் அவர் நமது வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்தார். சமுதாயத்தில் உள்ள அனைத்து சமத்துவமின்மையையும் நீக்குவதற்காக நாம் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கும் அவரது வாழ்வும் வாக்கும் இன்னும் வழிகாட்டியாக இருந்து வருகிறது.
மகாத்மா காந்தி வாழ்ந்த இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கையில், தற்கால இந்தியா மிகவும் மாறுபட்டு இருக்கின்றது. இருப்பினும், அவரது சிந்தனைகள் தற்போதைய சூழலுக்கும் ஒத்துப்போகும் வகையிலேயே இருக்கின்றன. பின்தங்கிய மக்கள் மற்றும் குடும்பங்களுக்கு நாம் நலத் திட்டங்களை உருவாக்கி, அவர்கள் வரைக் கொண்டு சேர்க்கும் போதும், சூரிய ஒளியை புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகப் பயன்படுத்தத் திட்டமிடும் போதும், நாம் காந்தியடிகளின் சித்தாந்தங்களையே செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என, குடியரசுத் தலைவர் அவர்கள் காந்தியடிகளின் தீர்க்கதரிசனத்தைப் பற்றிக் கூறினார்.
இந்தியாவின் மிகப்பெரிய, மிக அதிக விவேகம் பொருந்திய, மக்கள் செல்வாக்குப் படைத்த இந்தியர்களில் ஒருவரான குரு நானக் தேவ்ஜியின் 550-ஆவது பிறந்த நாளையும் இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம் என திரு. கோவிந்த கூறினார். சீக்கிய மதத்தின் நிறுவனராக அவர் இருந்தாலும், சீக்கிய சகோதர சகோதரிகளையும் தாண்டி, அனைத்துத் தரப்பு மக்களும் அவர் மீது அதீத மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் பல லட்சங்களைத் தாண்டும் என அவர் கூறினார்.
இந்த கோடைக் காலத்தின் துவக்கத்தில், மனித வரலாற்றின் மிகப் பெரிய ஜனநாயக செயல்முறையான, இந்தியாவின் 17-ஆவது பொதுத் தேர்தல்களில், நம் நாட்டு மக்கள் பங்கு கொண்டனர். மிகுந்த உற்சாகத்துடன் பெரும் அளவில் மக்கள் தங்கள் கடமையாற்ற வந்தனர். தங்களது தேர்தல் உரிமை மற்றும் பொறுப்பை மக்கள் நன்றாக நிறைவேற்றினார்கள் என குடியரசுத் தலைவர் நாட்டு மக்களைப் பாராட்டினார்.
மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தும் முக்கியப் பங்கு அரசாங்கத்திற்கு உள்ளது. மக்கள் அரசாங்கத்திற்கு அனுப்பும் அனைத்து செய்திகளையும் படித்துப் பார்த்து, நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு பதில் அளிப்பது என்பது நமது முக்கிய நிறுவனங்களுக்கும் கொள்கை அமைப்பாளர்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய பொறுப்பாகும். நாடு முழுதும் பயணித்து, நம் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்குச் சென்று, பல தரப்பட்ட சக இந்தியர்களை சந்திப்பதைத் தான் ஒரு பாக்கியமாகக் கருதுவதாக திரு. கோவிந்த அவர்கள் கூறினார். பல்வேறு விருப்பங்களையும் வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், இந்தியர்களின் கனவு ஒன்றாகத்தான் இருக்கின்றது. 1947 ஆம் ஆண்டிற்கு முன், இது சுதந்திர இந்தியாவிற்கான கனவாக இருந்தது. இன்று, துரித முன்னேற்றம், செயலூக்கம் உடைய வெளிப்படையான ஆட்சிமுறை, தினசரி வாழ்வை மேன்மையாக்கும் வகையில், அரசாங்கத்தின் சிறிய அச்சாரங்கள் ஆகியவை மக்களின் இன்றைய கனவுகளாக இருக்கின்றன.
130 கோடி இந்தியர்களின் திறமை, புதுமுயற்சி, படைப்பாற்றல் மற்றும் சுயதொழில் முனைவு ஆகியவற்றில் அதிக அளவு வாய்ப்புகளும் திறனும் உள்ளது என இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் கூறினார். “மக்களின் இந்தப் பண்புகள் புதியவையல்ல. இந்தப் பண்புகள்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாட்டின் கலாச்சாரத்தை வளர்த்து பாதுகாத்து வருகிறது. நமது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பல சமயங்களில், நமது மக்கள் பல கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டனர் என்பது தெரியும். அப்படிப்பட்டத் தருணங்களிலும், நமது சமூகம் மீண்டு எழும் வல்லமையோடு போராடியது. சாதாரணக் குடும்பங்கள் அசாதாரண வீரத்தை வெளிப்படுத்தின, உறுதி படைத்த தனி நபர்கள் பலர், உயிர் பிழைத்து வெற்றி காண்பதற்கான வலிமையைப் பெற்றிருந்தார்கள். இன்றைய நிலையில், அரசாங்கம் ஒரு ஏதுவான, செயலாக்கம் மிக்க சூழலை அளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா அடையக்கூடிய வெற்றிகளின் சாத்தியக்கூறுகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
கூட்டுறவின் இந்த அம்சத்தைத் தான், நாம், மற்ற நாடுகளுடனான அரசியல் தொடர்புகளிலும் கொண்டு செல்கிறோம். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நமது கூட்டு நாடுகளுடன் நாம் நமது அனுபவத்தையும் பலத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறோம். இந்தியாவின் வசீகரம் மற்றும் தனித்தன்மைகளை நாம் உணர்ந்து காக்க வேண்டும் என திரு. கோவிந்த அறிவுறுத்தினார்.
இந்தியா, இங்குள்ள இளைஞர்களால் வடிவமைக்கப்பட்டு வரும் ஒரு இளமையான நாடாகும். இளைஞர்களுடைய ஆற்றல் பல்வேறு திசைகளில் பாய்ந்து கொண்டிருக்கின்றது. விளையாட்டு, அறிவியல், பாண்டித்யம், மென் திறன்கள் என அனைத்திலும் மிகச்சிறந்து விளங்க அவர்கள் விழைகிறார்கள். அனைத்திலும், குறிப்பாக, வகுப்பறைகளில், ஆர்வம் கொண்டு உழைப்பதற்கான முறைகளை உற்சாகப்படுத்த வேண்டும், இதுவே நாம் நமது இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய பரிசாகும். நம் குழந்தைகள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்போம். அவர்கள் மூலம்தான் எதிர்காலம் நம்முடன் பேசும் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
“மந்திரம் கற் போம் வினைத் தந்திரம்கற் போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண் டலத்தியல் கண்டு தெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.”
என்ற மகாகவி பாரதியாரின் இந்த வரிகளோடு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.
எப்போதும் புதியவற்றைக் கற்று, கேட்டு, முன்னேறுவதற்கான கொள்கைகளும், ஆர்வமும், சகோதரத்துவமும் நம்முடன் இருக்கட்டும். இது நம்மையும் நம் நாட்டையும் எப்போதும் வாழ்த்தட்டும்.

Comments
Post a Comment