இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பு.
(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மாபெரும் வளர்ச்சி கண்டு, கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று, 45,500 கோடி டாலர் என்ற உச்சகட்ட அளவை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 2019 இல் இதுவே 41,200 கோடி டலர் என்ற அளவில் இருந்தது. இந்த இடைவெளியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அந்நிய நாணய சொத்து என்ற பிரிவில், 10 சதவிகித வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, ஜப்பானிய யென் என, பலதரப்பட்ட அந்நியச் செலாவணியின் தொகுப்பாக, அந்நிய நாணய சொத்து விளங்குகிறது. இவை அனைத்தும் அமெரிக்க டாலரில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, அன்னியச் செலாவணியை வாங்குவது விற்பது என்ற வகையிலும், அன்னியச் செலாவணிக் கையிருப்பைப் பயன்படுத்துவதால் கிடைத்த வருவாய் என்ற வகையிலும், வெளிநாட்டு உதவித் தொகை வாயிலாக மத்திய அரசு பெற்ற அந்நியச் செலாவணி என்ற வகையிலும், சொத்துக்களின் மறுமதிப்பீடு என்ற வகையிலும், அந்நிய நாணய சொத்து மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன என்று ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்...