இந்தோ-பசிபிக் 1.5 வழிப் பேச்சுவார்த்தைகள்.

(கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா.)

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் புவிஅரசியல் சார்ந்த, திறந்த, தடையற்ற வர்த்தகத்திற்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், இந்தியா, இரண்டு இந்தோ-பசிபிக் 1.5 வழிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தது. அவை 6 ஆவது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தை மற்றும் பதினோராவது தில்லி பேச்சுவார்த்தை ஆகியனவாகும். 2019, ஜூன் மாதம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான ஆசியான் கண்ணோட்டம் தெரிவித்தபடியும், முன்னதாக, 2018 ஜூன் மாதம் நடந்த ஷாங்ரிலா பேச்சுவார்த்தையின்போது, இந்தியா தெரிவித்த கருத்துக்களின்படியும், இப்பிராந்தியத்தில் திறந்த, தடையற்ற, சர்வதேச விதிகளுக்குட்பட்ட வர்த்தம் குறித்து விவாதிப்பதே இந்த இந்தோ-பசிபிக் 1.5 வழிப் பேச்சுவார்த்தைகளின் குறிக்கோளாக இருந்தது. அடுத்தடுத்து ஒரே நேரத்தில் இந்த இரண்டு பேச்சுக்களும் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

கிழக்கு இந்தியப் பெருங்கடல், வளைகுடா மற்றும் ஆப்பரிக்க நாடுகள் உள்ளிட்ட மேற்கத்திய பெருங்கடல் பிரதேசமான இந்திய-பசிபிக் பிரதேசம் பற்றிய இந்தியாவின் குறிக்கோளை இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார். இந்திய-பசிபிக் பற்றி அனைத்து பங்கேற்பாளர்களின் கருத்துகள், ஒத்துழைப்பதற்கான செயல்பாடுகள் ஆகியனவற்றை அடையாளம் காண்பதை சுற்றியே பேச்சுகள் நடைபெற்றன. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதி முன்முயற்சியை இந்தியா தொடங்கியது.

கடல்சார் பாதுகாப்பு, கடல் சுற்றுச்சுழல், பேரிடர் ஆபத்து குறைப்பு, கடல்சார் வளங்களை நீடித்து நிலைத்து பயன்படுத்துவது ஆகிய பல துறைகளில் இணைந்து செயல்படுதற்கான ஒத்துழைப்புத் தளத்தை உருவாக்குவது இதன் உயர் குறிக்கோளாகும்.

கூடுதலாக ஆசியான் தொடர்புகள் குறித்த வரைபடத்திட்டத்தை ஒத்து செயல்படுவது, மண்டல தொடர்பு மற்றும் நீடித்து நிலைத்த அடிப்படை வசதி கட்டமைப்புக்கான உயர்தர நிதி ஆதரவு, பங்கேற்கும் நாடுகளிளிடையே ஒத்துழைப்பு வாய்ப்புகள், ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன.

குறைந்த செலவில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கான தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ளும் கூட்டாளித்துவம் வளர்க்கும் திட்டங்கள் அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகள் அமைப்பின் முன் உள்ள மிகப்பெரிய சவால்கள் அல்லது முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய படிப்புக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம் ஆகியன பற்றியும் விவாதிக்கப்பட்டன.

தில்லி பேச்சுவார்த்தையில் கட்டடக்கலை முன்னேற்றங்கள், பாலங்களை கட்டுவது தொழில்புரட்சி 4.0 ஆகியன குறித்தும் ஆராயப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகள் அமைப்பு, ஆசியான், பிம்ஸ்டெக் ஆகிய அமைப்புகளின் இடையே ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் டாக்டர் நோம்வுவு நோக்வே வாதிட்டார்.

உள்ளடக்கம் மற்றும் ஒருமித்த உணர்வு; இறையாண்மை சமத்துவம் மற்றும் விதிகள் சார்ந்த சர்வதேச நடைமுறை; மற்றும் பரஸ்பரம் நலன் பயக்கும் அமைதிசார்ந்த ஒத்துழைப்பு ஆகிய மூன்று கொள்கைகளின் அடிப்படையில் இந்த அமைப்புகள் ஒன்றுசேரவேண்டும்.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ எல் பி மார்சுடி அவர்கள் கடல்சார் துறைகள் குறித்து பெரிய நாடுகள் இடையே பகைமை அதிகரித்து வரும் நிலையில் நம்பகத்தன்மை குறிந்து வரும் நிலையில் இந்திய-பசிபிக் பற்றிய ஆசியான் கண்ணோட்டம் பெற்றி எடுத்துரைத்தார்.

திறந்த, வெளிப்படையான, நேர்மையான வர்த்தக நடைமுறையே வருங்காலத் தேவையாகும்.

இந்திய-பசிபிக் பகுதியில் உள்ள முக்கிய கடல் வழித்தடங்கள் பற்றிய செயல்நோக்கு முக்கியத்துவத்தை அறிந்து, சர்வதேசச் சட்டத்துக்கு மதிப்பு, திறந்த வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கிய தன்மை ஆகியனவற்றை பின்பற்றவேண்டும். உலக வர்த்தக மதிப்பில் இந்தப் பெருங்கடல் வழியாக 40 சதவிகித வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்தப் பெருங்கடல் பகுதியில் எதிர்காலமும் வளமையும் முக்கியமாக உள்ளது. கிட்டத்தட்ட கச்சா எண்ணெய் உற்பத்தியில் 61 சதவிகிதம் இந்தப் பெருங்கடல் வழியாக விநியோகிக்கப்படுகிறது. கடல்சார் வளங்கள் 24 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பெருங்கடல் ஒரு ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் ஆதாரமாக விளங்கவேண்டுமே ஒழிய சண்டைகளுக்கானதாக இல்லை.

இந்தியா-ஆசியான் நாடுகள் இடையேயான கடல்சார் ஒத்துழைப்பு மேம்மடுத்தப்படுவது இந்திய-பசிபிக் பிரதேசத்தின் பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் சாராத பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள அவசியமானதாகும் என்று பேச்சுக்களில் குறிப்பிடப்பட்டன.

அத்துடன் கூட, கடல்சார் கட்டமைப்பு தொடரிணைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு வழிகளில் இந்தியா-ஆசியான் இடையேயான கடல்சார் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய-பசிபிக் கட்டமைப்பு மற்றும் தொடரிணைப்பு மன்றக் கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்தோனேசியா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பல்வேறு முயற்சிகள் இடையே ஒத்துழைப்பை பலப்படுத்துவது அவசியம் என்றும் திட்டங்கள் தொடர்பான கவலைகள் தெரிவிக்கப்பட்டன.

கலாச்சார, வரலாற்று தொடர்புகளைத் தாண்டி இந்திய-பசிபிக் பிரதேச சமூகத்தை அமைக்கும் சவால் உள்ளது. இதற்கு ஒரு வலுவான செயல் முன்முயற்சி தேவை என்பதும் அவசியமாகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதி அமைப்பு நாடுகள் மற்றும் ஆசியான் கூட்டாளி நாடுகள் அமைப்பு ஆகியவற்றுடன் தூதாண்மை அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய பேச்சுக்களில் திறந்த, சுதந்திரமான, உள்ளடக்கிய, விதிகள் சார்ந்த, அனைத்து நாடுகளுக்கும் சமத்துவமான நோக்கங்களைக் கொண்டு செயல்படவேண்டிய அவசியம் குறித்து பெரிதும் வலியுறுத்தப்பட்டது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.