பாகிஸ்தானின் வெறுப்புப் பிதற்றலுக்கு செவிமடுப்போர் யாருமில்லை.
(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) ஐ.நா.வின் 74 ஆவது பொதுச்சபையில், காஷ்மீர் விஷயத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சி படுதோல்வியடைந்தது. ஐ.நா. பொதுச்சபையில் அவர், இந்திய மாநிலமான ஜம்மு - காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வக்காலத்து வாங்கி வெற்றுரை நிகழ்த்தினார். இருப்பினும், அவரது பேச்சுக்கு யாரும் செவி மடுக்கவில்லை. பின்னர், போர் அச்சுறுத்தலை முன்வைக்க முற்பட்ட அவர், அணு ஆயுதப் பயன்பாடு குறித்தும் எச்சரிக்கை விடுக்கத் துணிந்தார். உலகின் கவனத்தை ஈர்க்க, பாகிஸ்தான் தலைவர்கள் கையாளும் உத்தியாக இது விளங்குகிறது. இம்ரான்கான் அவர்களுக்கு அமெரிக்காவும் எந்த ஆதரவும் அளிக்கவில்லை. மாறாக, காஷ்மீர் மக்களின் நிலைபற்றிப் பேச முற்பட்ட பாகிஸ்தான் பிரதமர், ஏன் உய்கூரில் அல்லல்படும் மக்களின் நிலை பற்றிப் பேசவில்லை என அமெரிக்கா சாடியது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான, அமெரிக்காவின் துணைச் செயலர் அலைஸ் வெல்ஸ் அவர்கள், காஷ்மீர் பற்றி இம்ரான்கான் அவர்கள் பேசுவது எவ்விதப் பயனும் அளிக்காது என்று குறிப்பி...