நரேந்திர மோதி அவர்கள் இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்பு.
(நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த நிருபர் மணிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) நரேந்திர மோதி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்று ,தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். பிரதமரின் தலைமையின் கீழ், 58 கேபினட் அமைச்சர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களையும் சேர்த்து, ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் இருந்தும் திறமை வாய்ந்த அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர் அவர்களை பிரதமர் மோதி அவர்கள் சேர்த்துள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறையில் ஒரு முக்கியப் பதவியில் இருந்தார். சீன விவகாரங்களில் அவருக்கு உள்ள நிபுணத்துவம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா அவர்களும் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்த அரசாங்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள மக்களின் எதி...