நாட்டின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு முடிவு.
(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்த்ரிக்கையின் மூத்த சிறப்புப் பத்திரிக்கையாளர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)
இந்திய மக்களின் பெருவாரியான வாக்களிப்புடன், நாடாளுமன்றத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 90 கோடி வாக்காளர்களைக் கொண்டிருந்த இத் தேர்தலில், 66 சதவிகித வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. துடிப்பான, மக்களின் பங்கேற்புடனான, வலுவான ஜனநாயகப் பண்புகளை இந்தியா மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பில் பங்கேற்றனர். தேர்தல் ஆணையம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மூன்றடி உயரமான வினிதா ஜெயின், தான் வாக்களித்ததைப் பெருமையுடன் வெளிப்படுத்தியது, பாட்னாவில் உடலளவில் பிரியாத இரட்டையர்களான சபா மற்றும் ஃபரா, இருவேறு தனிநபர்களாக வாக்களித்தது ஆகியவை இத்தேர்தலின் சிறப்பு அம்சங்களாக விளங்கின. வெளிநாடு வாழ் இந்தியர்கள், பெருமளவில் ஆர்வத்துடன் இந்தியாவுக்கு வந்து வாக்களித்துச் சென்றனர். தினக்கூலித் தொழிலாளிகள் உள்பட, பலர் விடுப்பு எடுத்துக் கொண்டு தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்களிப்பதை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக, இத்தேர்தலில் அதிக அளவில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. புதிதாக, 8.5 கோடி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது, தேர்தல் ஆணையம் எந்த அளவிற்குத் தயார் நிலையில் இருந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
கடந்த ஞாயிறன்று, 59 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்களிப்பு எட்டு மாநிலங்களில் நடைபெற்றது. மொத்தமாக, 542 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பணபலம் பயன்படுத்துவதற்கு எதிராக செயல்பட்ட தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டின் வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. மொத்தம் 545 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு, இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில், கின்னௌரில், 102 வயதான ஷ்யாம் சரன் நேகி என்பவர் வாக்களிக்க வந்தபோது, தேர்தல் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அவர் அதிக வயதுடையவர் என்பதைத் தவிர, இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையையும் பெறுகிறார். அவர் 1951 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்திருந்தார். இறுதிக் கட்டத்தில், ஹிமாச்சல், பீஹார், மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகியவை தேர்தலை சந்தித்தன. பிரதமர் திரு நரேந்திர மோதி உள்பட, 918 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 1 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
Comments
Post a Comment