ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்
சி.ஐ.எஸ்ஸின் மூலோபாய ஆய்வாளர் டாக்டர் அதர் ஜாஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன் இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் இந்த வாரம் நடந்தேறியது. பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு கட்டமாக, இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதே இந்தக் குழுக்களின் நோக்கம். இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மற்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். சர்வதேச அளவில் தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் பயண கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் வழியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருதரப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், வர்த்தக முன்னுரிமை ஒப்பந்தம், விவசாய விளைபொருட்களுக்கான பரஸ்பர சந்தை ...