சூடு பிடிக்க துவங்கியிருக்கும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தல்
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் ரெக்டர் பேராசிரியர் சிந்தாமணி மகாபாத்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்
கொரொனா பெருந்தொற்றானது உலகெங்கிலும் ஏறத்தாழ 200 நாடுகளுக்கும் மேலாக அங்கு வசிக்கும் பல கோடி மக்களின் வாழ்க்கை, சமூக உறவுகள் மிக முக்கியமாக அவர்களின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், அவ்வப்போது தேர்தல்கள் என்பதை ஆட்சிமுறையின் முக்கிய பகுதியாக கொண்ட ஜன நாயக நாடுகளின் அரசியலையும், அரசியல் செயல்பாடுகளையும் இந்த பெருந்தொற்றானது பாதித்திருப்பது குறிப்பிடதக்கது.
உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும், நெகிழ் திறன் உடையதும், பெரும் பணக்கார ஜன நாயக நாடாக அமெரிக்கா திகழ்கிறது என்பது இங்கு அடிக்கோடிட்டு காட்டவேண்டிய ஒன்றாகும். இத்தகைய சக்திவாய்ந்த ஜனனாயகமாக திகழும் அமெரிக்காவும் இந்த பெருந்தொற்றால் அரசியல் செயல்முறைகளில் இடையூறு உட்பட பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் அமெரிக்கர்கள் புதிய அதிபர் ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர். சில சமயங்களில், அதிபராக இருப்பவரையே மற்றுமொரு நான்காண்டு காலத்திற்கு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கின்றனர். தற்போதிருக்கும் மிக பெரிய கேள்வி என்னவென்றால், அமெரிக்க அதிபர் தேர்தல் இடையூறு ஏதுமில்லாமல் சீராக நடக்குமா; தற்போதிருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதே.
நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான முந்தைய கட்ட அரசியல் செயல்முறைகள் எதுவுமே சீராக நடத்த முடியவில்லை. கொவிட் 19 பெருந்தொற்று காரணத்தால் அறிவிக்கபட்ட ஊரடங்குகள், அதை தொடர்ந்த தளர்வுகள், தொற்று பற்றிவிடுமோ என்று மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்சம், பிரம்மாண்ட கூட்டங்கள், பேரணிகள் நடத்த முடியாத சிரமங்கள் என அனைத்துமே அதிபர் தேர்தலுக்காக அமெரிக்க அரசியல் கட்சிகள் நடத்தும் பூர்வாங்க தேர்தல்கள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றை பெரிதும் பாதித்துவிட்டது; இந்த பூர்வாங்க தேர்தல்களும் பொறி பறக்கும் விவாதங்களும் அதிபர் தேர்தலுக்கான அதிகாரபூர்வ வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அங்கிருக்கும் முக்கிய கட்சிகளின் அத்தியாவசிய நடைமுறைகளாகும்.
தங்களது வேட்பாளார்களை தேர்ந்தெடுக்க ஜன நாயக கட்சியும் குடியரசு கட்சியும் நடத்தும் தேசிய மாநாடுகள் மிகவும் ஆடம்பரமாகவும், தத்தம் செல்வாக்கை காட்டும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளாக இருக்கும். அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது முன்னரே எடுக்கப்பட்ட முடிவுதான் என்பதால் குடியரசு கட்சியின் இழப்பு இந்த விஷயத்தில் அதிகமில்லை என்றாலும் கூட, அக்கட்சியின் தேசிய மா நாடு சீராக நடத்தபட முடிந்திருந்தால், பல லட்ச கணக்கான அமெரிக்க வாக்காளார்களும், உலகெங்கிலும் உள்ள மக்களும் அக்கட்சியின் பிரச்சார உரைகளை கேட்கும் வாய்ப்பு கிட்டியிருந்திருக்கும். முன்னாள் துணை அதிபர் திரு ஜோ பிடெனை தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கும் ஜன நாயக கட்சி தேசிய மாநாடு தற்போதுதான் காணொளி மாநாடாக நடந்து முடிந்துள்ளது. மில்வாக்கி, விஸ்கான்ஸின் மாகாணங்களில் ஆயிரகணக்கான பிரதினிதிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஒன்று கூடும் பிரம்மாண்ட நிகழ்வு இம்முறை நேரிடையாக நடத்தமுடியாமல் காணொளியாக நடத்தவேண்டியிருந்தது. திரு ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும் திருமதி கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் முறைப்படி அறிவிக்கப்பட்டனர்.
கொவிட் 19 பெருந்தொற்றால் உலகிலேயே மிக அதிகமாகவும், மோசமாகவும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவே ஆகும். அரசு பெருந்தொற்றை கையாண்ட, எதிர் கொண்ட விதமும், அமெரிக்க குடிமக்கள் பெரும்பாலோரை புண்படுத்தியது. முக்கியமாக நாட்டில் வேலையின்மை சதவீதம் மிக அதிகமாக உள்ளது; அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதமோ எதிர்மறையாக மைனஸில் சென்று கொண்டிருக்கிறது. கொரொனாவைரஸ் நோய் தொற்றானது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்புகள் போதிய அளவில் இல்லை என்பதை எடுத்துகாட்டியது. மேலும், நோய் தொற்றுக்கு எதிரான போரில் மூத்த அரசு நிரிவாகிகள் சுகாதார துறை வல்லுனர்களின் ஆலோசனைகளை மதிக்காமல் நடந்துகொண்ட விதம் அரசின் நிர்வாக குறைபாட்டை வெளிச்சமிட்டு காட்டியது. நாட்டின் மூலை முடுக்கெங்கும் நிற வெறி பரவியுள்ளது. அமெரிக்க அரசு நிர்வாகத்தின் தற்போதிருக்கும் கவலைகளோடு இதுவும் சேர்ந்துள்ளது.
குடியேற்ற கொள்கை, சுற்று சூழல் குறித்த கவலைகள், நிலைப்பாடுகள், பொருளாதாரத்தை கையாளும் முறை மற்றும் கொவிட் பெருந்தொற்று என இவை அனைத்தும் எதிர்கட்சியின் தீவிர ஆய்வின் கீழ் வந்துள்ளன. தற்போதைய கருத்து கணிப்புகளின்படி செனட்டர் ஜோ பிடன் கூடுதலாக 4 சதவிகித புள்ளிகள் பெற்று முன்ணணி வகிக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் ஒவ்வொரு நான் காவது ஆண்டும், இந்தியர்கள் யார் அமெரிக்க அதிபராக வருவது இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்று விவாதிப்பார்கள். இது இயல்பான ஒன்றே ஆகும், அமெரிக்காவின் ஜன நாயகம் மற்றும் குடியரசு கட்சிகளின் ஆட்சி நிர்வாகத்துடன் இந்தியாவின் உறவுகளை ஆழ்ந்து கூர்ந்து கவனித்தால், அமெரிக்காவின் இரண்டு முக்கிய கட்சிகளுமே இந்தியாவுடனான உறவை பொறுத்தவரையில் கருத்தியல் ரீதியாக எவ்வித விறைப்பு தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்பது புலனாகும்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தேர்தலில்அமெரிக்க அதிபர் வேட்பாளருடன் நிற்பது என்பது இதுவே முதல் முறையாகும்; அந்த பெருமை செனட்டர் கமலா ஹாரிசிற்கு கிட்டியுள்ளது. வரவிருக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்தியாவில் மிகப்பெரும் ஆர்வத்தை இது தூண்டியுள்ளது
இந்தியாவுடன் வலுவான செயலுத்தி கூட்டாளித்துவத்தை கடைபிடிப்பது குறித்த அமெரிக்காவின் கொள்கைக்கு இரு கட்சிகளிலுமே ஆதரவு நிதானமாக வலுத்து வருகிறது. வெள்ளை மாளிகையில் ஜனவரி 2021-ல் மாற்றம் நிகழ்ந்தாலுமே கூட, இந்திய அமெரிக்க உறவுகளின் அடிப்படைகளில் பெரும் எதிர்மறையான மாற்றம் எதுவும் நிகழாது.
அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் தேர்தல் விவாதங்களில், டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் இருவருமே சீனாவிற்கு எதிராக தாங்கள்தான் மிகவும் கடுமையாக நடக்ககூடியவர் என்று காட்டிகொள்ள முயற்சித்து வருகின்றனர். உயிர்ப்பான இந்தியாவுடனான அமெரிக்காவின் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து சென்று இந்திய பசிபிக் ப்ராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரதன்மையையும் நிலை நாட்ட முயற்சிப்போம் என்பதை இரு வேட்பாளர்களுமே அழுத்தி கூறிவருகின்றனர்.
Comments
Post a Comment