சிசிபி தலைமைகளின் செல்வத்தை மறைப்பதற்காகக் குழப்பத்தை ஏற்படுத்தும் ஹாங் காங்கின் புதிய பாதுகாப்புச் சட்டம்

(பிரசார் பாரதியின் ஆலோசனை ஆசிரியர்(டிஜிட்டல்) சித்தார்த்த ராய் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)

சீன உயரடுக்கு, குறிப்பாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி(சிசிபி) தலைமையின் உயர்மட்டத்தினர், நீண்ட காலமாக தங்கள் பணத்தையும் சொத்துக்களையும் ஹாங்காங்கில் வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது அவர்களின் நிதி ஆதாயங்களை பிரதான நிலப்பரப்பிலிருந்து பாதுகாக்கிறது. நியுயார்க் டைம்ஸ் புலானாய்வு சீன மக்களின் பார்வையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

'ஹாங்காங்கின் தலைவிதியைக் கட்டுப்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் உயரடுக்கினரின் சொகுசு வீடுகள்' என்ற தலைப்பில் நியுயார்க் டைம்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஹாங்காங்கின் சர்வதேச வணிகத்தின் நிதி நிலப்பரப்பைப் பயன்படுத்தி சிசிபி தலைமைகளின் உறவினர்கள் தங்கள் சொந்த இலாபத்திற்காகப் பெரும்செல்வத்தை குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிசிபியின் முதன்மையான நான்கு பேரில் மூவரின் நெருங்கிய உறவினர்கள் ஹாங்காங்கில் சொகுசு ரியல் எஸ்டேட்டில் 51 மில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளைக் கொண்டுள்ளனர்.

ஹாங்காங்கில் பெரும் சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை வைத்திருக்கும் சிசிபியின் ஏனைய உயர் அதிகாரிகளின் உறவினர்களுடனான வணிகப் பரிவர்த்தனைகளுக்காகவும் ஹாங்காங்கில் உள்ள சொத்துகளுக்காகவும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் நெருங்கிய உறவினர்கள் கவனத்திற்கு வருவது இது முதல்முறையல்ல.

சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங்கில் இரும்புக்கரம்கொண்டு சுமத்தப்பட்டிருப்பது வெறும் அரசியல் பரிமாணங்களைவிட அதிகம் என்றே நோக்கர்கள் நம்புகின்றனர். "கம்யூனிஸ்ட் பிரபுக்களின்" பணப் பரிவர்த்தனைகள், சொத்துக்களுடன் பிரிக்கமுடியாத வகையில் இந்தச் சட்டம் பிணைக்கப்பட்டுள்ளது.

"பொருளாதாரத்தின் மீது பேரழிவை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதன் மூலம் அல்லது பிராந்தியத்தின் மீதான வணிக நம்பிக்கையைக் குறைப்பதன் மூலம் அவர்களை பாதிக்கக்கூடியவர்களாக மாற்றுவதால் கட்சித் தலைவர்களின் குடும்பங்களை இந்தச் சட்டம் பாதுகாக்க முடியும்" என்று நியுயார்க் டைம்ஸ் அறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.

மாறாக, ஹாங்காங்கில் அடிப்படை சுதந்திரங்களை தீவிரமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய பொருளாதாரத் தடை சீனாவுக்கு எதிராகக் களமாடத் தொடங்கியுள்ளது. சிசிபி தலைமையின் உறவினர்களுடைய வணிக நலன்களை அச்சுறுத்தும் இதனால், ஹாங்காங் அதன் உலகளாவிய நிதி நிலையை இழக்கக்கூடும்.

எனவே, இந்த பொருளாதாரத் தடைகளுக்கு சீன அரசாங்கத்தின் கடுமையான பதில்கள் பெரும்பாலும் இராஜதந்திர அறிவுரைகளை விட வெளிப்பாடுகள் எல்லைக்குட்பட்டு தனிப்பட்ட கோணத்தையும் கொண்டிருக்கக்கூடும். ஹாங்காங் சீன பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு பற்றிய இணைப் பேராசிரியரான வில்லி லாம்-ஐ மேற்கோள் காட்டி நியுயார்க் டைம்ஸ் அறிக்கை “சீனாவில் சிவப்பு பிரபுத்துவத்தின் உறுப்பினர்கள், இளவரசர்கள் உட்பட ஹாங்காங்கில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளனர். ஹாங்காங் திடீரென அதன் நிதி நிலையை இழந்தால், அவர்களால் தங்கள் பணத்தை இங்கே பதுக்கி வைத்திருக்க முடியாது” என்கிறது.

இதற்கிடையில், சிசிபியின் மூன்றாம் தலைவர் லி ஷான்ஷுவின் மூத்த மகள் லி கியான்க்சின் ஹாங்காங்கில் "அதிகமான நிதி ஆதாரங்களைக் கொண்டவர்" என்றும், 15 மில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு மாடி கடற்கரை வீட்டை வைத்திருப்பதாகவும் நியுயார்க் டைம்ஸ் புலனாய்வில் தெரியவந்துள்ளது. தற்செயலாக, சீனாவின் ரப்பர்-ஸ்டாம்ப் பாராளுமன்றத்தின் அவைத்தலைவராக ஷான்ஷூ உள்ளார். மேலும் புதிய பாதுகாப்புச் சட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகித்தவர். பெய்ஜிங்க்கு எதிரான ஹாங்காங்கின் எந்தவொரு மக்களாட்சிசார்பு எதிர்ப்பையும் அடக்குவதற்கு நிலப்பரப்பை ஆயத்தப்படுத்தியவர்.

அண்மையில், ஹாங்காங் ஊடக அதிபரும், ஆப்பிள் டெய்லிக்குச் சொந்தமான மக்களாட்சிசார்பு ஆர்வலருமான ஜிம்மி லாய், மட்டுமரியாதையின்றி கைது செய்யப்பட்டார். மேலும், ஹாங் காங் நிதிச்சூழலில் மற்றவர்களைவிட லி கியான்க்சினின் கூட்டாளி சுவா ஹ்வா போரின் (Cai Huabo) விரைவான வளர்ச்சி குறித்து 2017இல் வெளியிடப்பட்ட கட்டுரைக்காக புதிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காகித அலுவலகம் ஹாங்காங் காவல்துறையினரால் தாக்கப்பட்டது;

நியுயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, “சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் மூத்த சகோதரி குய் கியாவியாவோ 1991ஆம் ஆண்டிலேயே ஹாங்காங்கில் சொத்துக்களை வாங்கத் தொடங்கியதை ஹாங்காங் சொத்துப் பதிவுகள் காட்டுகின்றன. அவரது மகள், ஜாங் யன்னன், 2009ஆம் ஆண்டில் 19.3 மில்லியன் டாலருக்கு ரெபுல்ஸ் பேவில் வில்லா ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், நகரின் சொத்து மற்றும் நிறுவனப் பதிவுகள் குறைந்தது ஐந்து குடியிருப்புகள் இருப்பதை குறிக்கின்றன”.

மேலும், நியுயார்க் டைம்ஸ் புலனாய்வாளர்களில் ஒருவரான மைக் ஃபோர்சைத், ஜின்பிங்கின் உறவினர்களின் நிதி நடவடிக்கைகளை லி கியான்க்சினுடன் இணைத்துள்ளார். கட்டுரையை அடுத்த தொடர்ச்சியான கீச்சுகளில், சீன நிர்மாண வங்கிக்கு ஷாங்ஷுவின் மகள் லி கியான்க்சின் 37 வயதில் தலைமை தாங்கினார். உலகின் மிகப்பெரிய வங்கிகளில் முதலீட்டு வங்கிப் பிரிவான இது அரசுக்குச் சொந்தமானதாகும்.

முரண்பாடாக, 2017ஆம் ஆண்டில் வெளியான நியுயார்க் டைம்ஸின் மற்றொரு கட்டுரையின் படி, 2013ஆம் ஆண்டில் ஜின்பிங்கின் உறவினர்கள் சீன நிர்மாண வங்கியுடனான தங்கள் வணிக உறவுகளை முடித்துக் கொண்டனர். அவர்களின் பங்குகளை மற்றொரு நிறுவனம் காங்காய் வாங்கியது. சிசிபி தலைவரும் சீனாவின் உயர்மட்ட பாதுகாப்பு தலைமையுமான ஷூ யோங்காங்கின் ஊழலுக்கு எதிராக, அதிகாரத்திற்கு ஏறிய பிறகு, ஜின்பிங் அதுவரை சிசிபியின் இயல்பற்றதான அறப்போரை வழிநடத்தியவர்!

நகர சொத்து மதிப்பை மேற்கோள் காட்டிய நியுயார்க் டைம்ஸ் புலனாய்வு, லி-குய் நெக்ஸஸைத் தவிர, சிசிபியில் நான்காவது இடத்தைப் பிடித்த வாங் யாங்கின் மகள் வாங் ஜிஷா 2010இல் ஹாங்காங்கில் 2 மில்லியன் டாலர் வீட்டை வாங்கினார் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.