ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.



(சீன, யூரேஷிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் சானா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

இந்த வாரத் துவக்கத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள, கிர்கிஸ்தானிலுள்ள பிஷ்கேக் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். தற்போதைய வெளியுறவு அமைச்சர் பதவியில் அவர் மேற்கொள்ளும் கடைசி அயல்நாட்டுப் பயணமாகும் இது. நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாக அவர் இப்பயணம் மேற்கொண்டது, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பிற்கு இந்தியா எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டங்களிலும் இந்தியத் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெற்ற 15 ஆவது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாட்டிலிருந்து தொடங்கி பிரதமர் திரு நரேந்திரமோதி அவர்கள் பங்கேற்று வருகிறார்.

கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற தங்கள் துறை சார்ந்த சந்திப்பில், வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். டோக்லாம் பிரச்சனையை அடுத்து, தங்கள் துறை சார்ந்த சீனத் தலைவர்களுடன் ஆலோசிக்க இந்த சந்திப்பு மேடை அமைத்துக் கொடுத்தது. தவிர, இந்தியாவுக்கு, ஒரு பல்நிலை அமைப்பின் மூலம், மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்பு கொள்ளவும் வழி கிடைத்தது. இந்த சந்திப்பிற்கிடையே, சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அவர்களைச் சந்தித்து, அதிகாரபூர்வமற்ற வூஹான் உச்சிமாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.