பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான இறுதி அழைப்பு – அடுத்து என்ன?

ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் முனைவர் சங்கமித்ரா சர்மா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்
தெரெசா மேவின் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் நடவடிக்கை குறித்த  பிரெக்சிட் ஒப்பந்த வரைவு,  ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்று முறை நிராகரிக்கப்பட்ட நிலையில்,  இந்த ஒப்பந்தம் குறித்த தனது கடைசி மற்றும் இறுதி சவாலை அவர் எதிர்கொள்ளவிருக்கிறார்.  இம்முறையும் நிராகரிப்பே கிட்டுமானால்,  அது விலகல் ஒப்பந்தம் மற்றும் தற்போதைய அரசு இரண்டுக்குமே பெரும் பிரச்சனைகள், அழிவுகள்  தரும் முடிவுகளை  நோக்கி  இட்டு செல்லும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த விலகல் துறையான பிரெக்சிட் செயலர் ஸ்டீபன் பார்க்லே கூறியுள்ளார்.    இம்முறை தோல்வியை சந்தித்தால், ஒப்பந்தம் உயிரிழந்து விடும் என்று அவர் கூறியுள்ளார்.  தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ள தெரெசா மே, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காக மீண்டும் மக்கள் பிரதிநிதிகளின் பொது அவையில் ஒப்பந்த வரைவை  வைக்க உள்ளார்.  இந்த ஆறு வார கால பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஏதும் புதிய மாறுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டனவா என்பதே ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களின் முக்கிய கவலையாக திகழ்கிறது.  மேயின் கட்சியில் இருப்பவர்களில் சிலர் இந்த ஒப்பந்தமானது பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கதுறை இணைவில் விடுவதாக கருதுகின்றன இந்த நிலையில், ஜனனாயக ஒன்றிய கட்சியானது, பிரிட்டனின் அரசியல் சாசனம் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் போன்றவை பாதுக்காக்கப்படுவதற்கான மாற்றங்கள் ஏற்றுகொள்ளப்பட்டால், வடக்கு அயர்லாந்து மற்றும் பிரிட்டனுக்கு இடையே கடுமையான எல்லைக்கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படமாட்டாது என உறுதி அளிக்கப்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் வெற்றி வெளிச்சத்திற்கு வரமுடியும் என்ற தனது  நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.   தொழிலாளர் கட்சியோ, தொழிலாளர்கள் உரிமைகள் குறித்த பிரச்னைகளாளும், பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ப்ரிட்டன் குடிமக்கள் எதிர்கொள்ளவேண்டிய பிரச்னைகளுக்காகவும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறது.   ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக பிரிட்டன் தொடர்வது குறித்து இரண்டாவது வாக்கெடுப்பு நடத்துமாறு தொழிலாளர் கட்சி வலியுறுத்துகிறது. நான்காவது முறையாக பொது அவையில் வாக்கெடுப்பிற்கு செல்லவிருக்கும் மேயின் ஒப்பந்த வரைவு வாக்கெடுப்பில் தொழிலாளர் கட்சி கலந்துகொள்ளாமல்,  நாடாளுமன்ற ஒப்புதலின் முதல் கட்டத்தை வரைவு தாண்டுவதற்கு தொழிலாளர் கட்சி ஒத்துழைக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. பசுமை கட்சி,  தாராளவாத ஜனனாயக கட்சி, ஸ்காட்டிஷ் தேசிய கட்சி, சைம்ரு என அனைத்துமே பிரெக்சிட்டை முழுமையாக எதிர்க்கின்றன.
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு, வரப்போகும்  நாட்களில்  சவால்கள் கடுமையாகவே இருக்கப்போகின்றன.   நாடாளுமன்றத்தில் நிலவரங்கள் நெகிழ்வாக இல்லை.  சரியான ஒப்பந்தம் இல்லையென்றால்,  பிரெக்சிட்டுக்கு ஒப்புதல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.  பிரெக்சிட் பிரச்னை மட்டுமல்லாமல், இந்த மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 1334 நகராட்சி உறுப்பினர்களை இழந்து பெரும் சரிவை சந்தித்துள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி,  அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தும் தாராளவாத ஜன நாயக கட்சி 703  இடங்களை பெற்றுள்ளது.  23 மே, 2019-ல் வரவிருக்கும்  ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தல்களிலும்,  நிஜெல் ஃப்ராகேவின் ப்ரெக்சிட் கட்சியானது,  30 சதவிகிதத்துடன்,  முக்கிய கட்சிகளான தொழிலாளர் கட்சியின் 21 சதவிகிதம், மற்றும் டோரி 12 சதவிகிதத்தை விட அதிக முண்ணனியில் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
ராஜினாமா குறித்த விஷயத்தில் பிரதமர் மே ஒவ்வொரு முறை ஒப்பந்த வரைவு தோற்கடிக்கப்பட்டபோது இந்த விஷயத்தை தவிர்த்துகொண்டிருந்தார்.  நான்காவது முறை ஒப்பந்த வரைவு நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெறாமல் தோல்வியை தழுவினாலும் கூட,  வாக்கெடுப்பின் முடிவுகளை மதிக்கவேண்டும் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.   இந்த சங்கடமானதொரு உறை நிலையில் இருந்து வெளியே வருவதற்கொரு வழியை திருமதி மே சாதித்தாரென்றால், அது அவருக்கும், அவரது அரசுக்கும் ஒரு சாதனையாகவே நிச்சயமிருக்கும்.    வேறுவகையாக நிலைமை திரும்புமானால், அரசியல் சாசனம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உருவாகும் முன் பிரிட்டன் சில கடும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.   எதுவாக இருந்தாலும்,  மீதமிருக்கும் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் விலகல் ஒப்பந்தம் குறித்து மீள்யோசனை செய்தல் அல்லது ஒப்பந்தத்தில் கையொப்பமிட பிரிட்டனுக்கு அளித்திருக்கும் மேலும் ஆறு மாத காலக்கெடு முடியும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவேண்டியிருக்கும்.
இந்தியாவை பொறுத்தவரையில்,  பிரெக்சிட் ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தமின்மை, பிரிட்டனுடான இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை எப்படி பாதிக்ககூடும் என்பதில் பலவகையான வேறுபட்ட அபிப்ராயங்கள் உள்ளன.   மார்ச் 2019-ல் பிரெக்சிட் சாத்தியமானல், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் மறு பரீசீலனை செய்யப்பட்டால்  இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் வாய்ப்புகள் உருவாககூடும் என்று பிப்ரவரி 2019-ல் வெளியான மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அதே சமயம்,  பிரிட்டனுடன் வலுவான முதலீட்டு உறவுகள் இருப்பதால் இந்தியாவின் வெளியுறவு துறைக்கு தாக்கங்களை பிரெக்சிட் அளிக்ககூடும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கிடையாது எனும் நிலை வருமேயானால் முதலில் பாதிக்கப்படவிருப்பது பிரிட்டனின் நாணயமான பவுண்ட்தான், பின்னர் சந்தைகள் பாதிக்கப்படும்.  பாதிக்கப்படும் பிரிட்டன் நிதி சந்தையும் அதன் பேரழிவு தாக்கங்களினால் ஏற்படும் பாதகமான எதிர்வினைகளில் இருந்து மீள்வதற்கு நெடுங்காலமாகலாம்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.