22 ஆவது இந்திய-சீன பிரதிநிதித்துவப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்.
(சீன விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம் எஸ் பிரதீபா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.)
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களுடன் எல்லை விவகாரகள் குறித்துப் பேச, இந்தியா வந்திருந்த சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு அவர்களையும் சந்தித்தார். இந்த முறை நடந்த சிறப்புப் பிரதிநிதித்துவப் பேச்சு வார்த்தைகள் முக்கியத்துவம் பெற சில காரணங்கள் உள்ளன. பாரதப்பிரதமரும் சீன அதிபரும் தங்களது இரண்டாவது முறை சாரா உச்சி மாநாட்டை அக்டோபர் மாதம் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் நிகழ்த்தினர். மாநாட்டின் இறுதியில், எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனைப் பிரதிபலிக்கும் விதமாக, எல்லைப் பிரச்சனைத் தீர்வு மற்றும் இரு தரப்பு உறவுகளில் மேம்பாடு ஆகியவற்றுக்கான புதிய கண்ணோட்டமும் வழிகாட்டலும் இரு நாடுகளாலும் வெளிப்படுத்தபட்டன என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, மேலாண்மை விதிகளை வகுக்கவும், எல்லைப் படைகளுக்கிடையிலான தொடர்புகளையும் பரிமாற்றங்களையும் வலுவாக்கவும் எல்லைச் சந்திகளை அதிகரிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாகச் சீனத் தரப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சூழலில் உள்ள நிலையில்லாத் தன்மையும், ராணுவ நவீனமயமாக்கலில் புது வேகமும் நிலவும் சூழலில், எல்லை மேலாண்மையில் எந்தத்தவறும் நேராதவாறும், இரு நாட்டு ராணுவத் தொடர்புகள் மேம்படுமாறும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை இரு நாடுகளும் புரிந்துகொண்டது இந்தச்சந்திப்பின் மிகப்பெரிய பலனாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா, லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக அறிவித்த பின்னர் நிகழ்ந்த முதல் பேச்சு வார்த்தை இந்த 22 ஆவது எல்லைப் பேச்சு வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே லடாக் அந்தஸ்து மாற்றம் குறித்து சீனா தனது கருத்தை உரத்த குரலில் தெரிவித்து வந்ததுடன், காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் எழுப்ப பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து வந்தது. எனினும், இந்த முயற்சி இந்தியாவால் முறியடிக்கப்பட்டது.
எல்லைப் பேச்சு வார்த்தைகளுக்குச் சற்று முன்னர், மீண்டும் ஒரு முறை காஷ்மீர் குறித்த ஐ.நா. விவாதத்திற்குச் சீனா விருப்பம் தெரிவித்தது. எனினும் அதன் நிலைமை குறித்து அ.ந.வின் அமைதிப்படை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாததால், இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அமைதிப் படையின் அறிக்கை தயாரானவுடன் இந்தச் சந்திப்பை மீண்டும் ஒரு முறை சீனா கோரும் என்று ஐ நாவுக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கையை மேம்படுத்த, மற்ற நாட்டின் உணர்வுகளுக்கும் கவலைகளுக்கும் மதிப்பளிக்க ஒப்புக்கொண்டுள்ளன என்று கூறி, இந்தியா இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. அதாவது, இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் எடுக்கும் நடவடிக்கைகளில் சீனா தலையிட முடியாது என்பதை சீனா உணர வேண்டும் என இந்தியா விரும்புகிறது.
இந்தியாவின் கவனத்தைக் கவரும் வகையில், எல்லைப் பிரச்சனைக்கான நடைமுறை சாத்தியாமான ஒரு கட்டமைப்பை சீனா உருவாக்கியுள்ளதாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அவர்கள் கூறியுள்ளார். அண்மைக் காலங்களில் எல்லைப் பேச்சு வார்த்தை குறித்து அரிதாக வெளியிடப்பட்ட நேர்மறையான கருத்து இது. அந்தக் கட்டமைப்பின் விவரங்கள் குறித்தோ, அது குறித்த இந்திய அரசின் பார்வை பற்றியோ இது வரை எந்தத் தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லை வரையறை குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று பேச்சு வார்த்தைகளுக்கு முன்னரே வாங் யீ தெரிவித்திருந்தார். இது குறித்து எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றாலும், இரு தரப்பும் இது குறித்து உறுதியளித்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகளின் 70 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த தருணத்தில், இந்த எல்லைப் பேச்சு வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வாய்ப்பைக் குறிக்கும் வகையில், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் பெரும் முன்னேற்றத்தை எட்ட இரு நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன. அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள், பரிமாற்றங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும். நட்புக்கான சமூக மற்றும் பொது அடித்தளம் என்று சீனா இதனைக் குறிப்பிடுகிறது. மேலும், பரஸ்பரம் கலாச்சாரப் புரிதலை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க, புவி சார் அரசியல் என்ற பார்வையைத் தாண்டி, கலாச்சார வளம் சார்ந்த பார்வை தேவை என்ற பிரதமர் மோதியின் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது.
பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ள இந்திய- சீன உறவுகளுக்கு, இந்த எல்லை பேச்சு வார்த்தைகள் ஒரு நேர்மறை அலையை உருவாக்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட இது வழிவகுக்கும் என்றால் அது மிகையாகாது.

Comments
Post a Comment