எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் - விதிகளைக் கடுமையாக்கும் நேபாளம்.
(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ராஜ்குமார் பாலா)
8848 மீட்டர் உயரத்துடன், உலகின் மிக உயர்ந்த சிகரமாக விளங்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் மலையேற்ற சாகசப் பயணங்களின் மூலம், நேபாளத்துக்கு நல்ல வருவாய் கிடைத்துவருகிறது. எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொள்ளும் முயற்சியில், கடந்த மே மாதம், 11 பேர் உயிரிழந்தது, நடப்பாண்டின் இரண்டாவது அதிகமான உயிரழப்பாகும். அது குறித்து நேபாளம் வருத்தம் அடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு, இமயமலைப் பகுதி முழுவதையும் பெரும் நிலநடுக்கம் தாக்கியபோது, ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் பலர் சிக்கினார்கள்; அவர்களில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 800க்கும் அதிகமான மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் உச்சியை அடைய முயன்றனர்; அவர்களில், 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதாவது மரண மண்டலம் என்றழைக்கப்படும் பகுதியில், பெரும் எண்ணிக்கையிலானோர் வரிசையில் காத்திருந்தனர். உகந்த குறுகிய நேரத்திற்கான சாத்தியமான பருவநிலையில் மலை உச்சியை அடைய ஒவ்வொருவரும் விரும்பினார்கள். இதனால் சோர்வு மற்றும் அதிக உயரமான பகுதிகளில் ஏற்படும் உடல்நலிவு ஆகியவற்றால் பலர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி, ஒரே நாளில் மட்டும் 223 மலையேற்ற வீரர்கள் மலை உச்சியை அடைந்தனர். இதற்கு முந்தைய சாதனை அளவாக, 2016 ஆம் ஆண்டில் 204 மலையேற்ற வீரர்கள் மலை உச்சியை அடைந்த சாதனை இதனால் முறியடிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் மலையேற்றக் காலத்தில் அதிக அளவில் மலையேற்ற வீரர்களின் கூட்டம் அலைமோதுவது குறித்துக் கவலை அடைந்துள்ள நேபாள அரசு, இந்த உயரமான சிகரத்தின் உச்சிக்குச் செல்ல விரும்பும் வீரர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த, கடுமையான விதிகளை வகுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையாக, 381 அனுமதிகள் வழங்கப்பட்டதால், எவரெஸ்ட் சிகரத்தில் கூட்டம் அலைமோதியது.
நிபுணர் குழு ஒன்றின் அறிக்கையின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டின் மலையேற்றக் காலம் முதல், புதிதாக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அறிமுகம் செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. 11 ஆயிரம் டாலர்கள் செலுத்தப்பட்டதற்கான ஆதாரத்தையும், நல்ல உடல் ஆரோக்கியம் இருப்பதற்கான சான்றிதழையும், குறைந்தது நேபாளத்தில் 6500 மீட்டர் உயரமுடைய ஏதாவது ஒரு சிகரத்தை எட்டியிருப்பதற்கான ஆதாரத்தையும் அனைத்து மலையேற்ற வீரர்களும் சமர்ப்பிக்க வேண்டும். எவரெஸ்ட் மலையின் அடிவார முகாமில் அனைத்து மலையேற்ற வீரர்களையும் கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றியும் நேபாள அரசு ஆராய்ந்து வருகிறது. ஆயுள் காப்பீடு தவிர, உயரமான இடங்களில் வீரர்கள் சிக்கிக் கொள்ளும் பட்சத்தில், அவர்களை மீட்பதற்கான தேடல், மீட்பு, சிகிச்சைக்கான கட்டாயக் காப்பீட்டையும் அனைத்து மலையேற்ற வீரர்களும் கொண்டிருக்க வேண்டும். உயரமான சிகரங்களுக்கு வீரர்களைக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழிநடத்தியதற்கான அனுபவத்தை வழிகாட்டிக்கள் பெற்றிருக்கவேண்டும்.
தற்போது அமலில் உள்ள விதிகளின்படி, எவரெஸ்ட் சிகரத்தை அடைய விரும்பும் மலையேற்ற வீரர்கள் தங்களது கடவுச்சீட்டின் ஒரு பிரதி, குறிப்பிட்ட சுயவிவரக்குறிப்பு, உடல்நலத்துக்கான சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். எவெரெஸ்ட் சிகரப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள், 35 ஆயிரம் டாலர்களும், இதர 8 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கும் அதிகமான சிகரங்களுக்கு மலையேற்றப் பயணத்தை ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள், 20 ஆயிரம் டாலர்களையும் செலுத்த வேண்டும் என்றும் நிபுணர் குழு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. எவரெஸ்ட் மலையேற்றப் பயணத்துக்கான அனுமதிகளின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் எண்ணும் நேபாள அரசு, அதனால் ஏற்படும் வருவாய் இழப்பு குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
முதன்முதலாக, 1953 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்மண்ட் ஹில்லரி மற்றும் டென்சிங் நார்கே இருவரும் எட்டிச் சாதனை புரிந்ததைத் தொடர்ந்து, இன்று வரை மலையேற்ற முயற்சிகளில் ஈடுபடும் வீரர்களின் எண்ணிக்கை, குறிப்பாக 1990-களுக்குப் பிறகு, தொடர்ந்து அதிகரித்தே வந்திருக்கிறது. மனிதக் கழிவுகள், உணவுக் கழிவுகள், கிழிந்த கூடாரங்கள், கயிறுகள், பயன்படுத்தப்பட்ட ஆக்சிஜன் உருளைகள், ஏணிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குடுவைகள் என, குப்பைக் கூளங்களை இந்த மலையில் மலையேற்ற வீரர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் நேபாள அரசு 11 டன் கழிவுகளையும் நான்கு மனித சடலங்களையும் எவெரெஸ்ட் சிகரப் பகுதியிலிருந்து அகற்றியுள்ளது.
உலகின் பல பகுதிகளில் புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாறுபாட்டினால், உயரமான பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி பனிச்சரிவு, நிலச்சரிவு, வெள்ள பாதிப்பு ஆகியன ஏற்படுவது குறித்து சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளது. இந்நிலை தொடருமானால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் உட்பட ஆப்கானிஸ்தான் முதல் மியான்மர் வரையிலான இமயமலைப்பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு உருகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்ல முயலும் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் நேபாள அரசின் நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. இமய மலையின் சுற்றுச்சூழல் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. பருவநிலை மாறுபாடு குறித்த தேசியச் செயல்திட்டம், இமயமலைப் பகுதியின் சுற்றுச்சூழலை நிலைத்து நீடிக்கச் செய்வதற்கான தேசிய இயக்கம் ஆகியவற்றை செயல்படுத்தும் இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஓர் அங்கமாக, சிக்கிம், மேகாலயா, நாகாலாந்து, உத்தராகண்ட் உள்ளிட்ட நாட்டின் 12 மலை மாநிலங்களில், சுமார் 1500 இடங்களில், இமயமலையைத் தூய்மைப்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment