நீர்  மேலாண்மையில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறை

(பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - லட்சுமண குமார்)

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினத்தை ஒட்டி 'அடல் பூஜல் யோஜனா' திட்டத்தை அறிவித்து நாட்டுக்கு அர்பணித்திருப்பதன் மூலம் நீர் தொடர்பான சிக்கலிலிருந்து மக்களை மீட்க உறுதிபூண்டிருப்பதை இந்தியா உணர்த்தியுள்ளது. இதன் மூலம் குறுகிய அணுகுமுறையிலிருந்து விலகி விரிவான அணுகுமுறையில் நீர் தொடர்பான பிரச்சனையை அணுக வழி வகுக்கப்பட்டுள்ளது.மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் புதிய இந்தியாவிற்கான கனவை நினைவாக்க முடியாது.

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் குறைந்து வரும் நிலத்தடி நீர் பிரச்சனையை சமாளிக்க மட்டுமில்லாமல் விவசியர்களிடையே மாற்றுப் பயிர் செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அடல் பூஜல் திட்டத்தின் இலக்காகும்.

நிலத்தடி நீரை நம்பியே இந்தியா விவசாயம் உள்ளது. மாறி வரும் பருவமழை காரணமாகவும், நீர்ப்பாசனத்திற்கென அதிக அளவில் நிலத்தடி நீரை உறுஞ்சுவதாலும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர் 61 சதவிகிதம் குறைந்துவிட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. காலம் தப்பிய பருவ மழை அதனால் குறைந்து வரும் நிலத்தடி நீரின் அளவு ஆகியவற்றுக்கு புவி வெப்பமயமாதல் காரணம் என்று கூறப்படுகிறது. 1950 லிருந்து சராசரி மழையின் அளவு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில், பொதுவாக பருவ மழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்படும். அப்போதுதான் தென்மேற்கிலிருந்து வீசும் காற்றும் இந்திய பெருங்கடல், அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து ஈரத்தை உறிஞ்சி நிலத்தில் மழையாக பொழியும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை காற்றில் திசை மாறி வேறு வழியாக வீசும். ஆனால், பருவ நிலையின் மாற்றும் காரணமாக கால சுழற்சி அடிப்படையிலான மழை பொழிவு பாதிக்கப்பட்டுள்ளது.

முறைப்படி நிகழ்ந்து கொண்டிருந்ததில் மாற்றம் ஏற்பட்டு போதுமான மழை இல்லாமழும், அதைத்தொடர்ந்து வறட்சியும், சில சமயம் வெள்ளப்பெருக்கு இப்போது ஏற்பட்டு வருகிறது. பிற வளர்ச்சியுற்ற நாடுகளை காட்டிலும் இந்திய குறைந்த அளவில் பசுமை வாயுக்களை வெளியேற்றிவந்த போதிலும் இத்தகைய பிரச்சனையை சந்தித்து வருகிறது.

குறைந்து வரும் நிலத்தடி நீர் பிரச்சனையை திஈர்க்க இந்திய முடிவு செயதிருப்பது வரவேற்கத் தக்கது. 'அடல் பூஜல் திட்டத்தின் உள்ளடக்கம் இதை தெள்ள தெளிவாக கூறுகிறது. நிலத்தடி நீர் மேலாண்மைக்கான நிறுவன கட்டமைப்பை பலப்படுத்துவது என்றும், நீடித்த நிலத்தடி நீர் மேலாண்மைக்கு சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வரவும் அந்த திட்டம் உத்தேசித்துள்ளது. நீர் பயன்படுத்துபவர்கள் சங்கம், நிலத்தடி நீர் தொடர்பான தரவுகளை கண்காணித்து வழங்குதல், நீர் செலவினங்கள், கிராம பஞ்சாயத்து அளவில் நீர் பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுதல் முதலியன இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்.

ஏழு மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 8350 கிராம பஞ்சாயத்துகள் இதனால் பலமடையும். நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஊக்கத்தொகை அளித்திடவும் இந்த திட்டத்தில் .இந்த திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோதி அவர்கள் இதை தெரிவித்த்த்தார். சிறப்பாக செயல்படும் கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் அதிக ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் மோதி அவர்கள் கூறினார்கள். நிலத்தடி நீர் மேலாண்மையில் எடுக்கப்பட்ட ஒரு அதிரடியான முடிவு இது.

எனினும், இந்த திட்டம் நல்ல பலன்களை கொடுப்பதற்கு, விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி வேளாண் நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். பயிர்களுக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படும் நீர்ப்பாசன முறையை கையாளும்படி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கரும்பு போன்ற பயிர்கள் விளைய அதிகமான நீர் தேவைப்படுகிறது. கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

எனினும், நீர் வீணாகுவதை தடுக்க காலங்காலமாக செய்யப்பட்டுவரும் வேளாண் தொழிநுட்பங்களில் மாற்றம் கொண்டுவரவேண்டிய தேவை உள்ளது. நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகளில் நீர் சிக்கனத்தை கடைபிடிக்கும் படி விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமவாசிகள் நீர் செயல் திட்டம் மற்றும் நீர் நிதி ஏற்படுத்த முன் வரவேண்டும். நீர் பயன்பாடு மற்றும் மேலாண்மையில் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தி வறண்ட பூமியை பசுஞ்சோலையாக இந்த திட்டத்தின் மூலம் மாற்றினால் அதுவே நம் நாட்டின் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு செய்யும் காணிக்கையாகும்.









Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.