சவூதி அரேபியா—கதார் நாட்டின் இருதரப்பு உறவுகள்
டாக்டர் லட்சுமி பிரியா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி
வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பில் 40-வது மகாநாடு நடைபெறவுள்ள நிலையில், சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் அனைத்தும் கதார் நாட்டுடன் தூதரக உறவுகள் இல்லாத நிலை இருந்து வந்தது.
ஆனால் தற்போது சவூதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல், கதார் நாட்டு அதிபர் ஷேக் தமீம் தானிக்கு ரியாத்தில் நடைபெறவுள்ள வளைகுடா நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். கதார் நாட்டின் பிரதமர் ஷேக் அப்துல்லா தானியும் கலந்து கொண்டு மகாநாட்டை சிறப்பித்துள்ளார்.
ஆனால் 2017 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. தற்போது சவூதி அரேபியாவின் எண்ணைய் கிணறுகள் தாக்கப்பட்ட போது கதார் நாட்டு பிரதமர் சவூதி அரேபியா விரைந்து சென்று தனது ஆதரவை தெரிவித்திருந்தார். தோகா நடரில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் அண்மையில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் கலந்து கொண்டு சிறப்பித்தன.
அமெரிக்காவின் சவூதி தாக்குதலை தொடர்ந்து ஆதரவை குறைத்து கொண்டு வளைகுடா நாடுகளுடன் நேசக் கரத்தை நீட்டும் வகையில் சவூதி அரேபியா தனது தூதரக உறவுகளை மாற்றியமைத்து கொண்டு வருகிறது எனலாம். ஆனாலும் ஐக்கிய அரபு அதிகாரிகள் கதார் நாட்டை இன்னமும் முழுமையாக நம்பத் தயாராக இல்லை. ஐக்கிய அரபு குடியரசின் வெளியுரவு துறை அமைச்சர் அன்வர் கர்கேஷ் பேசுகையில் பிரச்சனைகளுக்கு காரணமானவர்களே பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும் என்றும், பஹ்ரெய்ன் வெளியுறவு அமைச்சர் அகமது சாலியா பேசுகையில், கதார் நாடு பிரச்சனைகளை தீர்க்க இன்னமும் தீவிரமாக யோசிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள கதார் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் முகமது பின் தான் தகுந்த மரியாதையுடன் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத பேச்சு வார்த்தைக்கு கதார் நாடு தயாராக உள்ளது எனினும், ஐக்கிய அரபு குடியரசு அதிபரின் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பிற்கு வருத்தங்களை தெரிவித்தும் அமைதியை நிலைநாட்ட விரும்பியுள்ளார்.
அமெரிக்காவினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாடும் தற்போது வளைகுடா நாடுகளுடன் கைகோர்த்து செயல்பட தயாராகி வருகின்றது மேலும் கடந்த அக்டோபரில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கதார் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
கதார் நாட்டு பிரச்சனைக்கு இந்திய அரசு அமைதியான தீர்வையே எதிர்பார்த்துள்ளது. சவூதி அரேபியாவில் 32 இலட்சம் இந்தியர்களும் கதார் நாட்டில் 6 இலட்சம் இந்தியர்களும் வாழ்ந்து வரும் நிலையில், அமைதி திரும்பினால் மட்டுமே, வர்த்தகம், எரிசக்தி, சுற்றுலா போன்றவைகளின் மூலம் சவூதி அரேபியா மற்றும் கதார் நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை இந்திய அரசு வலுப்படுத்த இயலும்.
சர்வதேச கொள்கைகளின்படி ஒவ்வொரு நாட்டின் இறையான்மை பாதுகாக்கப்பட்டும் பிரச்சனைகள் அமைதியாக தீர்க்கப்பட்டால் மட்டுமே, சவூதி அரேபியா, கதார் நாடு மற்றும் இந்திய அரசுடன் ஆன முத்தரப்பு உறவுகள் யாருக்கும் பாதிப்பில்லாமல் வளைகுடா நாடுகளில் அமைதி திரும்பும் என்றால் அது மிகையாகாது.
Comments
Post a Comment