“ ஈரான் நாட்டின் ஆர்ப்பாட்டங்கள் வளைகுடா முழுவதும் எதிரொலிக்கிறது”
ஈரான் நாட்டிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஆசிப் சுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.
ஈரான் அரசாங்கம், தனது நாட்டு ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, மேலும் அதிக நிதியை ஒதுக்குவதற்கு, பெட்ரோல் ஏற்றுமதியை பங்கீடு முறையில் வினியோகிக்கப் போவதாக போன மாதம் அறிவித்திருந்தது. எண்ணெய் வளம் மிக்க ஈரான் நாட்டின் அரசாங்கம் இவ்வாறு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் அங்கே அரசியல் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதற்கு , எதிர்க்கட்சி குழுக்கள் மீதும் வெளிநாட்டு எதிரிகள் மீதும் ஈரானிய அதிகாரிகள் குற்றம்சாட்டி தீர்க்கமான பதிலளிக்கின்றனர். அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேலும் பரவாமல் தடுக்க இணையதள சேவையை முற்றிலுமாக அவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். ஈரானிய புரட்சி காவல்படை IRGC யின் தலைமை தளபதியின் கூற்றுப்படி, இந்த அமைதியின்மை மூலம், ஈரானின் எதிரிகளின் நோக்கம், இஸ்லாமிய குடியரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த அமைதி இன்மையால் ஏற்பட்ட உயிர் இறப்பின் எண்ணிக்கையை ஈரான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் 208 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த அமைதி என்னை காலகட்டத்தில், ஈரானில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் 7000 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
பாதுகாப்பு படையினரால் சில ஆர்ப்பாட்டகாரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று, எந்த ஒரு எண்ணிக்கையையும் கொடுக்காமல், ஈரான் நாட்டின் ஊடகம் ஒப்புக்கொண்டுள்ளது. CIA உடன் தொடர்புடைய எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஈரான் நாட்டின் உளவுத்துறை கூறியுள்ளது. இரண்டு வார கால வன்முறை மோதல்களுக்கு பிறகு, ஆயுதம் ஏந்தாத அல்லது ஏதாவது அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்கும்படி ஈரான் நாட்டு அதிபர் ஹாஸன் ரவுஹனி அவர்கள் இந்த வாரம் தொலைக்காட்சி உரை ஒன்றில் கூறியுள்ளார்.
ஈரான் , அமெரிக்காவால் கடுமையான தடைகளை எதிர்கொண்டு வரும் இந்த வேளையில், ஈரானில் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈரான், மற்றும் 6 சக்தி வாய்ந்த உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து போன வருடம் அமெரிக்கா தன்னை விலகிக்கொண்டது. அமெரிக்காவின் தடைகளினால், எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்வதில் பல கட்டுப்பாடுகளை ஈரான் எதிர்கொண்டு வருகிறது, இதனால் அந்நாட்டின் என்னை அடிப்படையிலான பொருளாதாரம் மோசமடைந்து உள்ளது. இந்த தடை களினால் அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பொருளாதார குறைகளிலும் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எண்ணெய் விலை உயர்வு தூண்டப்பட்டாலும், ஈரானில் தற்பொழுது ஏற்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்ட கால நிலைப்பாட்டின் விளைவே ஆகும். அமெரிக்கா முதலில் தடைகளை நீக்கிக் கொண்டால், தற்போது நிலவி வரும் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ,ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. ஈரான் ஏவுகணை திட்டத்தை கைவிட்டால் மற்றும் அணுசக்தி திட்டத்தை மீண்டும் ஒப்புக்கொண்டாள் மட்டுமே தடைகளை விலக்கிக் கொள்ள முடியும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. இந்த நிலைமையினால் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது , இதை தீர்க்க கடினமாக உள்ளது, மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளது.
ஸ்திரம் இல்லாத ஈரான் என்பது, யாருக்கும் பயனளிக்காது, ஈரான் மாகானகளான , khuzestan, சிஸ்தான், Baluchistan மற்றும் குர்திஸ்தான் போன்ற இடங்களில் வசிக்கும் மக்களின் எதிர்ப்புக்களை அடக்குவது என்பது, அதிக வன்முறைக்கு வழி வகுக்கும் என்று அஞ்ச்படுகிறது.
ஈரானில் அமைதியின்மை மற்றும் வளைகுடா பகுதிகளில் கொந்தளிப்பு என்பது இந்தியாவிற்கு விருப்பமில்லாதது. ஈரான் உள்பட வளைகுடா நாடுகளுடன் இந்தியா நல்ல உறவுகளை கொண்டுள்ளது. ஈரான், இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பாரம்பரியமிக்க நாடாகும் . ஈரானில், சபாஹர் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது, அந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் படைகளினால் இதுபோன்ற முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
Comments
Post a Comment