இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான 6 ஆவது கூட்டு ஆணையக் கூட்டம்.
(இந்தியப் பெருங்கடல் பிராந்திய விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் எம் சமதா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்.)
இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான 6 ஆவது கூட்டு ஆணையக் கூட்டம் (ஜே.சி.எம்) புதுதில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் முழு அளவையும் மறுஆய்வு செய்ய ஜே.சி.எம் ஒரு வாய்ப்பை வழங்கியது.
அதிபர் சோலி அவர்களின் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், கடந்த ஒரு வருடத்தில் மாலத்தீவில் நிகழ்ந்துள்ள நேர்மறையான ஜனநாயக மாற்றம், இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையிலான பல துறைகளை உள்ளடக்கிய இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகுத்தது. அபிவிருத்தி உதவி மூலம் மாலத்தீவில் சமூகத் துறை வளர்ச்சியைத் தவிர, இரு நாடுகளும் கடல், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன. மாலத்தீவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு, அந்நாட்டுக்கு 140 கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார நிதி உதவியை இந்தியா அறிவித்தது. இதைத் தவிர, முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக இந்தியா 80 கோடி டாலர் கடன் வசதியான எல்.ஓ.சியையும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 56 லட்சம் டாலர் மதிப்பிலான மானிய உதவிகளையும் அறிவித்தது. இந்த உதவித் திட்டங்கள் மாலத்தீவின் பல்வேறு தீவுகளுக்கு இடையிலான வளர்ச்சிக்கான இடைவெளியைக் குறைக்க உதவும். ஐ.நா மனித மேம்பாட்டு அறிக்கை 2019 இன் படி, மாலத்தீவில் சமத்துவமின்மை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
பிராந்தியத்தில் பாரம்பரியத்தைத் தாண்டிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், இருதரப்பு உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ‘காம்யாப்’ என்ற கடலோரக் காவல்படை கப்பலை இந்தியா பரிசாக வழங்கியது. இந்தியா-மாலத்தீவு பாதுகாப்பு ஒத்துழைப்பில் மாலத்தீவின் தேசிய பாதுகாப்புப் படைக்கு (எம்.என்.டி.எஃப்) உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பயிற்சி அளித்தல், கடலோரக் கண்காணிப்புக்கான ரேடார் அமைப்பு (சி.எஸ்.ஆர்) ஆகியவை அடங்கும். இருநாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு, வன்முறை, தீவிரவாதத்தை எதிர்ப்பது தீவிரவாதப் பிரச்சாரங்களை ஒடுக்குவது தொடர்பான கூட்டு செயற்குழுவின் கூட்டத்திற்கு ஒரு ஆரம்பத் தேதியை நிர்ணயிக்க, இந்தக் கூட்டத்தில் முடிவு செய்தன.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் பல்வேறு முயற்சிகளை மாலத்தீவு மேற்கொண்டுள்ளது. சிரியாவை ஒரு போர் மண்டலமாக அறிவித்து, ‘அரசாங்கத்தின் அங்கீகாரமின்றி சிரியாவுக்குப் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்’ என்ற அம்சத்தைப் புகுத்தி, பயங்கரவாத தடுப்பு சட்டம் திருத்தப்பட்டது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் அல்-கொய்தாவுடன் இணைந்த மாலத்தீவு குடிமக்கள் மீது, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அதிபர் ஆணையம் அறிவுறுத்தியது. மாலத்தீவைச் சேர்ந்த முகமது அமீன் என்பவர் தான் அமெரிக்காவால் "பயங்கரவாதத் தலைவர்" என்று அறிவிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். அகமது ரில்வான், யமீன் ரஷீத் போன்ற முக்கிய வலைதளப் பதிவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கொலை செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்று, அல்-கொய்தாவின் துணைத் தலைவர்கள் எனக் கூறப்படும் முகமது மஸீத் மற்றும் சோமித் முகமதுவின் பெயர்களை , நாட்டில் ’காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான அதிபர் ஆணையம்’ பட்டியலிட்டுள்ளது. ஜனவரி 2014 முதல், நாட்டில் மதத் தீவிரவாதம் தொடர்பான 188 வழக்குகள் பதிவாகியுள்ளன. டிஜிட்டல் இணைப்பு மற்றும் மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்துவது, இந்தியாவுக்கும், மாலத்தீவுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னுரிமையாக இருந்து வருகிறது. மேலும்,‘ரூபே’ முறைமையை ஏற்றுக்கொள்வதும், தேசிய அறிவு வலையமைப்பை (என்.கே.என்) மாலத்தீவுக்கு விரிவாக்குவதும் அனைவரையும் உள்ளடக்கிய இணைப்பை வலுப்படுத்தும் என்பதை ஜே.சி.எம் ஒப்புக் கொண்டது.
இந்திய நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டு வரும் ஹுல்ஹுமாலே (Hulhumale) கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாடு குறித்தும் ஜே.சி.எம் மதிப்பாய்வு செய்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் மாலத்தீவு தேர்தல் ஆணையத்திற்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான ஒப்பந்தத்திற்கும் இந்தக் கூட்டத்தில்
ஒப்புதல் வழங்கப்பட்டது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் இந்தியப் பிரதமரை சந்தித்தார். ஜே.சி.எம், "இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும், முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்யவும், மேலும் லட்சியமான வழியை முன்வைக்கவும் உதவும்" என்று பிரதமர் மோதி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. இருநாடுகளுக்கும் இடையே, பல உயர்மட்டக் கூட்டங்கள் நடந்துள்ளன. நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கும் சாத்தியமான ஒவ்வொரு துறையிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட மாலத்தீவுகள் விருப்பம் தெரிவித்துள்ளது. மாலத்தீவின் உள்நாட்டு அரசியல் ஸ்திரத்தன்மையும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க உதவிகரமாக விளங்குகிறது.
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு 6 ஆவது ஜே.சி.எம் நடைபெற்றிருந்தாலும், இது இந்தியா-மாலத்தீவு இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் ஏற்படும் மாற்றத்தைக் காண்பிப்பதே இரு அண்டை நாடுகளுக்கும் உள்ள சவால். இப்போது செயல்படாத தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) கீழ், பிராந்திய ஒத்துழைப்பானது, முடிவு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், மக்களுக்கு உறுதியான நன்மைகளை கொண்டு வர வேண்டும் என்றும் மாலத்தீவு எதிர்பார்க்கிறது. எனவே, இரு நாடுகளும் இருதரப்பு மற்றும் பிராந்திய நிலைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 7 ஆவது ஜே.சி.எம், 2021 இல் மாலத்தீவில் நடைபெறும்.

Comments
Post a Comment