ஆஃப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்.

(அரசியல் விமரிசகர் எம்.கே. டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

ஆஃப்கானிஸ்தான் அதிபருக்கான தேர்தலின் முதல்கட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போரினால் சீர்குலைந்த அந்நாட்டின் ஜனநாயக அமைப்புக்கள் பலம் பெறுவதற்கான முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது எனலாம். தற்போதைய அதிபர் அஷ்ராஃப் கனி அவர்கள், 50.46 சதவிகிதம் வாக்குகள் பெற்று, வென்றுள்ளதாக, அந்நாட்டின் சுதந்திரமான தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லா, 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தாலிபான்களால் கட்டவிழ்க்கப்பட்ட கண்மூடித்தனமான வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தான், மக்களாட்சியை நிறுவ பல இன்னல்களை சந்தித்துவரும் வேளையில், அந்நாட்டின் சுதந்திரமான தேர்தல் ஆணையம், தேர்தல் முறைகேடுகளைத் தவிர்ப்பதில் கவனத்துடன் செயல்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் தனிநபர் அடையாள சோதனையில் தேறாத ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இதுகுறித்து வெளிவந்த பல புகார்களைப் பரிசீலிப்பதாக, தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

Comments

Popular posts from this blog

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.

தேவையற்ற  விஷயங்களில் மூழ்கியுள்ள பாகிஸ்தான்.

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்