செயலுத்தி உறவுகளை பலப்படுத்தும் இந்தியா மற்றும் ஓமன்.
(மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்.)
ஓமன் நாட்டுடன், அதன் பெரிய மற்றும் வசதியான அண்டை நாடுகளை ஒப்பிடும்போது, குறைந்த அளவே அந்நாடு சர்வதேச கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் ஓமன், பாரசீக வளைகுடாவின் முகப்பில் முக்கியமான இடத்தில் உள்ள இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றாகும். நீண்ட காலமாக உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்த ஓமன், 1970 முதல் சுல்தான் காபூஸின் தலைமையில் குறிப்பிடத்தக்க திருப்பங்களைக் கண்டுள்ளது. மக்கள் நலனுக்காக எண்ணெய் வளத்தை முறைப்படுத்தி பொருளாதார முன்னேற்றத்தையும், செழிப்பையும் சுல்தான் காபூஸ் ஏற்படுத்தினார். அவரது தலைமையில் ஓமன் அதன் அண்டை நாடுகளுடன் ஒரு சீரான உறவைப் பேணி வருவதால், பிளவுபட்டிருக்கும் வளைகுடா பிராந்தியத்தில் ஓமன் முக்கியப் பங்களிக்க முடிகிறது. பிராந்தியத்தில் பதட்டங்களைக் குறைப்பதிலும், சர்ச்சைக்குரிய சிக்கல்களைத் தீர்ப்பதிலும் ஓமனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஓமனின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் இந்தியா, கடந்த சில தசாப்தங்களாக அந்த நாட்டுடன் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தலைமையில், வளைகுடா பகுதியில், இந்தியாவின் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையில் முன்னுரிமை பெற்ற நாடுகளில் ஒன்றாக ஓமன் வளர்ந்து வருகிறது. அதன் பிரதிபலிப்பாக, ஓமனுடன் அரசியல், இராஜதந்திர, வணிக மற்றும் உத்தி ரீதியிலான இருதரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், பிரதமராக நரேந்திர மோதி அவர்கள் பதவியேற்ற பின்னர், அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டுப் பிரமுகர் ஓமனின் வெளியுறவு அமைச்சர் யூசுப் பின் அலவி என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஓமனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிறகு, அப்போதைய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்கள், 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஓமன் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.
இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பிரதமர் மோதி அவர்கள் ஓமனுக்குப் பயணம் மேற்கொண்டார். சுல்தான் காபூஸை சந்தித்தார் இந்தியப் பிரதமர். இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் என, பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்த பரஸ்பர ஆர்வம் தொடர்பான விஷயங்களை இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம் வணிக உறவுகளை மேம்படுத்துவது, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பரஸ்பர பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது போன்றவை இந்த சந்திப்பின்போது முக்கியத்துவம் பெற்றன. இந்தியாவும் ஓமனும் கடல்சார் பாதுகாப்புத் துறையில் ஒன்றிணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டன. இரு தரப்பினரும் பாதுகாப்பு குறித்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்க ஒப்புக் கொண்டன. அதன்படி, செயலுத்தி ரீதியாக, முக்கியமான இடத்தில் அமைந்துள்ள, டுகம் துறைமுகத்தில், இந்தியப் பெருங்கடலில் ரோந்து செல்லும் இந்திய கடற்படைக் கப்பல்களைப் பராமரிக்க அனுமதிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் உத்திரீதியிலான உறவுகளுக்கு மத்தியில், இந்த வாரத் தொடக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் ஓமனுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் யூசுப் பின் அலவி உட்பட பல தலைவர்களை சந்தித்து பரஸ்பர நலன் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்தார். கடல் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திலும் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். மஸ்கட்டில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உரையாடினார். ஓமனில் வசிக்கும் வெளிநாட்டவர்களிலேயே, அதிக அளவில், அதாவது சுமார் 7,80,000 என்ற எண்ணிக்கையில் உள்ள இந்தியர்கள், ஓமனின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்தியா, ஓமனின் முக்கியமான வணிகக் கூட்டாளியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2018-19 ஆம் ஆண்டில் 500 கோடி டாலர் அளவை எட்டியது. ஓமனில் இருந்து எரிசக்தி மற்றும் உரங்களை இறக்குமதி செய்யும் முதன்மையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
வளைகுடாவில் ஒரு முக்கியமான கூட்டாளி நாடாக, ஓமனை இந்தியா பார்க்கிறது. டாக்டர் ஜெய்சங்கர் அவர்களின் பயணமானது, ஓமன் அரசியல் தலைமையுடன் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து, இந்தியா ஆழ்ந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும், ஓமன் மற்றும் பிராந்தியத்துடனான இந்தியாவின் வளர்ந்து வரும் ஈடுபாட்டை முன்னேற்றுவதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணமானது, ஓமன் நாட்டுடனான இந்தியாவின் இராஜதந்திர, அரசியல் அணுகுமுறையை விரிவுபடுத்துவதுடன், இந்தியாவின் நீட்டிக்கப்பட்ட அண்டைநாட்டுப் பகுதியாகக் கருதப்படும் வளைகுடா பிராந்தியத்துடனான மேம்பட்ட ஈடுபாட்டிற்கான இந்தியாவின் நோக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Comments
Post a Comment