புதிய இந்தியாவின் தொலை நோக்கைப் பிரதிபலிக்கும் பிரதமரின் சுதந்திர தின உரை.
(மூத்த பத்திரிக்கையாளர் சங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)
பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்ற பின்பு ஆற்றிய முதல் சுதந்திர தின உரையானது, இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் மிகவும் வலுவான அரசியல் மற்றும் சமூக செய்திகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. முதல் முறையாக இந்தியாவின் அரசியல் வரலாற்றில், பிரதமர் ஒருவர் தனது சுதந்திர தின உரையில், இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதன் காரணமாக நாட்டின் முன்னேற்றங்களில் ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை பற்றி எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..
ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் படி 2027 ஆம் வருடம் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும். இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் விளங்கும். இந்த மக்கள் தொகை பெருக்கத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாட நேரிடும். ஏழை மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும். அனைத்து மக்களுக்கும் சமையல் எரிவாயு, கழிப்பிடம், மின்சாரம், வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு தொடர்ந்தால் பொது மக்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளில் பாதிப்பு ஏற்படும். இதைத்தான் பிரதமர் இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின உரையில் தெளிவாக எடுத்துரைத்தார்.
100 நிமிடங்களுக்கு மேல் நீடித்த தனது உரையில், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு குறித்து, ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். 2018 ஆம் வருடம் நிதி ஆயோக் வெளியிட்ட, கலப்பு நீர் மேலாண்மை குறியீட்டு அறிக்கையில், தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் இதர நகரங்களில், நிலத்தடி நீரின் அளவு 2020 ஆம் வருடத்தில் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும் என்றும், இதனால் பத்து கோடி மக்கள் பாதிப்பு அடைவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, “ ஜல் சக்தி” என்ற புதிய துறையை உருவாக்கி, ஜல் ஜீவன் திட்டத்துக்காக 3.35 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. அதிக அளவு மக்கள் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு முன் முயற்சியும் வெற்றி பெறாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோதி அவர்கள், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு குறித்து, ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என்று குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தது முக்கியத்துவம் பெறுகிறது.
சுற்றுப்புற சூழலைச் சீரழிக்கும், ஒரு முறை மட்டுமே உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். அதேபோல், மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதற்காக, ரசாயனம் மற்றும் உரங்களைத் தவிர்க்குமாறு இந்திய விவசாயிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்கும் அரசின் முனைப்பை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நேரடியாக விவசாயிகளுக்கு நிதியுதவி சென்றடைய ரூபாய் 90 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், 14.5 கோடி இந்திய விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வருடத்திற்கு ரூபாய் 6000/- செலுத்தப்படுகிறது.
பிரதமரின் சுதந்திர தின உரையின்போது, அனைத்து ராணுவப் படைக்குமான தலைவர் என்ற புதிய பதவி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியை ஏற்படுத்துவது குறித்த முடிவு, கார்கில் போர் நடைபெற்ற காலத்திலிருந்தே, 20 வருடமாக நிலுவையில் இருந்து வந்துள்ளது. பாதுகாப்புத் துறையில் தற்போது ஏற்பட்டு வரும் சீர்திருத்தங்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையிலும், தற்போதைய காலகட்டத்தில் நிலவும் பாதுகாப்புச் சவால்களை திறம்பட எதிர் கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற இந்த உயரிய பதவியானது, இந்திய பாதுகாப்புத் துறையின் மூன்று படைப் பிரிவுகளுக்குமிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்த மிகவும் உதவும். இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையும் இதனால் வெகுவாக மேம்படும்.
பிரதமர் மோதி அவர்களின் முதாலாவது பதவிக் காலமான 2014 – 2019 ஆம் ஆண்டுகளின்போது, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. தற்போது, அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு முந்தைய அரசாங்கங்கள் 70 வருட காலமாக செய்ய முடியாததை தனது அரசாங்கம் 70 நாட்களில் முடித்து விட்டது என்று பிரதமர் கூறினார். இதற்கு முன்னிலை சான்றுகளாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை நீக்கியதையும், முஸ்லிம் பெண்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியதையும் குறிப்பிடலாம். ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற கொள்கையையும் பிரதமர் தமது உரையில் வலுவாக முன்வைத்தார். மொத்தத்தில் பிரதமர் அவர்களின் உரை அவரது தொலைநோக்குப் பார்வையை பிரதிபலித்தது. 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடு என்ற புதிய இந்தியாவின் இலக்கையும் பிரதமரின் உரை பிரதிபலித்தது.

Comments
Post a Comment