அமைதி கிட்டாமல் அல்லாடும் யேமன்
முனைவர் லக்ஷ்மி பிரியா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்
ஆடன் ஆட்சி கவிழ்ப்பு சம்பவத்திற்கு பிறகு, சவுதி முன்னெடுக்கும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள யேமன் தனி பிரிவினவாத இயக்க தலைவர் விருப்பம் தெரிவித்திருப்பதன் மூலம், யேமன் நாடானது இந்த வாரம் நம்பிக்கை ஒளி கீற்றொன்றை காண்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு பெற்ற யேமன் தெற்கு பிரிவினைவாத படைகள் கடும் சண்டையிட்டு அதிபர் மாளிகையை கைப்பற்றியதில், 40 பேர் கொல்லப்பட்டனர், 260க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹவுதி இயக்கத்தின் தலைவர்களை படுகொலை செய்ய அப்ட்ராபு மன்சூர் ஹாதியின் படைகள் முயற்சி செய்து அதன் மூலம் இயக்கத்தை ஒழிக்க முயன்றதனால்தான் வன்முறை தூண்டப்பட்டது என்று பிரிவினைவாத இயக்க தலைவர் ஐடாரஸ் கூறியுள்ளார். ஆடன் நகரத்தில் தெற்கு இடை நிலை மாறுதல் கவுன்சில் பகுதிகளில் சவுதி வான்வழி தாக்குதல்கள் நடத்தியதன் விளைவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுக்கு சாதகமான யேமனி கட்சிகளை அடுத்த வாரம் பேச்சு வார்த்தைகள் நடத்தி அதன் மூலமாக ஆடனில் நிலவும் பதற்றத்திற்கு தீர்வு காணுமாறு ஐக்கிய அரபு அமீரகமும், சவுதி அரேபியாவும் கேட்டுகொண்டுள்ளது.
2011-ல் அரபு வசந்த எழுச்சியின் விளைவாக அலி அப்துல்லா சாலே தனது துணை அதிபரான ஹாதியிடம் அதிகாரத்தை கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். அந்த தோல்வியுற்ற அரசியல் மாற்றம்தான் இந்த பிரச்னையின் ஆணி வேராகும். தனது ஆட்சி காலம் முழுமையும், ஹாதி அரசானது ஜிஹாத் தாக்குதல்கள் உட்பட்ட உள் நாட்டு பிரச்னைகளை தீர்க்கும் முயற்சிகளிலும், தெற்கு பிரிவினைவாத இயக்கம், சாலேவுக்கு விஸ்வாசமான பாதுகாப்பு பணியாளர்கள், ஊழல், வேலையில்லா திண்டாட்டம், போதிய உணவு பாதுகாப்பின்மை என பல கடும் பிரச்னைகளில் சிக்கி தவித்தது. இவை யாவும் ஷியா ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக மாறியது. மாற்றத்திற்கான செயல்பாடுகள், செயல்முறைகளில் அதிருப்தி அடைந்திருந்த சுன்னி பிரிவினர், யேமனி குடிமக்கள் உதவியுடன் சாதா மற்றும் சனாவை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவருவதில் வெற்றியடைந்த ஹவுதிகள், நாடு முழுமையும் கைப்பற்றுவோம் என்று மிரட்டுகின்றனர்.
வட்டார எதிரியான இரான் நாட்டின் ஆதரவு பெற்றிருப்பதாக நம்பப்படும் குழு ஒன்றின் வளர்ச்சியை கண்டு கவலையடைந்த சவுதி அரேபியா 2015-ல் ஹாதி அரசுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கூட்டணி ஒன்றை அமைத்தது. சுன்னி அரபு நாடுகளான சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேய்ன், கட்டார், சூடான், எகிப்து, ஜோர்டான், மொராக்கோ ஆகிய நாடுகள் கூட்டணியில் அங்கம் வகிக்க, அமெரிக்காவும், பிரிட்டனும் வெளியேயிருந்து பொருள்களை வழங்கின. சவுதி வழி நடத்திய கூட்டணி தெற்கு யேமனிலிருது ஹவுதிகளை துரத்தி அடித்தது. ஆனாலும், சானாவை ஹவுதிக்கள் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 2017-ல் ரியாதை நோக்கி ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் யேமனுக்கு தடைகளை உருவாக்கியது. பதிலுக்கு சவுதி அரேபியா கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த துறைமுக நகரமான ஹோடெயிடாவை தாக்கியது.
நீண்டு கொண்டிருக்கும் நெருக்கடியானது யேமானியர்களின் வாழ்வையே புரட்டி போட்டு அவர்களை மிகவும் துன்ப பட வைத்துள்ளது. சர்வதேச அறிக்கைகள் உலகில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான மனிதாபிமான பேரழிவு யேமன் என்று கூறுவதன் மூலம் யேமானியர்கள் படும் துன்பம் அறியப்படுகிறது. 2019 யேமனுக்கான மனிதாபிமான தேவைகள் – ஒரு கண்ணோட்டம் எனும் தலைப்பினாலான ஓ.சி.ஹெச்.ஏ அறிக்கையானது, ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சம் யேமானியர்கள் உணவு தேவையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் 20 லட்சம் குழந்தைகள் 5 வயதுக்கு குறைவானவர்கள், 10 லட்சத்திற்கும் மேலான கர்ப்பிணி பெண்களும், குழந்தைக்கு தாய்பாலூட்டும் தாய்மார்களும் அடக்கம்.
டிசம்பர் 2018-ல் அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா தன் முயற்சியினால் கொண்டு வந்தது. நகரத்திலிருந்து இரண்டு கட்டங்களாக வெளியேறி வேறு இடங்களுக்கு செல்வதாக ஹவுதிக்கள் உத்தரவாதம் அளித்தனர், ஆனால் இதுவரையில் அதில் எந்த வித முன்னேற்றமும் இல்லை.
செங்கடலையும், ஆடன் வளைகுடாவையும் இணைக்கும் ஜலசந்திகளில் அமைந்திருக்கும் யேமன், அந்த பிராந்தியத்திற்கும், உலகுக்கும் மிக முக்கியமான நாடாக இருப்பதற்கு காரணம், பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துரத்தப்படும் அல் கைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாகும். , சுன்னி சவுதி அரேபியாவுக்கும், ஷியா இரானுக்கும் இடையேயுள்ள வட்டார அதிகார போராட்டத்தை யேமன் பிரச்னை மேலும் விசிறி விடுகிறது. சவுதி ஆதரவளிக்கும் அரசு படைகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சி பெற்ற எஸ்.டி.சி பாதுகாவல் படையினரும் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதால், மிகவும் சிக்கலான இந்த நெருக்கடி, மோதலுக்குள்ளேயே மற்றுமொரு மோதலை பரப்பியுள்ளது. உலகின் 20 சதவிகித எண்ணெய் ஏற்றுமதியை சுமக்கும் கப்பல்கள் பாப் அல் மாண்டெப் ஜலசந்தி வழியாக பயணிக்கின்றன. யேமன் பிரச்னையின் காரணமாக அவை பத்திரமற்றா ஆபத்தான சூழ்நிலையில் பயணப்படவேண்டி உள்ளது.
இந்தியா, யேமன் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், யேமனில் அமைதி இந்தியாவிற்கும் முக்கியமாகும். 2015-ல் இந்திய தூதரகம் சானாவிலிருந்து டிஜிபோடிக்கு மாற்றப்பட்டது. இந்தியர்கள் யேமனுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது. 2015-ல் இந்தியா ராஹத் ஆபரேஷனை வெற்றிகரமாக செயல்படுத்தி, 4640 இந்தியர்களையும் 41 நாடுகளை சேர்ந்த 960 வெளி நாட்டவரையும் வான் மூலமாகவும், கடல் மூலமாகவும் பத்திரமாக யேமனிலிருந்து மீட்டு வெளியேற்றி கொண்டு வந்தது. உதவி நடவடிக்ககளிலும், மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளிலும் இந்தியா தொடர்ந்து பங்காற்றி வருகிறது. மனிதாபிமான நிவாரண பணிகளிலும் பல இந்தியர்கள் பங்காற்றி வருகின்றனர். யேமனில் அமைதி நிலவ வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. யேமனின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் புது தில்லி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.

Comments
Post a Comment