பன்முகத்தில் பரிமளிக்கும் இந்திய, ஜெர்மானிய உறவுகள்.
(மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி.)
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் ஜெர்மனி சென்றிருந்தார். அப்போது அவர், ஓமன், ஸ்பெயின், குவைத், ஆர்மீனியா, சவூதி அரேபியா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து அளவளாவினார். சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களையும் அவர் சந்தித்துப் பேசினார். ஐரோப்பிய மன்றத்தின் தலைவரையும் அவர் சந்தித்தார்.
பின்னர் பெர்லின் சென்றடைந்த இந்திய வெளியுறவு அமைச்சர், ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், பாதுகாப்பு அமைச்சர் அன்னெக்ரெட் கிராம்ப் கேர்ரன்பார் ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவு குறித்த பல்வேறு விஷயங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இருதரப்புக்கும் பரஸ்பரம் நலனளிக்கும் விஷயங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதித்தார். சர்வதேச மேடையில் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே, வலுவான, ஒத்துழைப்புமிக்க கூட்டாளித்துவம் சிறப்புற விளங்குகிறது. இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, ஃபிரான்சுடன் இணைந்து, ஜெர்மனி உருவாக்கிய பல்நிலை இயக்கத்தில் இந்தியா இணைந்துள்ளது. இன்றைய உலகில், நாடுகள் வர்த்தக ரீதியாகத் தங்கள் சுயலாபத்தை மட்டும் முன்னிறுத்தி செயல்படுகின்றன என்றும், இதனால், பல்நிலைத்தன்மை அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்றும் டாக்டர் ஜெய்ஷங்கர் தெரிவித்தார். சர்வதேச வணிகத்தில், ஐ.நா.வும் உலக வர்த்தக அமைப்பும் தங்கள் முக்கியத்துவத்தை நிலைநாட்டுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் எண்ணிக்கையை விரைந்து விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, இந்திய, ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர்கள் இருவரும் விரிவாக விவாதித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஐ.நா.பாதுகாப்புச் சபையின் சீர்திருத்தத்திற்கு, ஜி-4 அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள இந்தியாவும், ஜெர்மனியும் வலியுறுத்தி வருகின்றன. பத்திரிக்கையாளர்களிடையே உரையாடுகையில்,
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் விஷயத்தில், இந்தியாவும் ஜெர்மனியும் சில ஆண்டுகளாகவே இணைந்து பணியாற்றி வருகின்றன என்று, டாக்டர் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டார். சர்வதேச சூரிய ஒளிக் கூட்டமைப்பு மற்றும் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக் கூட்டமைப்பு ஆகிய இந்தியாவின் பல்நிலை முன்னெடுப்புக்களுக்கு, ஜெர்மனி ஆதரவளித்தமைக்கு, அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவும், ஜெர்மனியும் உயர்மட்டத் தொடர்புகளை வலுப்படுத்தி வந்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கெல் அவர்கள் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். சுமுகமான வர்த்தக உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இருநாடுகளும் தங்களுக்குள் செயலுத்திக் கூட்டாளித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச மேடைகளிலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கெல் அவர்களின் இந்தியப் பயணத்தின்போது, இந்திய, ஜெர்மானிய செயலுத்திக் கூட்டாளித்துவம், இருநாடுகளுக்கும் பொதுவான ஜனநாயகம், தடையற்ற நியாயமான வர்த்தகம், விதிகளுக்குட்பட்ட சர்வதேச ஒழுங்குமுறை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் மதிப்பளிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் குறிப்பிட்டார்.
நடப்பாண்டில், இந்தியாவும், ஜெர்மனியும் தங்கள் செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன. இருநாட்டு வெளியுறவு அமைச்சக செயலருக்கு இடையே, கலந்தாலோசித்தலுக்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவது என, இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. தேசிய, பிராந்திய செயலுத்தி விஷயங்களில் புரிதல்களை ஊக்குவிக்க வெளிப்படையாகப் பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், முக்கியக் கொள்கைகளில் இணைந்து செயல்பட வேண்டிய வழிமுறைகள் பற்றிப் பரிந்துரைக்கவும் 1.5 செயலுத்திப் பேச்சுக்களத்தை ஏற்படுத்தியுள்ளன. இருநாட்டு ஊடக நிபுணர்களிடையே தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் இருநாடுகளும் உறுதி கொண்டுள்ளன.
டாக்டர் ஜெய்ஷங்கர், ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சருடன் செயல்பாட்டில் இருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து, விவாதித்தார். இருதரப்புப் பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தங்களை அமல்படுத்துவதில் இருநாடுகளும் முனைந்துள்ளன. இருநாட்டுப் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஊக்கம் அளிப்பதுடன், தற்போதைய மற்றும் புதிய பாதுகாப்புப் பேச்சுவார்த்தைக் கட்டமைப்பு, உலக, பிராந்திய, கடல்சார் மற்றும் மின்னணுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருநாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களும், குறைந்தபட்சம் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது சந்திப்பது என்று தீர்மானித்துள்ளனர். உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு வழித்தடங்களில் ஜெர்மனி ஆர்வம் காட்டியுள்ளது.
பெர்லினில், சர்வதேசத் திரைப்பட விழாவையொட்டிய இந்தியக் காட்சியகத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது உரையாற்றிய டாக்டர் ஜெய்ஷங்கர், பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்றுள்ளது, திரைப்படம் தயாரிப்பதிலுள்ள பல்வேறு அம்சங்களில் அபிரிமிதமான வாய்ப்புக்களை வழங்கும் என்று குறிப்பிட்டார். பாதுகாப்பு முதல் பொருளாதாரம் வரை, ராஜீய விவகாரங்கள் முதல் கலாச்சாரம் வரை, இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நிலவும் சுமுகமான உறவுகள், வரும் ஆண்டுகளில் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment