நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்
யோகேஷ் சூத், பத்திரிக்கையாளர்
தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமர்
மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து முடிக்கப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மற்ற முக்கியப் பணிகளின் பக்கம் கவனம் செலுத்தின. எதிர்பார்த்ததைப் போலவே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டால், இந்த பட்ஜெட் அமர்வு, சில நேரங்களில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டது. அமர்வால் அனுமதிக்கப்படும் அனைத்து விஷயங்களைப் பற்றி பேசவும் தயாராக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த அமர்விற்கான அரசாங்க சட்டப்பூர்வ நடவடிக்கை நிரலில், 45 மசோதாக்களும் ஏழு நிதி அறிக்கைகளும் அடங்கும். பல விஷயங்கள் தொடர்பாக அரசாங்ககத்தை சூழ்ந்து கொண்டு தாக்க எதிர்கட்சிகள் தயாராக உள்ளன.
சிஏஏ, என்.ஆர்.சி மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் மேல் சபையான மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ், இடவிசாரி, டி.எம்.சி, தி.மு.க, எஸ்.பி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், இன்னும் சிலரும், அவைக்கு மத்தியில் வந்து கோஷங்களை எழுப்பினர். அமளிக்கு மத்தியில், துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்விற்கும், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். அவைத் தலைவர் தாவர் சந்த் கெஹ்லாட், தீர்மானத்தை மேற்கொள்ள அனுமதிக்கும்மாறு எதிர்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள், சிஏஏ, என்.பி.ஆர் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிற விவகாரங்கள் தொடர்பாக ஒத்திவைப்பு அறிவிப்பை அளித்திருந்தனர். இது அவைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடுவால் மறுக்கப்பட்டது. மேல் அவையில், வெங்கைய நாயுடு அவர்கள், அவை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துச் செல்ல கட்டிய முனைப்பு அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.
ஓமனில், சமீபத்தில் இறந்த காபூஸ் பபின் சையித் அல் சைதுக்கும் அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவியதால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ், வெங்காய இறக்குமதி மற்றும் ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் ஆகியவை பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.
கீழ் சபையான மக்களவையிலும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சலசலப்புகளை உருவாக்கினர். சபை கூடியவுடன், காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இடவிசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு நடுவில் சென்று முழக்கங்களை எழுப்பினர். உறுப்பினர்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு குறித்தும் கோஷங்களை எழுப்பினர்.
கடந்த ஆண்டு நவம்பரில், வரலாற்று சிறப்புமிக்க ராம ஜன்ம பூமி-பாப்ரி மஸ்ஜித் வழக்கில், இந்திய உச்சநீதிமன்றம் காட்டிய வழியின் படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஒரு அறக்கட்டளை அமைப்பது தொடர்பாக பிப்ரவரி 5 ஆம் தேதி மக்களவையில் பிரதமர் அறிவித்திருப்பது இந்த வாரத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடு குறித்த போராட்டங்கள் நடக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள என்.ஆர்.சி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அரசாங்கம் கீழ் சபையான மக்களவையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. பிரதமர் நரேந்திர மோதி அவர்களும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய புதுப்பிற்காக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் குறித்த அச்சத்தை நீக்கினார். இந்த நேரத்தில், எந்த ஆவணமும் கேட்கப்படாது என்றும் ஆதார் எண்ணை அளிப்பதும் கட்டாயமானதாக இருக்காது என தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் என்.பி.ஆர் தொடங்கப்பட்டது என்றும் மக்களுக்கு நன்மைகளை வழங்க அது அவசியம் என்றும் பிரதமர் கூறினார். மோதி அவர்கள், மக்கள் நலன் சம்பந்தப்பட்ட இடத்தில் அரசியல் ஆதாயம் பற்றி பார்க்கக்கூடாது என்று தெரிவித்தார். என்.ஆர்.சி குறித்த எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யாந்த் ராய், ‘இதுவரையில், இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை தேசிய அளவில் தயாரிக்க அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்றார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிகையில், மேல் சபையான மாநிலங்கள் அவையில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையான ஒருங்கிணைக்க வழிவகுத்தது என்று கூறினார். ஜம்மு-காஷ்மீர் நாட்டின் ‘கிரீடம்’ என விவரித்த அவர், அனைத்து மத நம்பிக்கைகளின் பேரில் அது காட்டும் சமத்துவ அணுகுமுறையும், அதன் சூஃபி பாரம்பரியமும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பம்சங்களாகும் என கூறினார்.
ராம் ஜன்ம பூமி வழக்கின் தீர்ப்பு வெளி வந்தவுடன், இந்திய மக்கள் ஜனநாயக செயல்முறை மற்றும் நடைமுறைகள் மீது தங்களுக்குள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை திடமாக வெளிப்படுத்தினார்கள் என்று பிரதமர் கூறினார். அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான ராமர் கோயில் அமைய நாம் அனைவரும் ஆதரவு அளிப்போம் என்றார் அவர். கருவூல பெஞ்சுகளிலிருந்து அரசாங்கத்தின் நகர்வை ஆதரிக்கும் கோஷங்களும் எழுப்பப்பட்டன, 2019 ஆம் ஆண்டிற்கான திவால் குறியீடு திருத்தக் கட்டளை மற்றும் 2020 ஆம் ஆண்டின் கனிம சட்டங்கள் திருத்தக் கட்டளை ஆகியவற்றை மசோதாக்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் இந்த அமர்வில் அரசாங்கம் மேற்கொள்ளும்.
Comments
Post a Comment