அந்நிய நேரடி முதலீட்டில் முதல் 10 இடத்துக்குள் மீண்டும் இடம் பெற்றுள்ள இந்தியா.
(பேராசிரியர் டாக்டர் லேகா சக்ரபோர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமண குமார்.)
2019 ஆம் ஆண்டில் இந்தியா 16 சதவிகிதம் அதிகமாக அந்நிய நேரடி முதலீட்டை பெற்று அதிக அந்நிய முதலீட்டை பெரும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா பெற்ற அந்நிய நேரடி முதலீடு 4200 கோடி டாலரிலிருந்து 4900 கோடி டாலராக அதிகரித்துள்ளது என ஐ. நா அமைப்பான UNITED NATIONS CONFERENCE ON TRADE AND DEVELOPMENT வெளியிட்டுள்ள 'முதலீடுகளின் போக்கு கண்காணிப்பு' என்ற தலைப்பிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் உலகளாவிய நேரடி அந்நிய முதலீடு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. 14,100 ஆயிரம் கோடி அமெரிக்கா டாலராக இருந்த நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 1 சதவிகிதம் சரிந்து 13,900 ஆயிரம் கோடி டாலராக குறைந்தது. அமெரிக்காவும், சீனாவும் நேரடி அந்நிய முதலீட்டை குறைந்த அளவே பெற்ற போதும் இந்தியா முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.
தெற்காசிய பகுதியில் நேரடி அந்நிய முதலீடு 10 சதவிகிதம் அதிகரித்து 6000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவின் பங்கு 80 சதவிகிதத்திற்கும் அதிகமானதாகும். இதில் பெரும்பாலான பங்கு தொழில் நுட்பம் உட்பட சேவைத்துறைக்கு சென்றுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் நேரடி அந்நிய முதலீடு 6 சதவிகிதம் மற்றும் 20 சதவிகிதம் குறைந்து முறையே 340 கோடி டாலராகவும், 190 கோடி டாலராகவும் உள்ளது.
உலகளாவிய அரசியல் கொந்தளிப்பு காரணமாக அந்நிய முதலீட்டை பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. 'BREXIT' ஐ தொடர்ந்து இங்கிலாந்தில் நேரடி அந்நிய முதலீடு 6 சதவிகிதம் குறைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனும் 15 சதவிகித அளவிற்கு சரிவை சந்தித்து 30500 கோடி டாலராக உள்ளது. தனியார் மையத்தை துவங்கியிருக்கும் பிரேசில் நாட்டில் 26 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. நேரடி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் அரசியல் பொருளாதாரம் மிக முக்கிய காரணியாகும். மேலும், அரசியல் நிகழ்வுகள் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் கண்டிப்பாக தடையாக இருக்க கூடும்.
போர்ட்ஃபோலியோ முதலீட்டிலிருந்து நேரடி அந்நிய முதலீடு மூலம் மூலதன வரத்துகளில் மாற்றம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஏனென்றால் நேரடி அந்நிய முதலீடு என்பது நிலையான ஒன்று. போர்ட்ஃபோலியோ முதலீடு என்பது கையிலிருக்கும் ரொக்கம் போன்றது. வட்டி விகிதத்திற்கு ஏற்ப அது மாறுபடும் நிலையற்ற தன்மை கொண்டது. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் எப்போதும் இல்லாத அளவாக அதிக கையிருப்பு இருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று. இந்த ஆண்டு துவக்கத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு 65.1294 அமெரிக்கா டாலர் என்ற அளவில் இருந்தது. இது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதியிலிருந்து அதிகரித்தபடியே உள்ளது. இது ஆஸ்திரேலிய, பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மொத்த மதிப்பிற்கு இணையானதாகும். அந்நிய செலவாணி 4 அம்சங்களை உள்ளடக்கியதாகும். வெளிநாட்டு கரன்சி சொத்து, தங்கம், சிறப்பு அதிகாரங்கள் மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தில் இருக்கும் கையிருப்பு. உலக அளவில் பெறப்படும் நேரடி அந்நிய முதலீட்டில் பாதி அளவை வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் பெறுகின்றன. சீன, சிங்கப்பூர், பிரேசில், ஹாங்காங் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இதில் அதிக அளவை அதாவது 69500 கோடி டாலர் அளவில் பெறுகின்றன. இதில் அமெரிக்கா முதல் இடத்தை பெற்றுள்ளது. ஒரு சதவிகிதம் குறைந்து 25100 கோடி டாலர் ஈர்த்துள்ளது.
பிராந்திய அளவில் வேறுபாடுகளை கருத்தில் கொண்டால், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகள் அதிக அளவில் நேரடி அந்நிய முதலீட்டை பெற்றுள்ளன. அவை மூன்று மற்றும் 16 சதவிகிதம் பெற்றுள்ளன. வட அமெரிக்காவில் நேரடியா அந்நிய முதலீடு பூஜ்யம் என்ற நிலையில் உள்ளது. ஒட்டுமொத்த நிலையில், ஆசியாவும், ஐரோப்பாவும் 6 சதவிகிதம் மற்றும் 4 சதவிகிதம் என்ற அளவில் இழப்பை சந்தித்துள்ளன. வளர்ச்சி கண்ணோட்டத்தில் பார்த்தோமேயானால், பொருளாதார அளவில் மாற்றத்தை சந்தித்து வரும் நாடுகள் அதிக அளவில் பயனடைந்தவையாக உள்ளன. அவை 65 சதவிகிதம் லாபம் அடைந்துள்ளன. எல்லை தாண்டி இணைப்புப் மற்றும் கையகப்படுத்துவதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது சேவைத் துறையில் அதிக அளவாக 56 சதவிகிதம் குறைந்து 20700 கோடி டாலராக உள்ளது. இதைத் தொடர்ந்து உற்பத்தி துறை 19 சதவிகிதம் குறைந்து 24900 கோடி டாலராக உள்ளது. முதன்மை துறையில் 14 சதவிகிதம் குறைந்து 3400 கோடி டாலராக உள்ளது.
உலகளாவிய பொருளாதாரம் மேம்பட்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் நேரடி அந்நிய முதலீடுகள் 2020 ஆம் ஆண்டு சுமாராக அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக ஐ நா அறிக்கை சாதகமான அம்சம் ஒன்றை வலியுறுத்துகிறது.
சர்வதேச செலாவணிய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அவர்கள் இந்திய பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்த நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள நிலையில் நேரடி அந்நிய முதலீடு குறித்த சாதகமான தகவல்கள் வந்துள்ளன. பொருளாதார வளர்ச்சியில் அதிகரித்து வரும் நேரடி அந்நிய முதலீடு ஏற்படுத்தக்கூடிய நீண்ட கால பாதிப்புகளை அலசி ஆராய வேண்டியுள்ளது. நிதித் துறையில் இந்திய அரசு எடுத்து வரும் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும், பெரு பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
Comments
Post a Comment