பிரேசில் அதிபரின் இந்திய வருகையால் வலுவாகும் உறவு
தில்லி சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஆஷ் நாராயன் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்
உலகமெனும் சமுத்திரத்தில் உலவும் இரண்டு திமிங்கிலங்கள் என இந்தியாவையும், பிரேசிலையும் கூறலாம். சீனாவை தவிர, உலகில் வல்லரசுகளாக உயரக்கூடிய திறம் படைத்த நாடுகள் என இந்தியாவையும் பிரேசிலையும் கூற முடியும். ஆனால் சிறிது காலத்திற்கு முன் வரை இந்தியா, குறைவான வளர்ச்சி விகிதம் மற்றும் வறுமைக்கு எப்படி பெயர் போனதாக இருந்ததோ அது போல பிரேசிலானது உயர் பண வீக்கம் மற்றும் கடனுக்கு பெயர் பெற்றிருந்தது. உலகின் பெரும் ஜன நாயக நாடாக இந்தியா திகழ்ந்தாலும் கூட மேற்கானது நமது நாட்டை பாம்பு பிடாரர்கள் மற்றும் விசித்திரமான சாமியார்கள் வசிக்கும் நிலமாகத்தான் நினைத்தனர். பிரேசில் ஒன்றும் பெரிதாக மதிக்கபடவேண்டிய நாடல்ல, அது நாளைய நாடாகும். எப்போதுமே அவ்வாறுதான் இருக்கும் என ஃபிரான்சின் சார்ல்ஸ் டி கௌவுல் பிரேசிலைப் பற்றி அலட்சியமாக கூறியிருக்கிறார். இன்றோ, இந்தியாவும், பிரேசிலும் சாதாரண நிலையில் இருந்து உலகின் முண்ணனி நாடுகளாக மாறியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இன்னாடுகளின் வெளியுறவு கொள்கை நிலைப்பாடுகளானது பல்வேறு இரு தரப்பு மற்றும் பல தரப்பு அமைப்புகளுடன் தொடர்ந்த பேச்சு வார்த்தைகள் மூலம் சர்வதேச உறவுகளில் பெருமளவில் ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் செயலுத்தி சமூகமானது இப்போதுதான் பிரேசில் மீது கவனத்தை திருப்பியிருப்பதால் வளர்ந்து வரும் இந்தியா பிரேசில் கூட்டாளித்துவத்திற்கான அங்கீகாரமே இந்தியாவின் 71வது குடியரசு தின கொண்டாட்டங்களின் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்ஸனரோவின் 4 நாள் அரசு முறைப் பயணமாகும். இந்தியாவும் பிரேசிலும் ஸ்திரமான ஜன நாயக நாடுகள் மட்டுமல்ல, தற்போது ட்ரில்லியன் டாலர் பொருளாதாரங்களும் ஆகும். சர்வதேச விவகாரங்களிலும், ராஜதந்திரத்திலும் இந்தியாவைப் போலவே பிரேசிலும் விரைவான முன்னேற்றங்களை அடைந்துள்ளது. வெகு காலம் பிரேசிலானது உள் நோக்கிய வெளியுறவு கொள்கையை கடைப்பிடித்து வந்தது. ஆனால் தற்போது பல்தரப்பு நிறுவனங்களை, அமைப்புகளை வெகு திறமையாக உபயோகித்து தனது இருப்பை, மதிப்பை உலகில் பெறுகிறது. குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு வருகை தரும் மூன்றாவது பிரேஸ்லிய அதிபர் ஆவார் போல்சனாரோ. 1996ல் அதிபர் ஃபெர்னாண்டோ ஹென்ரிக் கார்டொசோவும் 2004-ல் அதிபர் லூயிஸ் இனாசியோ டா சில்வா லூலாவுக்கும் இந்த சிறப்பு கிட்டியது.
பிரதமர் திரு மோதி 2014-ல் ஃபோர்டலெசாவிலும் 2019-ல் பிரேசிலியாவிலும் இரண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். வெளிநாடுகளின் அதிபர்கள், அரசு தலைவர்களை குடியரசு தின சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கவுரவிப்பது சிறந்ததொரு செயல்தந்திர உத்தியாகும்.
சர்வதேச மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து பிரதமர் திரு மோதியும் அதிபர் போல்சனாரோவும் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். குடியரசு தலைவர் ராம் நாத்கோவிந்த் பிரேசிலிய அதிபரை சிறப்பித்து ஒரு விருந்து அளித்தார்.
இரு நாடுகளும் இரு தரப்பு முதலீட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம், சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த உடன்படிக்கை உட்பட ஒரு டசனுக்கும் மேலான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்திய பிரேசில் வர்த்தக மைய கூட்டத்திலும் அதிபர் போல்னசரா உரையாற்றினார், அவரது 7 அமைச்சர்கள், அந்தந்த துறை இந்திய அமைச்சர்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள், இரு தரப்பு உறவுகளை வேறொரு தளத்திற்கு ஏற்றி செல்லும் நோக்கத்துடன் நடைபெற்றது.
திரு போல்னசரோ அதிபராக தேர்ந்தெடுக்கபட்டபோது, பிரேசில் உள்முகமாக திரும்பி, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள், மாகாணங்களுடன் ஆன உறவுகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கும் என்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தேர்தல் பிரச்சாரங்களின்போது அவரது அறிவிப்புகளைக் கண்டு பிரேசில் பிரிக்ஸ் அமைப்பில் ஆர்வம் இனி காட்டபோவதில்லை என்று கூட சிலர் நினைத்தனர். ஆனால் இத்தகைய சந்தேகங்கள் ஆதாரமற்றவை. கடந்த சில மாதங்களுக்கு முந்தான் அதிபர் போல்சனாரோ பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டினார். சீனாவுக்கு வெற்றிகரமான பயணம் சென்று வந்தார். செயல் தந்திர கூட்டாளிகளான இந்தியாவும் பிரேசிலும் மாறி வரும் உலக அதிகார மாற்றங்களை தங்களுக்கு சாதகமாக்கும்படியாக வெளியுறவு கொள்கைகளை முன்னுரிமைபடுத்தியுள்ளன. தற்போதைய உலகமானது, முனைவுதன்மையற்றது, பல பிராந்திய உலக ஒழுங்கு, பல-பல-முனைவுதன்மையுடையவை என பல பிரிவுகளாக அறியப்படுகிறது. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தேசத்தின் நலனிற்காக புதிய கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மிகப்பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக 8.2 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது; இதில் இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 3.8 பில்லியன் டாலர்களாகும். இதில் மிகவும் ஊக்கமளிப்பதாக இருப்பது தகவல் தொழில் நுட்பம், மருந்து பொருட்கள், எரி ஆற்றல், வேளாண் வர்த்தகம், சுரங்கம் மற்றும் பொறியியல் துறைகளில் பிரேசிலில் பெருகி வரும் இந்திய முதலீடுகள் ஆகும். பாதுகாப்பு, தொழில் நுட்ப பகிர்வு மற்றும் தளவாட ஒப்பந்தத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்க வகை செய்யும் செயல் திட்டம் கொண்ட செயல் தந்திர கூட்டாளித்துவம் குறித்து இரு தரப்புமே மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளன.

Comments
Post a Comment