வளைகுடா பிராந்தியத்தில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் இந்தியா.
(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் பி.கே. குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ.வெங்கடேசன்.)
ஈரான் நாட்டு அல் குட்ஸ் படைத்தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி அவர்கள், போன வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது ஜாவித் ஸரீஃப் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நடைபெற்றுள்ள நிகழ்வுகள் மிகவும் தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளன என்று குறிப்பிட்டார். நிலவிவரும் பதட்டங்களுக்கு இந்தியாவின் ஆழ்ந்த கவலையை டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் வெளிப்படுத்தினார், தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர். 19 ஆவது கூட்டு ஆணைய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக, 15 நாட்களுக்கு முன்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பொழுது அவர், ஈரான் நாட்டு அதிபர் ஹஸன் ரூஹானி மற்றும் ஸரீஃப் உள்பட, பல ஈரானிய அதிகாரிகளை சந்தித்தார். இந்த மாதம் 14 ஆம் தேதி நடக்கவிருக்கும் ரெய்சினா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக ஸரீஃப் அவர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈராக், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் நாடுகளுடன், ஈரானின் ஈடுபாடுகளை மிக சிறப்பாகக் கையாண்டவரும், செல்வாக்கு மிக்கவருமான ஜெனரல் சுலைமானி அவர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் வார்த்தைப் போர்களின் பின்னணியில் இந்த்த் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.. ஈரான் நாட்டின் தலைசிறந்த தலைவராக இருந்த அலி காமெனெய் அவர்களுக்கு அடுத்தபடியாக, முக்கிய நபராக ஜெனரல் சுலைமானி அவர்கள் கருதப்பட்டார்.
அமெரிக்காவிற்குக் கடுமையான பதிலடி காத்திருக்கிறது என்று ஈரான் தலைவர்கள் உடனே சபதம் எடுத்துள்ளனர். அமெரிக்காவின் எந்த ஒரு இலக்கையும் ஈரான் தாக்கினால், ஈரான் நாட்டின் மிக முக்கியமான கலாச்சார இடங்கள் உள்பட, குறித்து வைக்கப்பட்டுள்ள 52 ஈரான் நாட்டு இலக்குகள் மீது மிக வேகமாகவும் கடுமையாகவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அதிபர் ட்ரம்ப் அவர்கள் எச்சரித்துள்ளார். ஈரான் நாடு இதற்கு முன்பு தாக்கப்பட்ட அளவைவிட மிக மோசமாகத் தாக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.
ஈரான் நாட்டின் தலை சிறந்த தலைவராகக் கருதப்பட்ட சுலைமானி அவர்களைப் பிடித்துத் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று டிரம்ப் அரசாங்கம், அவர் பதவியேற்ற 1989 ஆம் வருடம் முதற்கொண்டே அறிவித்திருந்தது. எனவே, அவர் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படக் கூடும் என்ற கடுமையான சவாலை எதிர்நோக்கியிருந்தார். தற்பொழுது நடத்தப்பட்ட கொலைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும். தெற்கு டெஹ்ரானில் இருந்து, 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சுலைமானி அவர்களின் சொந்த ஊரான கேர்மானில் அவர் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்ட பின்பு, தக்க பதிலடி ஏற்பட வாய்ப்புள்ளது.
பிறநாடுகளைப் போன்று, இந்தியாவும், அங்கு நிலவிவரும் சூழலின் தீவிரத்தை உணர்ந்துள்ளது. சுலைமானி அவர்களின் கொலையைத் தொடர்ந்து உடனடியாக இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரசீக வளைகுடாப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது என்றும், நிலைமை கட்டுமீறி செல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ஸரீஃப்f அவர்களுடன் பேசியதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அரபுநாடுகள் மற்றும் ஓமன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
ஈரான் நாட்டின் பதிலடி எங்கு, எவ்வாறு இருக்கும் என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. செயலுத்தி ஆய்வாளர்களுக்கு இது மிகவும் குழப்பமாகவே உள்ளது. அப்பகுதியிலுள்ள அமெரிக்க இலக்குகள் மீதோ, அமெரிக்கா தேசத்தின் மீதோ நேரடியாகத் தாக்கினால், அதன் விளைவு ஈரானுக்கு மிகவும் மோசமாக அமையும் என்பதால், மத்திய கிழக்குப் பகுதியில், இஸ்ரேல், ஈராக் அல்லது சவுதி அரேபியா போன்ற அமெரிக்கக் கூட்டாளி நாடுகளின் மீது ஈரான் கவனம் செலுத்தக் கூடும்.
இந்த நாடுகளுடன் இந்தியா நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரான் அமைதி காக்கும் என்று எதிர்பார்ப்பது கடினம். அதே சமயம், ஈரானின் தாக்குதல்களால் பாரசீக வளைகுடா பெரிதும் பாதிக்கப்பட்டால் அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவு.
ஈரானுடன் எரியாற்றல் பாதுகாப்பு, சபாஹர் துறைமுக மேம்பாடு மற்றும் மத்திய ஆசிய வழித்தடம் போன்றவற்றில் இந்தியா மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது. இச்சூழலில் ஈரானின் இக்கட்டான நிலைமையை இந்தியா முற்றிலும் உணர்ந்து புரிதலுடன் அணுகுகிறது என்ற செய்தியை மறைமுகமாக இந்தியா தெரியப்படுத்தியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் இத்தகைய புரிதல்களைக் கருத்தில் கொண்டு, ஈரான் தான் எடுக்கப்போகும் எதிர்வினை குறித்த நடைமுறைக்கு ஒப்பான வழிமுறைகளை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு சர்வதேச ஆதரவு என்ற பரந்த சூழலை நோக்குகையில், இந்தியாவின் அரவணைப்பு, ஈரானின் செயல்களுக்கான முன்னுரிமைகளை வகுப்பதில் துணை புரியும் என நம்பலாம்.

Comments
Post a Comment