சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு அறிவியல் பூர்வமான சாத்தியங்கள்

இந்திய அறிவியல் இதழ் நிர்வாக ஆசிரியர் என்.பத்ரன் நாயர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

அறிவியலானது ஆய்வுகூடங்களின் நாங்கு சுவர்களுக்குள்தான் இருந்து வருவது மரபாக இருப்பினும் கூட, நாட்டை வளர்ச்சி பாதையில் வெகு துரிதமாக கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் அறிவியலை எவ்வாறு சமூக ரீதியாக பொருத்தும் வகையில் உபயோகமாக்குவது என்பதே தற்போதைய இலக்காகும். சமீபத்தில் நடந்து முடிந்த அறிவியலாளர்களின் மகா கும்ப மேளா என்றழைக்கப்படும் இந்திய அறிவியல் கழகத்தின் 107வது கூட்டத்தில், தேசிய தலைவர்கள், ஆய்வுகூடத்திற்கும், வெளியுலகுக்கும், ஆய்வுகூடங்களின் ஆய்வுகளுக்கும், சுகாதார வசதிகளுக்கும் இடையே நிலவி வரும் இடைவெளி குறைக்கபட்டு, அவை இணைக்கப்படவேண்டும் என்றும், மேலும் அவை மக்கள் சார்புடையதாக திகழ வேண்டும் என்றும் தங்களது உரைகளில் கூறியுள்ளனர்.

இந்திய அறிவியல் கழகத்தின் இந்த ஆண்டு கூட்டத்திற்கான கருப்பொருள் “ஊரக வளர்ச்சிக்கானஅறிவியலும், தொழில் நுட்பமும்” ஆகும். அரசுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையேயான பாலமாக தொழில் நுட்பம் விளங்குகிறது. வேகமான வளர்ச்சிக்கும், சரியான வளர்ச்சிக்கும் இடையே சமன் செய்யும் காரணியாக விளங்குவதும் தொழில் நுட்பமே. தொழில் நுட்பத்திற்கு பாரபட்சம் என்பது கிடையாது. அது நடு நிலைத்தன்மை உடையது. மனிதனின் கூருணர்வு திறத்திற்கும், நவீன தொழில் நுட்பத்திற்கும் இடையே ஒத்திசைவு ஏற்படும்போது அது முன் என்றுமில்லாதபடியான முடிவுகளை விளைவுகளை கொண்டு வரும் என்று பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்த்ர மோதி தனது துவக்க உரையில் கூறினார்.

உலகானது கால நிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலினால் மிகப்பெரும் இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆஸ்த்ரேலியாவின் மிகப்பெரும் காட்டு தீயாகட்டும், அமேசான் காடுகளில் ஏற்பட்ட மிகப்பெரும் காட்டுதீ விபத்தாகட்டும் இவை அனைத்துமே மனித அலட்சியத்தாலோ, வேண்டுமென்றோ அல்லது வேறு விதமாகவோ நிகழ்ந்ததே ஆகும். ஆனால் இந்த விபத்துகளின் அளவும் அதனால் விளைந்துள்ள பேரழிவுகளும், கால நிலை மாற்றமானது எவ்வாறு இயற்கை பேரிடர்களை தீவிரப்படுத்த முடியும் என்பதையும், அது எவ்வாறு தாவர மற்றும் விலங்கினங்களுக்கு நம்மால் கற்பனை கூட செய்யமுடியாத துயரத்தை அளிக்கமுடியும் என்பதையும் தெளிவாக காட்டியுள்ளது என்று விஞ்ஞனிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். , பேரழிவு தரும் புயல்கள், பெரும் மழை, வெள்ள்ங்கள், கொழுந்து விட்டெரியும் காட்டுத்தீக்கள், மோசமான வறட்சிகள், பெரும் நில நடுக்கங்கள் என இயற்கையின் சீற்றத்தை எண்ணற்ற வடிவங்களில் நாம் கண்டு வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கால நிலை மாற்றத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று தனது நிறைவு உரையில் குடியரசு துணை தலைவர் திரு எம். வெங்கைய்யா நாயுடு கூறினார்.

உலகின் மறு மூலையில்தானே இத்தகைய பேரிடர்கள் நிகழ்கின்றன, நமக்கென்ன வந்தது என்று இந்தியா இருந்து விட முடியாது. உலகம் முழுமையும் பல வகைகளில் ஒன்றொடொன்று தொடர்புடையதாகும், பருவ னிலை மாற்றத்தின் தாக்கமும், அதன் விளைவுகளும் நம்மையும் நிச்சயம் தாக்கும். அதனிடமிருந்து விரும்பினாலும் தப்பிக்க முடியாது. வெறும் அதிக வளமையும், செல்வசெழிப்பும் மட்டுமல்ல, வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படவேண்டும் என்பதே நமது அனைத்து முயற்சிகளுக்கும் அடி நாதமாகும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில்தான் அறிவியல் சமூகமானது ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது சுற்று சூழலை பாதுகாப்பதற்கும் அதே சமயம் பெரும் நிலபரப்புடைய நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான இலக்குகளையும் கருத்தில் கொண்டு ஒரு தீர்வை கண்டுபிடிக்கவேண்டும். விவசாயமாகட்டும், சுகாதாரமாகட்டும் உடனே அறிவியலாளர்கள் கவனமளிக்க வேண்டிய பல தேசிய ப்ரச்னைகள் இந்தியாவில் உள்ளன. இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மேம்படுத்தவும், விவசாய நெருக்கடி, தொற்று நோய்கள் மற்ற நோய்கள் என பெருகி கொண்டேயிருக்கும் நோய்கள் போன்றவை தடுக்கப்பட வேண்டும்.

விவசாய முறைகள், சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான திட்டங்கள், மக்களை சென்றடைவதை தொழில் நுட்பமானது மேம்படுத்தியுள்ளது. சமூக சங்கிலியின் கடைசி கண்ணியில் இருப்பவருக்கும், கடைக்கோடியில் வசிப்பவரையும் அவை சென்றடைய தொழில் நுட்பம் இன்னமும் அதிகமாக தேவைப்படுகிறது. நமது நாட்டின் பரந்த நிலப்பரப்பையும், நமது மக்கள் தொகையின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டுபார்க்கையில் இது அச்சுறுத்தல் அளிக்க கூடிய மிகவும் கடினமான முயற்சியாகும். நமது விஞ்ஞனிகள், நிர்வாகிகள், திட்டம் தீட்டுபவர்கள் அனைவருக்குமே இது ஒரு சவாலாகும். நாம் நமது அறிவியல் சாதனைகளை, எத்தனை ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டன அல்லது எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பதன் அடிப்படையில்தான் கணக்கிடுகிறோம். ஆனால் உண்மையில் நமது தற்போதைய சவால்களுக்கான தீர்வுகளை நம் அனைவரின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில், காண உதவுகிறதா என்பதுதான் அதற்கான பரிட்சை என்று திரு நாயுடு அவர்கள் கூறினார்.

பெரும் கண்டுபிடிப்புகளை திட்டமிடமுடியாது என்பது நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியை சேர்ந்த ஸ்டீபன் ஹெல்லின் கருத்தாகும். அதே சமயம், எவரும் அறிவியலில் மாயைகளை கொண்டிருக்கமுடியாது எங்கிறார் அவர். நிஜ உலக பயன்பாடுகள் உடனடியாக தெரியாத களங்களில் ஆராய்ச்சிக்கான அவரது அழைப்பு சராசரி இந்தியர்களின் அபிலாஷைகள் மற்றும் கோரிக்கைகளுடனோ அல்லது இந்திய தலைமை வகுக்கும் வரைபடத்துடன் ஒத்து போகாமல் இருக்கலாம்.

இந்தியாவிடம் தேவையான மனித வளம், அறிவியல் மனோபாவ பாரம்பரியம், சர்.சி.வி.ராமன், மேக்னாத் சாஹா, ஸ்ரீனிவாச ராமானுஜன், ஹோமி ஜே. பாபா, ஜக்தீஷ் சந்ர போஸ் மற்றும் பல அறிவியலாளர்கள் என சர்வதேச அளவில் அறிவியல் உலகில் தங்களது முத்திரையை பதித்து, உதாரண புருஷர்களாக விளங்கிய பல விஞ்ஞனிகள் எனப் பெரும் பாரம்பரியமே உள்ளது. அறிவியல் பாதைகளில் இளம் மனங்களை ஊக்குவிக்கும் தேசிய சூழலும் நமது நாட்டில் உள்ளதாக ப்ரதமர் திரு மோதி கூறினார். இன்னமும் தீர்வு காணமுடியாமல் உழலும் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண நாம் செய்யவேண்டியது கண்டுபிடிப்பு, காப்புரிமை, உற்பத்தி மற்றும் முன்னேற்றம் என்று அவர் கூறினார்

______________

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.