“ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின், தலைவர், இந்தியாவுடனான வலுவான உறவுகளை மீண்டும் வலியுறுத்தினார்“
ஐரோப்பிய விவகாரங்களின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா ஷர்மாஅவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்ஆ. வெங்கடேசன்.
2020ஆம் வருடத்திற்கான ராய்சீனபேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உயர் பிரதிநிதியான ஜோசப் போரில் பாண்டெலஸ் அவர்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே உள்ள பொது தன்மைகளை மீண்டும் வலியுறுத்துகையில் , பாண்டெலஸ் அவர்கள், உலக வர்த்தக அமைப்பின் தீர்வு செயல்முறை, ஐரோப்பிய நாடுகள் இந்தியா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிரச்சினையாக உள்ள இந்தவேளையில், விதிகள் அடிப்படையிலான பலதரப்பட்ட உத்தரவுகளை இருதரப்பிலும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த தடைகளை உடைப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம், திட்டங்களை வகுத்து உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் இரு தரப்பிற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மற்றும் நடைமுறை தீர்வு ஏற்படுத்துவதற்கும் பெரிதும் உதவும்.
சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஏற்படும் திருட்டு, மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு போன்றவற்றில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்துவது மிகவும் முக்கியமாக உள்ளது. ஆகையால் கடல்வழி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க இணைந்து செயல்படுவது மிகவும் கட்டாயமாகும். இந்தியாவுடனான ஒத்துழைப்பில், மேற்கிந்திய பெருங்கடலில், கடல் திருட்டு போன்றவற்றை எதிர்கொள்ள“அட்லாண்டா நடவடிக்கைகள்” என்பது ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
இந்திய- ஐரோப்பிய ஒன்றிய செயலுத்திகூட்டாளி துவத்தை 2025ஆம் வருடத்திற்கு எடுத்துச்செல்ல, ஒரு புதிய திட்டத்தை மேம்படுத்த வேண்டிதின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி வலியுறுத்தினார். இந்த கூட்டாளித்துவத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே துவங்கிவிட்டன இதற்கான ஒப்புதல் இந்த வருடம் மார்ச் மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டின்போது வழங்கப்படும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை குறைப்பதற்கு, இரு தரப்பும் இணைந்து கூட்டு வழிகளை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை பாதுகாப்பது மற்றும் செயல்படுத்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
2016 ஆம் வருடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடையே,“ ஐரோப்பிய ஒன்றிய - இந்திய தூய்மையான ஆற்றல் மற்றும் பருவநிலை கூட்டாளித்துவம்” CECP , என்பதில் ஒரு சிறப்பான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே உள்ள, பருவநிலை மாற்றம் மற்றும் ஆற்றல் துறைகளில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அதன் நோக்கமாகும், மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான, சுத்தமான, மலிவான மற்றும் நம்பகமான ஆற்றல் வழங்குவதை உறுதி செய்வது, மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவது போன்றவை அதன் முக்கிய நோக்கங்களாகும்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் போன்றவற்றுக்கு எதிராக இணைந்து பலமுறை ஒன்றாக குரல் கொடுத்துள்ளது. ஐரோப்பா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தொடர்ந்து செயல் முறைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை, இருநாடுகளும் இதற்கு முன்பு பலமுறை எடுத்துரைத்துள்ளது.
வர்த்தகம் என்ற தளத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்களது முயற்சிகளை மேல் எடுத்துச் செல்ல, மிகவும் அவசியமாக உள்ளது. இந்திய - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில்( FTA)இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்காக இரு தரப்பில் இருந்தும் சில நெகிழ்வு தன்மைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதலீடு என்பது தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் FTA ஒரு அங்கமாக ஐரோப்பிய ஒன்றியம் பார்ப்பதில்லை. அதேசமயம் தொழிலாளர் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளை , இணைப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கின்றது.
இந்தவருடம் மார்ச் மாதம் நடக்கவிருக்கும், ஆக்கப்பூர்வமான, இந்திய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டின் மூலம், செயல் உத்தி கூட்டாளி துவத்தில் விரிவாக்கம், மற்றும் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் விரிவான ஒத்துழைப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்று பாண்டெல்லஸ் அவர்கள் கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் கடமைகள் மற்றும் முன்னுரிமைகளை பகிர்ந்து கொண்டுள்ளது, அவற்றுள் ஜனநாயகம் பன்முகத்தன்மை மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு போன்றவற்றின் மதிப்புகளை பாதுகாப்பது, இவை அனைத்தும் அடங்கும். பாதுகாப்பான விதிகள் அடிப்படையிலான பிராந்திய மற்றும் சர்வதேச ஒழுங்கு முறைக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

Comments
Post a Comment