அறிவியல் துணையுடனான ஊரக வளர்ச்சியில் கவனம்.
( மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.)
விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தியின் உதவியுடன் ஊரக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பயிர் மகசூலைப் பெருக்குதல், சந்தைப் படுத்துதல், ஊரக வாழ்வாதாரத்திற்கான மாற்று வழிகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் ஏற்கெனவே பல புத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால்,இவற்றின் பயன்களை முழுமையாக அடைவதில், விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளி ஒரு இடையூறாக உள்ளது. எனவே இது நிரப்பப்படவேண்டியது அவசியமாகிறது.
குடியரசுத் துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், பயிர் மகசூலை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் வழிகளைக் கண்டறியுமாறு அறிவியலாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாரதத்தில் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பைப் பராமரிக்க விவசாயிகள் பெரிதும் உதவுகின்றனர். எனவே அவர்கள் நாட்டின் நலனுக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்று அவர் கூறினார். பயிர்களைப் பருவ நிலை மாற்றங்களைத் தாங்குமாறும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், குறைவான நீர்த் தேவைகளைக் கொண்டவையாகவும் மாற்றத் தேவையான வழிகளை ஆராயுமாறு அவர் விஞ்ஞானிகளைக் கேட்டுக் கொண்டார்.
உலக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவை இன்று மிகப்பெரிய கவலைக்குரிய விஷயங்களாக உள்ளன. இவை பருவநிலையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதோடு, பயிர்களுக்குப் பெரும் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன. இதனால், உணவுப் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகிறது. இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பயிர்ச் சேதங்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிய அறிவியலாளர்கள் முன்வரவேண்டும் என்று அவர் கூறினார்.
உற்பத்திக்கு முந்தைய கட்டத்தில் உள்ளீடுகளைப் பயன்படுத்துவதிலிருந்து, உற்பத்திக்குப் பிந்தைய மற்றும் சந்தைப்படுத்தல் வரையிலான வேளாண் மதிப்புச் சங்கிலி முழுவதும் தரம் மற்றும் அளவு இரண்டையும் மேம்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது என, குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். மேலும், இதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும் அவர் விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
பெங்களூருவில் நடந்த 107 ஆவது இந்திய அறிவியல் கூட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண் அறிவியல் கூட்டமும் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. விவசாயிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், விவசாயிகளுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது. அறிவியல்-வேளாண் துறையினரிடையேயான இத்தகைய சந்திப்புகள் புதிய முன்முயற்சிகளுக்கு வழிவகுக்கும். இதனால் மக்கள், குறிப்பாக, விவசாயிகள் பெரும் பயன் அடைய முடியும். நாடு முழுவதிலுமிருந்து புத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளும் சுமார் 120 விவசாயிகள் இதில் கலந்து கொண்டு தங்கள் புதுமைப் படைப்புக்களையும் அவற்றின் பயன்களையும் அறிமுகப்படுத்தினர்.
விவசாய நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் புரட்சியின் தேவை குறித்து பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் பல முறை வலியுறுத்தியுள்ளார். வேகமான வளர்ச்சிக்காக புதுமைகளைக் கண்டறிந்து, காப்புரிமை பெற்று, உற்பத்தி செய்து, வளமை பெருக்க அறிவியலாளர்களை அவர் ஊக்கப்படுத்தினார். பயிர்க் கழிவுகள் எரிப்பு, நீர் மேலாண்மை, உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியன குறித்த பிரச்சனைகளுக்கு, விவசாயிகளை மையமிட்டுத் தீர்வு காணவும் அவர்களை ஊக்குவித்தார்.
மலிவான மற்றும் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பல வாய்ப்புகள் உள்ள கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் பணியாற்ற முன்வருமாறு இளம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் காரணமாகவே, அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன என்றும், ஜியோ டேகிங் மற்றும் டேட்டா சயின்ஸ் தொழில்நுட்பத்தின் காரணமாக, கிராமப்புறங்களில் பல திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2017-18 பயிர் ஆண்டில், உணவு தானிய உற்பத்தி 28.483 கோடி டன்களாக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில், உணவு தானிய உற்பத்தி இலக்கை 28.52 கோடி டன்களாக அரசாங்கம் அறிவித்தது. 2017-18 நிதியாண்டில் பால் உற்பத்தி 16.54 கோடி டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 2018 நிலவரப்படி, இந்தியாவில் ‘கரீப்’ பயிர்களின் மொத்தப் பரப்பளவு, 10.578 கோடி ஹெக்டேரை எட்டியது.
உலகின் இரண்டாவது பெரிய பழங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி 2018-19 ஆம் ஆண்டில் 31.47 கோடி டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த விவசாய ஏற்றுமதி 16.45 சதவீதம் அதிகரித்து, 2018-19 நிதியாண்டில், 3821 கோடி டாலர் அளவை எட்டியுள்ளது. 2019-20 நிதியாண்டில் விவசாய ஏற்றுமதி 3854 கோடி டாலராக இருந்தது. மசாலாப் பொருட்கள் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில், உலகில் முதல் இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி, 2017-18 ஆம் ஆண்டில் 310 கோடி டாலர் அளவை எட்டியது. 2017-18 இல் இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி 36 ஆண்டு கால உச்சமாக, 24.068 கோடி கிலோவாக இருந்தது. அதே 2017-18 ஆம் ஆண்டில், காபி ஏற்றுமதி, 3,95,000 டன் என்ற வரலாறு காணாத அளவை எட்டியது. இந்தியாவில் உணவு மற்றும் மளிகை சில்லறை சந்தை 2017 இல் 38,000 கோடி டாலராக இருந்தது.
டிஜிட்டல் மயமாக்கல், ஈ-காமர்ஸ், இன்டர்நெட் வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகள் கிராமப்புற மக்களுக்குக் கணிசமாக உதவுகின்றன என்றும், பல கிராம அபிவிருத்தி முயற்சிகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்றும், குறிப்பாக, செலவு குறைந்த விவசாயம் மற்றும் பண்ணை முதல் நுகர்வோர் வரையிலான விநியோக சங்கிலி போன்ற துறைகளில் மேம்பாட்டு முன்னெடுப்புக்களை தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்வது சாத்தியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Comments
Post a Comment