கர்தார்பூர் வழித்தடத்தின் முக்கியத்துவம்.
(அமெரிக்காவிற்கான முன்னாள் தூதரும், “த புக் ஆப் நானக்” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.)
இந்தியாவில் பிரிவினை நிகழ்ந்த பிறகு, சீக்கிய யாத்திரீகர்கள் செல்ல முடியாமல் இருக்கும் பல புனிதத் தலங்களுக்கு, தங்கு தடையில்லாமல் சென்றுவர, சீக்கியர்கள் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அது போன்ற புனிதத் தலங்களலேயே, கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா மிகவும் புனிதமான ஒன்றாக விளங்குகிறது. குருநானக் அவர்கள் தனது கடைசி 18 வருட காலத்தைக் கழித்து, உயிர் நீத்த இடமான ராவி நதிக்கரையில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது. சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ள இந்த குருத்வாரா, இந்தியாவின் எல்லையிலிருந்து காணக்கூடிய தூரத்தில் உள்ளது. இந்த வழித்தடம் திறக்கப்பட்டதன் மூலம், இந்தியாவிலிருந்து தினந்தோறும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவிற்கு ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் சென்று வர முடியும். இது லட்சக்கணக்கான மக்களுக்கு உணர்ச்சிபூர்வமாகவும், ஆன்மீக ரீதியாகவும் மிகுந்த மனத்திருப்தியை அளிக்கும்.
இந்தியத் தரப்பில், குர்தாஸ்பூர் நகரில், தேரா பாபா நானக் என்னுமிடத்தில் கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தின் சுங்கச் சாவடியை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் திறந்து வைத்தார். தர்பார் சாஹிப் குருத்வாராவிற்குச் சென்று மரியாதை செலுத்த, யாத்திரீகர்களுக்குத் தற்பொழுது மிகவும் எளிதாகி உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கோர் பாதல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அடங்கிய உயர் அளவிலான பிரதிநிதிகள், தர்பார் சாஹிப் குருத்வாராவிற்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய யாத்திரீகர்கள் குழுவில் அடங்குவர்..
குருநானக் அவர்களின் 550 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டமானது, அவரது போதனைகளைக் கற்றுணர்ந்து, மக்களுக்கு அவர் அளித்த செய்திகளை மீண்டும் பறைசாற்றும் தருணமாக அமைந்துள்ளது. கர்தார்பூரில் அவர் மேற்கொண்ட வாழ்க்கையிலிருந்து, அவர் அளித்த செய்திகளின் பல முக்கிய அம்சங்கள் வெளிப்பட்டன. 20 ஆண்டு காலமாக, தொடர்ந்து பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, உண்மை, நேர்மையான வாழ்க்கை, மனிதர்களிடையே பரஸ்பர கருணைமிக்க சமத்துவம், பிரபஞ்சத் தோற்றத்தின் உண்மையான இயல்பு மற்றும் வழிபாடு ஆகியவை குறித்து ஓயாமல் போதனைகள் அளித்த பின்னர், கடைசியாக, நிரந்தரமான தங்குமிடமாக அவர் கர்தார்பூரைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. துறவறத்தையும், வெற்று சடங்குகளையும் நிராகரித்த குரு நானக் அவர்கள், அனைத்து மதங்களையும் சார்ந்த அறிஞர்களைடையே கலந்துரையாடி அறியாமை இருளைப் போக்கினார். ,
கர்தார்பூரில், குருநானக் அவர்கள், தனது ஆன்மீக செய்திகளுக்கு நடைமுறை வடிவம் அளித்தார். அவர் ஒரு குடும்பத் தலைவராகவும், விவசாயியாகவும் வாழ்ந்து காட்டினார். அவரைச் சுற்றி, அவரைப் பின்பற்றும் சமுதாயத்தினர் வேகமாக, உருவாயினர். இந்துக்கள், முஸ்லிம்கள், ஏழைகள், பணக்காரர்கள், வணிகர்கள், முதலாளிகள் என, பலதரப்பட்ட சமுதாயத்தினரும் குருநானக் அவர்களை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டனர். அவரைப் பின்பற்றியவர்கள், துறவறம் சார்ந்த குழுவாக இல்லாமல், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் போன்ற, குடும்பத்துடன் ஈடுபடுகின்ற, பொது வாழ்க்கையின் பொறுப்புக்களைச் சுமக்கும் மக்களாக விளங்கினர். கடவுளின் படைப்பான இவ்வுலகம், அவரது எண்ணங்களின் பிரதிபலிப்பாக விளங்குகிறது என்பது குருநானக் அவர்களின் முக்கிய செய்தியாகும். மனிதனுக்கு வகுக்கப்பட்ட இப் பாதையில், மன அழுக்குகளை ஒதுக்கித் தூய்மையாக வாழ்ந்து, பிறர் துன்பங்களை அகற்றத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வரவேண்டும் என அவர் போதித்தார். வழிபாடுகள், சடங்குகள் போன்றவை மேலோட்டமாகப் பார்க்கப்பட்டன. கிர்த் கரோ - வேலை செய், நாம் ஜபோ – இறைவனின் பெயரைச் சொல்லி தியானம் செய், வந்த் சகோ - தர்மம் செய், போன்ற எளிய வார்த்தைகள் மூலம், நடைமுறை வாழ்வை ஒத்த செய்தியினை குருநானக் அவர்கள் போதித்தார்.
தர்ம சத்திரம்,சங்கத் மற்றும் பங்கத் போன்ற பல முக்கிய மரபுகள், கர்தார்பூரில் குருநானக் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து தோன்றியவையாகும். தர்மசாலா என்பது சமுதாயத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்தும் இடமாக இருந்தது. அந்த தர்மசாலா பிறகு குருத்வாராவாகப் பரிமாணம் அடைந்தது.சமுதாயத்தினர் அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து கீர்த்தனைகள் மற்றும் பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் சங்கத் எனப்படும். சங்கத் என்பது, ஒரு சமூக நிகழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது. சங்கத் என்பது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன், உயர்ந்தவர், தாழ்ந்தவர் மற்றும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் சேர்ந்து வழிபடும் முறையாகும். அதேபோன்று, பங்கத் என்பது, எந்தவித ஜாதி வேறுபாடு இல்லாமல் உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது என்பதாகும். இதை லங்கர் என்றும் அழைப்பார்கள், இது சேவை மனப்பான்மை மற்றும் தன்னார்வ சேவையை உள்ளடக்கியது. உலகம் முழுவதும் உள்ள சீக்கிய சமுதாயத்தினர் இதற்கு மிகவும் பிரபலமானவர்கள்.
கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டதன் மூலம், குருநானக் அவர்களின் போதனையான, மனித சமத்துவம், கருணை, மற்றும் கடவுள் ஒருவனே என்ற நம்பிக்கை ஆகியவற்றில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள, ஒரு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

Comments
Post a Comment