தோஹாவில் ஆப்கான் உள்விவகாரங்கள் பேச்சுவார்த்தை.
சுனில் கடாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.)
தோஹாவில், சமீபத்தில், தங்களுக்குள் தீவிரமான சண்டையில் ஈடுபட்டுவரும் எதிரிகளுக்கிடையே முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் என்று நம்புவதற்கு, இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் அரசியல்வாதிகள் மற்றும் தாலிபான் பிரதிநிதிகளுக்கு இடையே கத்தாரில் நடைபெற்ற இரண்டு நாள் சந்திப்பைத் தொடர்ந்து, 18 வருடங்களாக நடைபெற்று வரும் போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, ஆப்கானிஸ்தான் அமைதியை நோக்கி ஒருபடி முன்னேறியுள்ளது போல் தோன்றுகிறது.
தோஹா பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், நாட்டு மக்களின் கண்ணியத்தை மதிப்பது, அவர்களது வாழ்வு மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பது, உயிர்ச் சேதத்தை முற்றிலுமாகத் தடுப்பது ஆகியவற்றுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் தலைநகரில், ஜெர்மனியும், கத்தாரும் ஏற்பாடு செய்திருந்த, ஆப்கான் உள்விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையில், 70 அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், மகளிர், தாலிபான் பிரதிநிதிகள் ஆகியோர் சந்தித்துப் பேசினர். காபூல் அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட, தாலிபான் இதுவரை மறுத்து வந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் அஷ்ரப் கனி அவர்களின் அரசு முற்றிலுமாகத் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த அரசாங்கம் முறைகேடானது என்று தாலிபான் கூறி வருகிறது.
அதே நேரத்தில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், அதிக அரசியல் விளையாட்டும் அரங்கேறி வருவதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலுமாக வெளியேற அமெரிக்காவுக்கு மிகவும் அவசரம் என்று தெரிகிறது. இந்த பிராந்தியத்தில் தாலிபானின் கை ஓங்குவதால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு விரைந்து வெளியேற முற்பட்டுள்ளது. ஆப்கான் சமரசத்திற்காக, ஸல்மே காலிசாத் அவர்களை, தனது சிறப்புப் பிரதிநிதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள், போன வருடம் செப்டம்பர் மாதம் நியமித்தார். காலிசாத் அவர்கள் இதுவரை ஏழு சுற்று பேச்சு வார்த்தையை தாலிபான் பிரதிநிதிகளுடன் தோஹாவில் நடத்தியுள்ளார். அமெரிக்கத் துருப்புக்களைத் திரும்பப் பெறுவது, பயங்கரவாதத் தடுப்புக்கு உத்திரவாதம், ஆப்கான் உள்நாட்டுப் பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் போன்ற நான்கு முக்கிய விஷயங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைதிக்கான முக்கியக் கருவி, ஆப்கான் அரசிடம் உள்ளது என, காலிசாத் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையல்ல. ஆப்கான் பிரச்சனைக்கு முக்கியக் காரணம், பேச்சுவார்த்தைகளின் பின்புலத்தில் பாகிஸ்தான் நிழலாக இருப்பதுதான் என்று, ஆப்கானிஸ்தானின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் அம்ருல்லா சாலே, மிகச்சரியாகக் குறிப்பிட்டுள்ளார். அமைதிக்கான உறுதி ஆப்கான் அரசிடம் எப்போதும் இருந்துவந்த போதிலும், ஆப்கான் அமைதிக்கு பாகிஸ்தான் குந்தகம் விளைவித்து வந்துள்ளது என்று அவர் அண்மையில் குறிப்பிட்டார்.
அமெரிக்கா தனது துருப்புக்களை விலக்கிக் கொள்வது என்று முடிவெடுத்த ஒரு வருடத்திலேயே, தாலிபானுக்கு நிபந்தனைகளைப் போடுவதற்கான துணிவு வந்துவிட்டது என வல்லுனர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானின் பினாமியாக விளங்கும் தாலிபான், பேச்சுவார்த்தைகளின் போதே, பாகிஸ்தானின் செயலுத்திகளுக்கு ஆதாயம் தேட முற்பட்டுள்ளது. இன ரீதியாக, தாலிபான்கள் முற்றிலுமாகப் பஷ்டூன்கள் அல்ல. அவர்களது அணியில், பாகிஸ்தானியர்களும் அதிக அளவில் உள்ளனர் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை முற்றிலுமாக திரும்பப் பெறுவதற்கான வரைவுத் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தேதி இறுதி செய்யப்படலாம் என்று அமெரிக்கா கருதுகிறது.
அதே நேரத்தில், இந்த சந்திப்பில் முடிவான தீர்மானத்தின் ஒரு பிரிவில்,18 வருடங்களாக, பாதுகாப்புப் படைகள் மற்றும் நாட்டு மக்களுக்கு எதிராக தாலிபான் நடத்தி வந்த போர் ஒரு ' புனிதப் போர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கான் செனட் சபையில் இது எதிரொலித்தது. இதனை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, ஆப்கான் சபை தள்ளுபடி செய்துவிட்டது. 1989 ஆம் வருடம் சோவியத் படைகள் திரும்பப் பெற்றவுடனேயே, புனிதப் போர் முடிவடைந்து விட்டதாக, செனட் சபை கருதுகிறது. அதற்குப் பிறகு ஏற்பட்ட எந்த ஒரு போரும் புனிதப் போர் அல்ல. மொத்தத்தில், அமைதிக்கான வழியில் பல தடைகள் உள்ளன. இருப்பினும், தற்பொழுது ஏற்பட்டுள்ள சந்திப்பு என்பதே, இறுக்கமான சூழல் தளரத் தொடங்கி விட்டதற்கான அடையாளம் என்று கூறலாம். ஆப்கானிஸ்தானின் அமைதிக்கான பணியில் கணிசமான முன்னேற்றமாக இதனைக் கருதலாம்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள நேர்மறையான முடிவுகளை முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள் பாராட்டியுள்ளார். உள்நாட்டு ஆப்கான் பேச்சுவார்த்தை மூலம் தங்களது எதிர்காலத்தை ஆப்கானிஸ்தான் மக்கள் தாங்களே முடிவு செய்தால் மட்டுமே ஆப்கானிஸ்தானில் அமைதி சாத்தியமாகும் என்ற மக்களின் எண்ணங்களை அவர் பிரதிபலித்துக் கூறினார். ஒருங்கிணைந்த, அமைதியான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஆப்கானிஸ்தான், எஸ்சிஓ பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு அவசியம் என்று, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், சென்ற மாதம் நடைபெற்ற எஸ்சிஓ உச்சி மாநாட்டின்போது கூறினார். ஆப்கான் மக்களின் தலைமையிலும், கட்டுப்பாட்டிலும், ஆப்கான் நாட்டு மக்களால் அமைதி நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு, அந்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோதி அவர்கள் கூறினார்.
பல நாடுகள், கருத்தியல் ரீதியாகவும், செயலுத்தி ரீதியாகவும், ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுக்குள் வைக்க, அந்நாட்டை ஒரு விளையாட்டு மைதானமாக உபயோகித்து வருகின்றன என்பது ஒரு வருந்தத்தக்க விஷயம். ஆப்கானிலிருந்து அமெரிக்கா அவசரமாக வெளியேறினால்,அது பாகிஸ்தானின் இரண்டுபட்ட ஆட்டத்திற்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபானின் அடக்குமுறைக்கும் கிடைத்த வெகுமதியாக விளங்கும் என்றும், இந்தியா உள்ளிட்ட இப்பகுதியில் ஜிஹாத் போராட்டம் விரிவடைவதற்கு வழிவகுக்கும் என்றும், இந்தப் பிராந்தியத்தில் குறி வைக்கும் சீனாவின் நோக்கங்களுக்கு உதவிகரமாக விளங்கும் என்றும், ஆப்கான் பார்வையாளர்களில் ஒருபிரிவினர் கருதுகின்றனர்.

Comments
Post a Comment