சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றி.
(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இந்தியக் குடிமகனான குல்பூஷன் சுதிர் ஜாதவ், உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தனால் கைது செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இதனை எதிர்த்து, 2017 ஆம் ஆண்டு, மே மாதம், தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. அதில், தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கை 1963 இன் கீழ், பாகிஸ்தான் விதிகளை மீறியதாக இந்தியா குற்றம் சாட்டியது. அந்த உடன்படிக்கையின் 36 ஆவது பிரிவின்படி, குல்பூஷன் கைது செய்யப்பட்டதை பாகிஸ்தான் இந்தியாவுக்கு உடனடியாகத் தெரிவித்திருக்க வேண்டும், குல்பூஷன் ஜாதவுக்கு அவரது உரிமைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். அவரை இந்திய தூதரக அதிகாரிகள் அணுக வாய்ப்பையும் பாகிஸ்தான் வழங்கியிருக்க வேண்டும்.
சர்வதேச நீதிமன்றத்தில் இவற்றை மறுத்து, பல சட்ட ரீதியிலான வாதங்களை பாகிஸ்தான் முன்வைத்தது. இந்தியக் குடிமகனான குல்பூஷன் சுதிர் ஜாதவைக் கைது செய்து விசாரித்த விவகாரத்தில், தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கை 1963 இன் கீழ், பாகிஸ்தான் விதிகளை மீறியதைத் தாம் கண்டறிந்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கை 1963 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க, சர்வதேச நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு என, இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை வேறொரு தீர்ப்பாயத்துக்கோ அல்லது சமாதான கமிஷனுக்கோ திசை திருப்பு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம், தங்களை நேரடியாக அணுக இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ளது. உளவுபார்த்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட நபர்களைப் பொறுத்தவரை, தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கை செல்லுபடியாகாது என்று பாகிஸ்தான் முன்வைத்த வாதத்தை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது. குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட விஷயத்தை பாகிஸ்தான் மூன்று வாரங்களுக்கு இந்தியாவுக்குத் தெரிவிக்காமலிருந்ததும், குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் அணுக வாய்ப்பே அளிக்காமல் இருந்ததும் வியன்னா உடன்படிக்கை விதி மீறல் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உடன்படிக்கையின் 36 ஆவது பிரிவை, இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பல விஷயங்களைப் பொறுத்து, நிபந்தனைகளுடன் ஏற்க பாகிஸ்தான் செய்த முயற்சியை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது.
இவ்வாறான வியன்னா உடன்படிக்கை விதி மீறல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பாகிஸ்தான் ஆராய வேண்டும் என்று, தனது தீர்ப்பின் முக்கிய ஆறாவது பிரிவில் சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வியன்னா உடன்படிக்கையின்படி ஜாதவின் உரிமைகளை நிலைநாட்டாததும், அவரை இந்திய தூதரக அதிகாரிகள் அணுக வாய்ப்பளிக்காததும், தொடர்ந்த, சர்வதேச குற்றச் செயல்களாகக் கருதிய சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தான் அந்த இரு கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்வதே இந்த வழக்கின் சரியான தீர்வாக அமையும் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனை பாகிஸ்தான் நிபந்தனைகள் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதியை நிலைநாட்ட, தேவைப்பட்டால் தகுந்த சட்டங்களை இயற்றவும் பாகிஸ்தான் தயங்கக் கூடாது என்றும் சர்வதேச நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது. அதுவரை, ஜாதவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தி வைப்பது தொடர வேண்டும் என, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய, அதையே முக்கியமான, இன்றியமையாத நிபந்தனையாக பாகிஸ்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், உண்மைத் தரவுகளை நன்கு ஆராய்ந்தபின் இந்தத் தீர்ப்பை வழங்கியதற்காக, சர்வதேச நீதிமன்றத்தைப் பாராட்டினார். குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் எனத் தாம் நம்புவதாகவும்,ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நலனையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய, தமது அரசு உழைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றம் நேற்று வழங்கிய இந்தத் தீர்ப்பானது, பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. சர்வதேச நீதிமன்றத்தின் 59 ஆவது ஷரத்தின்படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நாடுகள், இத்தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும். தனது குடிமக்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய, சட்ட திட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாடுகளுக்கிடையிலான சச்சரவுகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா வைத்துள்ள நிலையான நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. சட்ட நியதிகள் உள்ளிட்ட பல்நிலை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கூட்டுறவை சோதிக்கும் லிட்மஸ் பரிசோதனையாக, இத்தீர்ப்பின் அமலாக்கம் விளங்கும்.
ஐ.நா. சாசனத்தின் 13.1 பிரிவின்படி, சர்வதேச சட்டத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கும் அவற்றின் நெறிப்படுத்தலுக்கும் 1947 ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்திய நிலைப்பாட்டை சிறப்பாக எடுத்துரைக்கும் விதமாக, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பின் வாயிலாக, தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கையின் முக்கியத்துவம், குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments
Post a Comment