நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்
பத்திரிக்கையாளர் வி மோகன் ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி
புது தில்லி சர்வதேச நடுவர் மன்றத்தை அமைக்கும் வகையில் புது தில்லி சர்வதேச நடுவர் மன்ற சட்ட மசோதா 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. புதன் கிழமையன்று மக்களவையில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தேசிய, சர்வதேச சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தலைசிறந்த நடுவர் மன்றமாக புதுதில்லி மையம் அமைக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.
பாகிஸ்தான் நாட்டிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 200% அளவுக்கு சுங்கத் தீர்வை விதிக்கப்படும் என இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னெடுத்த தீர்மானத்தின் படி, கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி முதலாக இஸ்லாமாபாத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 200% சுங்க வரி விதிக்கப்படும்.
விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த நிதிநிலை அறிக்கையின் மூலம் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
2019-20 நிதிநிலை அறிக்கையின் படி, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் நிதிப்பற்றாக்குறையின் அளவு 3.3 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்கும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார் நிதியமைச்சர்.
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் 43% அளவிற்குக் குறைந்துள்ளதாகவும் தீவிரவாத ஆள் சேர்க்கும் நிகழ்வுகளும் குறைந்துள்ளதாகவும் மத்திய உள் துறை இணையமைச்சர் திரு கிஷன் ரெட்டி மக்களவையில் அறிவித்தார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து வரும் ஊடுறுவல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமையன்று மாநிலங்களவையில் பேசிய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ககன்யான் திட்டம் வருகின்ற 2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்று கூறினார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கிரையோஜனிக் இன்ஞின் வடிவமைத்தலும் பொறியாளர்களைப் பயிற்றுவித்தலும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ககன்யான் தேசிய ஆலோசனைக் குழு நிறுவப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக அமைச்சர் மாநிலங்களையில் அறிவித்தார்.
வங்கிகளில் புதுக்கணக்கு துவங்கவும் அலைபேசிகள் வாங்கவும் தேவைப்பட்டால் ஆதார் எண்களை உபயோகிக்கும் வகையில் புதிய சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசுகையில் தகவல்கள் பாதுகாப்பு குறித்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என உறுதியளித்தார். இந்திய நாடாளுமன்றம் அனைவருக்குமான வளர்ச்சி, சீர்திருத்தம், அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதிசெய்யத் தொடர்ந்து பாடுபடும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
ஆதார் எண் தகவல்களைத் தவறுதலாகப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கர்நாடக அரசியலில் மாறி வரும் நிலைமை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சலும் குழப்பமும் நிலவின. ஆனால் கர்நாடக மாநில நிகழ்வுகளுக்கு மத்திய அரசு எந்த வகையிலும் பொறுப்பாகாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

Comments
Post a Comment