மியன்மாருடனான உறவுகளை வலுவாக்கும் இந்தியா.

(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

மியன்மார் குடியரசு நாட்டின் அதிபர் யூ வின் மிண்ட் அவர்கள், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாடு மற்றும் அண்டைநாடுகளுக்கு முதலிடம் ஆகிய அயல்நாட்டுக் கொள்கைகளுக்கு முக்கிய அச்சாரமாக மியன்மார் விளங்குகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விரிவான பொருளாதார மற்றும் செயலுத்தி ரீதியிலான பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள விழையும் இந்தியாவுக்கு, கம்போடியா, லாவோ பிடிஆர், மியன்மார், வியட்நாம் திட்டத்தின் கீழுள்ள நாடுகளை நெருங்க, மியன்மார் முக்கியப் பங்காற்றுகிறது.

பாரம்பரிய வரவேற்பினைத் தொடர்ந்து, மியன்மார் அதிபர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுடனான பிரதிநிதிகள் நிலையிலான சந்திப்பில், இருதலைவர்களும் இருதரப்பு, பிராந்திய, உலக விஷயங்களில் பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர்.

Comments

Popular posts from this blog

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.

தேவையற்ற  விஷயங்களில் மூழ்கியுள்ள பாகிஸ்தான்.

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்