இந்தோ –பசிஃபிக் பிராந்தியத்தில் புதிய வாய்ப்புக்களை வழங்கும் நீலப் புள்ளி முன்னெடுப்பு.
(தெற்காசிய மற்றும் கிழக்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர், டாக்டர் ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, அவருக்கும், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும் இடையே நடந்த கலந்தாலோசனைகளில் இடம் பெற்ற முக்கிய அம்சம், நீலப் புள்ளி வலையம் ஆகும்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இருதலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், வளர்ந்து வரும் குறைந்த வருமானுமுள்ள நாடுகள், கடன்பிடியில் சிக்குவதைத் தடுக்க, பொறுப்பான, வெளிப்படையான, நீடித்த நிதி வழிமுறைகளை உறுதிப்படுத்துவது கடன் வாங்குவோருக்கும், அளிப்போருக்கும் பலனளிக்கும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் உணர்ந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நீலப் புள்ளி வலையத்தில் இரு தலைவர்களும் தங்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர். நீலப் புள்ளி வலையம் என்பது, அரசுகள், தனியார்துறை, பொதுமக்கள் என, பலதரப்பட்ட நிலையிலான பங்குதாரர்களின் முன்னெடுப்பாகும். இதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த உலக உள்கட்டமைப்பு வசதிகளை இணைந்து வழங்குவது பங்குதாரர்களின் குறிக்கோளாகும். இந்த நீலப் புள்ளி வலையத்தில் இணைவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருகுறது.
வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக, இந்தோ – பசிஃபிக் பிரந்தியத்தில், அயல்நாட்டு நிதியுதவியுடன் உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களை அமல்படுத்தும்போது, சர்வதேச விதிகள் அனுசரிக்கப்படுவதை உறுதி செய்வது நீலப் புள்ளி வலையத்தின் நோக்கமாகும். இந்தோ – பசிஃபிக் பிரந்தியத்தில், குறிப்பாக, ஆசிய நாடுகளில், கடன் வாங்கிய நாடுகள் அவதிப்படுவது குறித்து, இந்தியாவும், அமெரிக்காவும் கவலை கொண்டுள்ளன. 2013 ஆம் ஆண்டில் சீனா துவக்கிய ஒரு வலையம், ஒரு சாலை முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ், இலங்கை, மாலத்தீவுகள், மலேசியா போன்ற நாடுகள், சீனாவுக்குக் கடனைத் திருப்பித் தருவதில் சவால்களை சந்தித்துள்ளன.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாங்காக்கில் நடைபெற்ற இந்தோ-பசிஃபிக் வர்த்தக மன்றத்தில், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் நீலப் புள்ளி வலையம் துவக்கப்பட்டது. சிறிய, வளர்ச்சி குன்றிய நாடுகளில், உள்கட்டமைப்பில் நீடித்த முதலீடுகள், வெளிப்படைத்தன்மையின்மை, கடன் வலையில் சிக்குதல் போன்ற சவால்களை எதிர்கொள்வது நீலப் புள்ளி வலையத்தின் நோக்கமாக இருந்தது. பொதுப்படையில், பாரபட்சமின்றி, கடன் அளிப்போரைத் தரம் பிரித்து, கடன் வாங்கும் நாடுகளுக்கு, சரியான தகவல்கள் அடிப்படையில் தீர்மானங்களை எட்ட உதவுவது, நீலப் புள்ளி வலையத்தின் சிறப்பம்சமாகும்.
சீனாவின் வலையம் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டத்திற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள எதிர்வினையாகப் பார்க்கப்படும் நீலப் புள்ளி வலையத்திற்கு, ஆஸ்திரேலிய நிதியுதவி நிறுவனம், ஜப்பான் சர்வதேசக் கூட்டுறவு நிறுவனம், அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனம் ஆகியவை நிதியளிக்கும். இதன் கீழ், இந்தோ – பசிஃபிக் பிராந்தியத்தில் தனியார்துறை நிதி நிறுவனங்களை உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதை ஒருங்கிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதுவரை, 5000 கோடி டாலர் அளவில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. தனியார்துறை முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வசதி பெறும் நாடுகள் ஆகிய இருதரப்புக்குமே சாதகமான சூழலை, நீலப்புள்ளி வலையத்தின் தர நிர்ணயம் உருவாக்கித் தரும் என்பது சிறப்பு.
நீலப் புள்ளி வலையம் இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளதால், அது எவ்வாறு செயல்படப் போகிறது என்பது வரும் சில மாதங்களில் தெரிய வரும். விரிவான, அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொள்ளக் கூடிய, பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதித் திட்டம் என்று அறுதியிட்டுக் கூறுவது சவாலான விஷயமாகும். எனினும், கடன் பெறும் நாடுகள், அயல்நாட்டுக் கடனுதவியில் இருக்கும் ஆபத்துக்கள் மற்றும் வாய்ப்புக்கள் ஆகியவற்றை நன்கு ஆராந்து முடிவெடுக்க, நீலப் புள்ளி வலையத்தின் சான்றிதழ் வழிமுறைகள் உதவும் என்பது தெளிவு.
வளர்ந்து வரும் நாடுகள், குறிப்பாக, ஆசிய நாடுகள், உள்கட்டமைப்பு வசதிகளில் பெருமளவில் பற்றாக்குறையை சந்திக்கின்றன. இதனைப் பூர்த்தி செய்ய, குறைந்தபட்சம், 1.7 லட்சம் கோடி டாலர் அளவிற்கு முதலீடுகள் தேவையென, ஆசிய வளர்ச்சி வங்கி கூறுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, நீலப் புள்ளி வலையம், ஒரு நேர்மறையான முன்னெடுப்பாகும். தனது உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களுக்கு, பொது, தனியார் நிறுவனக் கூட்டாளித்துவம் என்ற முதலீட்டுத் திட்டத்தை இந்தியா பரிசோதித்து வந்துள்ளது. இந்நிலையில், தனியாருக்கும், பொதுத்துறைக்குமிடையே சமன் செய்யப்பட்ட, பொறுப்பான முதலீட்டுத் திட்டம், நீலப்புள்ளி மையத்தின் ஆதரவுடன் முன்வைக்கப்படுவது, இந்தியாவின் உள்கட்டமைப்புப் பற்றாக்குறையைப் போக்க அருமையான வாய்ப்பாக அமையும் என்றால் அது மிகையல்ல.

Comments
Post a Comment