நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்



வி. மோஹன் ராவ், பத்திரிக்கையாளர்

தமிழில், ஸ்ரீப்ரியா சம்பத்குமார்

இந்த வாரம், கொரோனா தொற்றின் அச்சம் உட்பட பல விவகாரங்கள், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பரபரப்பில் வைத்திருந்தது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், ஐக்கிய அரப் அமீரகத்தில் உள்ள எட்டு இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவித்தார். குவைத்தில் அவ்வாறு யாரும் இல்லை. ஈரானில், சுமார் 6000 இந்திய குடிமக்கள் உள்ளனர். இதில், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மற்றும் மகாராஷ்டிராவைச் சார்ந்த சுமார் 1100 யாத்ரிகர்கள், சுமார் 300 மாணவர்கள், குறிப்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள், கேரளா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மீனவர்கள் மற்றும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் ஆன்மீக படிப்புகளுக்காக ஈரானில் தங்கியுள்ளவர்கள் ஆகியோர் அடங்குவர். ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு மீட்டு வர, புது தில்லி பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் கூறினார். பரிசோதனை மற்றும் மாதிரி ஆய்வு வசதிகளைச் செய்ய, 6 இந்திய சுகாதார அதிகாரிகளின் குழு ஈரானுக்கு அனுப்பப்பட்டது. ஈரானில் உள்ள யாத்ரிகர்கள், மாணவர்கள் மற்றும் பிற இந்தியர்கள் என சுமார் 1706 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. மார்ச் 16 ஆம் தேதியின் நிலவரப்படி, 205 யாத்ரிகர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 389 இந்தியர்கள் நான்கு குழுக்களாக, இந்திய விமானப் படை மற்றும் ஈரானியன் ஏர்லைன்சின் சிறப்பு விமானக்கள் மூலம் அங்கிருந்து அழைத்து வரப்பட்டனர். ஈரானில் இருக்கும் மற்ற இந்தியர்களையும் பரிசோதனைக்குப் பிறகு இந்தியா அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், 2020 பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி, மத்திய அரசாங்கம், முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பிற அவசரகால மருத்துவ உபகரணங்கள் உட்பட, சுமார் 15 டன் மருத்துவ உதவியை சீனாவுக்கு அளித்ததாக அமைச்சர் கூறினார். இந்திய மக்களுக்கு சீன மக்கள் மீதுள்ள நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் சான்றாக இந்த உதவி செய்யகப்பட்டது. இரு நாடுகளும் இவ்வாண்டு, ராஜீய உறவுகள் துவங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்தை கொண்டாடி வருகின்றன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் தலைமையில் உயர்மட்ட அமைச்சர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்தியாவின் கோவிட் தொற்று குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும், இதில் இந்தியாவீன் தயார் நிலையைப் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் அவர்களும் இந்த அமைச்சர் குழுவில் பங்கு வகிக்கிறார். .இந்த அமைச்சகம் பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி, சீன அதிபர் ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதி, இந்திய அரசாங்கமும் மக்களும், சீன மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் தேவையான உதவிகளை அளிக்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளது என்பதையும் தெரியப்படுத்தினார் என திரு. முரளீதரன் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் பற்றிய உண்மையான நிலவரங்களைப் பற்றி புது தில்லி உலக நாடுகளிடம் கூறியுள்ளது என்றும், 2019 ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்த சட்டத்தின் பகிரப்பட்டுள்ள நோக்கங்களையும் இலக்குகளையும் பற்றி எடுத்தறைத்துள்ளது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், இணை அமைச்சர் வி.முரளீதரன் இவ்வாறு கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், அவர், டைமண்ட் பிரின்சஸ் க்ரூஸ் கப்பலில் 132 க்ரூ பணியாளர்கள் உட்பட 138 இந்தியர்கள் இருந்தனர் என்று கூறியுள்ளார். இவர்களில் 2020 பிப்ரவரி 19-க்குள், 119 இந்தியர்கள், ஒரு சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இந்தியாவிற்கு வந்த பின்னர், ஹரியாணா மாநிலத்தில் உள்ள மனேசரின் இந்திய ராணுவ தளத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

வுஹானிலிருந்தும் சினாவின் ஹூபே பிராந்தியத்தின் மற்ற நகரங்களிலிருந்தும் மாணவர்கள் உட்பட 766 நபர்களை இந்தியாவிற்கு அழைத்து வர, ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 26 ஆகிய தேதிகளில் மூன்று சிறப்பு விமானங்களை புது தில்லி ஏற்பாடு செய்தது என்று அமைச்சர் கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக ஹூபே பிராந்தியம் முழுதும் முடங்கப்படவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. நாடு திரும்ப விரும்பும் நம் அண்டை நாட்டு குடிமக்களை அழைத்து வரவும் அரசாங்கம் தயாராக உள்ளது என திரு. முரளீதரன் கூறினார். இதுவரை நமது அரசாங்கம் 723 இந்தியர்களையும் 43 வெளிநாட்டவர்களையும் மீட்டு வந்துள்ளது. வெளிநாட்டவர்களில், வங்கதேசத்தைச் சேர்ந்த 23 நபர்கள், மாலத்தீவுகளிலிருந்து 9 பேர், மியான்மாரிலிருந்து இருவர், தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஒருவர், மடகாஸ்கரிலிருந்து ஒருவர் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஒருவர் ஆகியோர் அடங்குவர். கூடுதலாக, இந்திய குடிமக்கள் சிலரின் வாழ்க்கைத் துணையாக, குழந்தைகளாக இருந்த ஆறு சீனக் குடிமக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 2020, பிப்ரவரி 18 அன்று ஒரு பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.